Header Ads



பெயர் தொடர்பில் இணக்கம், வேட்பாளர் தொடர்பில் முரண்பாடு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் புதிய கூட்டணிக்கு ' ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன) ' என்ற பெயருக்கு இரு தரப்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

அத்துடன் கூட்டணிக்கான பெயர் பரிந்துரைக்கப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இரு தரப்பிலும் தொடர்ந்தும் சர்ச்சையே நிலவுகின்றது. இவ்விடயத்தில் இறுதி வரையில் தீர்வொன்று எட்டப்படாவிட்டால் எதிர்வரும் தேர்தல்களில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிடும். 

இரு தரப்பிலிருந்தும் இரு ஜனாதிபதி வேட்பாளர்கள் நியமிக்கப்படுவதோடு, பிரதமர் பதவிக்கும் இருவர் பரிந்துரைக்கப்படுவார்கள். 

ஆனால், அவ்வாறு நாம் தனித்து போட்டியிட்டால் இரு தரப்புமே தோல்வியடையும் என்பது உறுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.