Header Ads



மைத்திரி மீது, மஹிந்த குற்றச்சாட்டு

பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காப்பாற்றினார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றியிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான கோப்குழு அறிக்கை வெளியிடப்படவிருந்த நிலையில் தலைவர்களை காப்பாற்றும் நோக்கில் அன்றைய தினம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையினால் பல்வேறு விடயங்கள் மூடிமறைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோப்குழு அறிக்கை வெளியிடப்படவிருந்த நிலையில் ஜனாதிபதி, நாடாளுமன்றைக் கலைத்து குற்றவாளிகளை பாதுகாத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடியுடன் யார் தொடர்புபட்டிருக்கின்றார்கள் யார் உண்மையில் குற்றவாளிகள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவிருந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. பழைய கசிப்புக் கடை முதலாளி புதிய கசிப்புக்கடை முதலாளியைக் குறைகூறுகிறார். இரு கசிப்புக் கடை வியாபாரிகளும் தான் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டிருப்பதை அவரவர் மறந்து ஒருவரையொருவர் குறைகூறுவது இந்த நாட்டு மக்கள் செய்த பாவங்களோ தெரியாது.

    ReplyDelete
  2. And You????????????????????????????????????????????????????????

    ReplyDelete

Powered by Blogger.