July 06, 2019

முஸ்லிம்கள் என்னை திட்டுகிறார்கள் - மனோ

- Mano Ganesan -

சவுதிக்கு உள்ளே நடைபெறும் மாற்றத்தை சரி என்றோ, பிழை என்றோ, நான் சொல்ல வரவில்லை. அது அவர்கள் நாட்டு உள்விவகாரம். 

ஆனால், மிகவும் கடுமையான சவுதி அரேபிய அமைப்பில் இன்று மாற்றம் நிகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். "மாற்றம்" என்பதை தவிர இப்பூமியில் எல்லாமே மாறியே தீரும் என்ற மார்க்ஸின் கூற்றை எடுத்து கூறுகிறேன். 

இதையிட்டு எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை. என் முகநூலை, அனைவருடனும் நேரடியாக தொடர்பாட நானேதான் நடத்துகிறேன். "மண்டபத்தில் எவரும் எழுதிக்கொடுத்த கவிதையை அரச சபையில் வந்து வாசிக்கும் தருமி அல்ல, நான்" ஹாஹா... 

நான் சொல்ல வருவதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே! தொட்டதற்கெல்லாம் சச்சரவு செய்ய வராதீர்கள். இதுவெல்லாம் இம்மியும் என்னை அசைக்காது. 

அன்று சவுதி முகவர்களால் ஊடகர் கசூஸ்கி துருக்கியில் அநியாயமாக துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய போதும், "அதெப்படி சவுதியை குறை சொல்வது" என என்னை திட்டித்தீர்த்தீர்கள். 

முஸ்லிம்களை பற்றிய பல சந்தேக கேள்விகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவற்றை முஸ்லிம்களை அழிக்க பேனினவாதம் பயன்படுத்த திட்டமிடுகிறதால், உடன் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்று கடந்த கால கண்டி-திகண கலவரங்களின் போதே எடுத்து கூறினேன். அப்போதும் திட்டினீர்கள். 

இலங்கை முஸ்லிம்களின் மீதான "இலங்கையர்" அடையாளத்தை, "சஹ்ரான் சிந்தனை கும்பல்" அழிக்க முயல்கின்ற போது, உள்ளக சுய பரிசோதனை செய்யுங்கள் என சுட்டிக்காட்டினேன். அதற்கும் தீட்டுகிறீர்கள். 

நாமெல்லோரும் சீனாவையும், இந்தியாவையும், சவுதி அராபியாவையும் மறந்து விட்டு, இலங்கையராக வாழ முயல்வோம். இதுவே என் செய்தி. புரிந்துக்கொள்ளாதோர் தொடர்பில் மனம் வருந்துகிறேன்.

5 கருத்துரைகள்:

உங்கள் இரட்டை வேடம் எல்லாமே அனைவருக்கும் தெரிந்த கதை.உங்களுக்கு இப்போது பொழுது போக்கு Muslim களை வம்பிக்கிழுப்பதும்,சீண்டுவதும்.

உம்முடைய உண்மை குணத்தை அறியாத முட்டாள்களில்லை முஸ்லிம்கள். முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்ல முன் 200 வருடங்களாக நாகரீகம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் உம் தோட்டகாட்டு தமிழினத்தை திருத்தும். இந்த 21ம் நூ ற்றாண்டிலும் நாகரீகத்தை கற்றுக்கொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறாரகள். அவர்கள் அவர்களுடைய பிரச்சினைகளுக்காக பேச தான் உமக்கு வாக்களித்தார்களே தவிர முஸ்லிம்களின் மயிர் பிடுங்குவதற்காக அல்ல.

He is trying to get some Tamil voted by saying anti Muslim statements. Very cheap politics but very dangerous also

மனோ சார், சுப்பராக சொன்னீர்கள்.
மாற்றம் ஒன்றே நிரந்தரம்

ஆனால், இவைகள் தீவிரவாத சிந்தனைகள் கொண்ட அடிப்படைவாதிகளுக்கு புரியாது. அவர்களுக்கு ISIS கொள்கைகள் மட்டுமே வேதவாக்கு.

தோட்டக்காடு என்று விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.நாகரிகத்தில் நீ சிறந்தவனா நான் சிறந்தவனா என்பதை விட பன்மைத் தன்மை கொண்ட எமது சமூகத்தை எப்படி புரிந்து கொள்வது என முயற்சிப்பதே மேல்..

Post a comment