Header Ads



மைத்திரிக்கு வந்த ஆசையினால், அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட வாய்ப்பு

தனது பதவிக்காலம் எப்போது சரியாக ஆரம்பிக்கிறது என்பது பற்றி இந்த வாரம் உயர்நீதிமன்றத்திடம் வினவவுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைக்கு கொண்டுவந்த தினமான 2015 மே 15 ஆம் திகதியே ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிப்பதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தனது பதவிக்காலம் 2020 இல் முடிவடைவதாக கருதும் ஜனாதிபதி அதனை விளக்கி கூறுமாறே உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்கவுள்ளார்.

ஜோதிட ஆலோசனைகளின்படி வரும் 11 ஆம் திகதி இதற்கான கடிதத்தை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பவுள்ளார் ஜனாதிபதி.

ஏற்கனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் இவ்வருடம் முடிவடைவதாக உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் ஜனாதிபதி மீண்டும் இவ்வாறு விளக்கம் கோரவுள்ளமை அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

  1. This Dog relese that terror monk Gnasara.

    ReplyDelete
  2. தேன்கூடு பறிக்கும் தொழில்செய்பவன் அதன் இனிப்பை அனுபவித்தான்,அவன் தன்னுடையதொழிலை விட்டு ஒருபோதும் ஒதுங்கமாட்டான். சட்டமும் ஒழுங்கும் அவனுக்கு பொருத்தமில்லை. செத்துப்போனாலும் பரவாயில்லை ஒரு நாளைக்காவது மேலதிகமாகதேன் கூட்டைப் பறிக்கும் ஆவல், இறுதியில் தேன்கூட்டுக்கும் தேனீக்கும் அவனால் அழிவுதான் மிஞ்சும்.

    ReplyDelete
  3. இவனை புரிந்து கொண்ட கனேடிய பிரதமர் இவனை பற்றி அவர் சொன்னது மைத்திரிபால சிறிசேன கனேடிய அரச தலைவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது............................ ராஜதந்திர நடவடிக்கைகளில் காட்டிய அனுபவமற்ற தன்மை ஆகியனவே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.