Header Ads



ஜம்இய்யத்துல் உலமாவின் கடித, தலைப்பில் போலிக் கடிதமா..?

அஷ்ஷெய்க் எம்.எம். அஹமத் முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஸ்ஸலாமு அலைக்கும். 

உலமா சபையின் கடித தலைப்பில் உலா வரும் ஆங்கில மொழியிலான கடிதம் தொடர்பாக

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் கடந்த 18.07.2019 திகதியிடப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக  தமிழ் மொழி மூலமான கடிதம் ஒன்று எனக்குக் கிடைக்கப்பெற்றது.

குறித்த விடயம்  தொடர்பாக எனக்கு அனுப்பப்பட்டதாக ஆங்கில கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருவதை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.  

உங்கள் அலுவலகத்தினால் உங்கள் கையொப்பத்தோடு  எனக்கு அனுப்பப்படாத அந்த ஆங்கில கடிதம் உங்கள் அலுவலக கடித தலைப்பில் இருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்நிலையில் உங்கள் அலுவலகம் தமிழ் மொழியில் மட்டுமே எனக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ஆங்கில மொழியில் ஒரு கடிதம் தயாரிக்கப்படவில்லையென்றும் அறிய முடிகிறது. 

சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் எனக்கு முகவரியிடப்பட்ட  இந்த ஆங்கில மொழியிலான கடிதம் உங்களால் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக தயாரிக்கப் படவில்லையானால், உங்கள் அலுவலக கடிதத் தலைப்பை போலியாக, மோசடியாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் உலாவ விட்டவர் யார் என்பதை தேடிப்பார்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. 

ஜம்இய்யத்துல் உலமா போன்ற பொறுப்பு வாய்ந்த அமைப்பின் கடித தலைப்பைப் பயன்படுத்தி யாராவது போலியாக இந்த கடிதத்தை தயாரித்திருந்தால் அதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

இவ்வண்ணம்

முஜீபுர் றஹ்மான்
பாராளுமன்ற உறுப்பினர்
கொழும்பு மாவட்டம்.

No comments

Powered by Blogger.