Header Ads



அமானிதத்தை சுமந்து, கண்ணீர் விட்டழுத ரிஸ்வி முப்தி

- AAM. Anzir -

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவராக, மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள றிஸ்வி முப்திக்கு முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

மிகவும் நெருக்கடிமிகு இந்தக் காலகட்டத்தில் ஜம்இய்யத்துல் உலமா கலைக்கப்பட வேண்டுமென இனவாத சக்திகள் முயற்சிக்கும் இந்த வேளையில், றிஸ்வி முப்தி தமது தலைமைப் பதவியைத் தொடருவதே சாலச்சிறந்தது ஆகும்.

அதேவேளை இலங்கை முஸ்லிம் சமுதாயமும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களும் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமை ரிஸ்வி முப்திக்கும்,  ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் தம்மால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதுடன், அதற்கு துணை நிற்கவும் வேண்டுமெனவும் இந்த சந்தர்பத்தில் உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்

தலைவராக நேற்று (13.07.2019) தெரிவு செய்யப்பட்டபின், ரிஸ்வி முப்தி கண்ணீர் விட்டு ஆற்றிய குட்டி உரை, அவர் இந்த சமுதாயத்தின் மீதும், தனது பொறுப்புகளை அவர் எவ்வளவு தூரம் அமானிதமாக கருதுகிறார் என்பதை பறைசாற்றுவதாக அமைகிறது.

அதேநேரம் உலமா சபையின் ஏனைய நிர்வாகிகள்  சகலருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், உங்கள் பணிகள் தொடரவும் இறைவனிடம் இருகரமேந்துகிறோம்.

என்றுமில்லாதவாறு இந்தமுறை உலமா சபையின் புதிய நிர்வாகத் தெரிவானது, முஸ்லிம் சமுதாயத்திடையே, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்து. இதுகுறித்த பல செய்திகள் கட்டுரைகளை jaffna muslim இணையம் பதிவேற்றியிருந்தது.

 முஸ்லிம் சமுதாயத்தினரின் நம்பகத்தன்மையை வென்றதும், அதிகளவு முஸ்லிம்களினால் விரும்பிப் பார்க்கப்படுகின்றதுமான www.jaffnamuslim.com இணையத்தின் கடமையாக இதனை கருதுகிறோம்.

மேலும் jaffna muslim இணையமானது ஜம்இய்யத்துல் உலமாவுடன் மிகுந்த நெருங்கிய உறவையும், மூத்த உலமாக்களின்  நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புபவதுடன், இலங்கை முஸ்லிம்களின் நம்பகத்தன்மையை வென்ற ஊடகம் என்ற வகையில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளையும் அவ்வப்போது பெற்றுக் கொள்கின்றமையும் கவனிக்கத்தக்கது.

5 comments:

  1. Rizvi Mufthi is the best choice, if anyone knows his pious no one will scold him. But some guys are blaming him for their benefits & not for the community. Please keep in mind, they are doing work for free

    ReplyDelete
  2. I know him in a different capacity...
    Such a gentleman..
    I curse these who criticize

    ReplyDelete
  3. He is the most suitable at the current situation...his memory is so great Masha Allah.May Almighty Allah guide him for ever and ever

    ReplyDelete
  4. MAY GOD ALLMIGHTY ALLAH HELP SAFEGUARD THE MUSLIM COMMUNITY FROM THESE DECEPTIVE AND HOODWINKING ISLAMIC RELIGIOUS LEADERSHIP IN SRI LANKA, Insha Allah.
    GOD ALLMIGHTY ALLAH SAYS IN THE HOLY QURAN: (Interpretation) "UNTILL YOU MAKE CHANGES YOURSELF TOWARDS TO THE EVILS WITHIN YOURSELF AND AROUND YOU, ALLAH WILL NOT BE ABLE TO HELP YOU", Insha Allah.
    So maybe, this is what God AllMighty Allah wishes for us in Sri Lanka for a few more years, Insha Allah. The ACJU and Rizvi Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -1015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.
    The ACJU and Rizvi Mufthi or the NEW EXCECUTIVE COMMITTEE of the ACJU should answer the questions raised by “The Muslim Voice” before talking about other matters. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk poder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. PLEASE KINDLY NOTE THAT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. بارك الله في عمرك
    يا رب اعيذه من كل شر وسوء

    ReplyDelete

Powered by Blogger.