Header Ads



"அல்லாஹ் தான் நம்மல பாதுகாக்கனும்..."


வேதனையிலும் வேதனை ஜனாஸா வீட்டில் .......

எந்த ஊராயினும் இந்த பழக்கம் அதிகமாக காணப்படுகின்றன ....

எந்த ஊரில் இருக்கிறதோ இல்லையோ நம்ம ஊரில் ரொம்ப ஓவர்.....

ஒருவர் மரணித்து இருப்பார்

அவரை குளிப்பாட்டுவதில் ஆரம்பிக்கும்

அவர் செய்ய மாட்டார் ஏய் அப்படி ஊத்து இப்படி ஊத்து சுர்மா போட்டீங்களா சூடம் போட்டீங்களா கருப்பட்டி போட்டீங்களா என சத்தம் போடுவார்

பக்கத்தில் வர மாட்டார்..

ஜனாஸா ஒரு நாள் புல்லா வீட்டில் தான் இருக்கும்

கப்ரில் வைத்த பின் சொல்வார்
முகத்தை காட்டுங்க பாக்கட்டும்
எப்பா உள்ளூர் தானே ஏய் நீங்களாம் அடுத்த வூட்டு காரன் தானே குழி வச்ச பொறவு தான் பாக்கனுமா????

அடுத்து குழியில் இறக்கும் போது ஏய் அப்படி வையுப்பா இப்படி வைய்யுப்பா தலையே மேக்கே பாத்து வைய்யுப்பா

என்னய்யா நியாயம் தானும் செய்ய மாட்டாங்க செய்றவங்களையும் செய்ய விட மாட்டாங்க சத்தம் கேட்கும்

எல்லாத்தையும் கொடுமை ஜனாஸா வை அடக்கம் செய்ய நூறு பேர் போனாலும்

20 பேர் தான் குழி கிட்ட நிப்பாங்க 80 பேர் கும்பல் கும்பலா கூட்ட கூட்டமா கதை அடிப்பாங்க

ரொம்ப வேதனையா இருக்கும்

ஏங்க எப்படிங்க மனசு வருது நம்ம வூட்ல மௌத் இருந்தா கதை அடிப்போமா???

ஒரு சிலர் சிரித்து சிரித்து பழக்கம் பேசுவார்கள்

என்னங்க நியாயம் மண்ணறை சென்றால் உஸ்மான் ரலி அவர்கள் தாடி நினையும் வரை அழுவார்களாம்

நம்ம அழ வேண்டாம்ங்க

கொறஞ்ச பட்சம் கப்ருக்கு போனா சிந்தனை வர வேண்டாமா ???

நம்மலும் இங்க தான் வரனும் என்று??

இன்னொரு அநியாயமும் நடக்கும் பாருங்க

ஜனாஸா கபர்ஸ்தான் போறதுக்கு முன்னாடி ஒரு குரூப் மையவாடிக்கு போய்டும் யார அடக்க போனாங்களோ தெரியல

வயசானவங்கனாலும் பரவாயில்லை சிறுசுகளும் அப்படி தான் இருக்கு :'( :'(

அல்லாஹ் தான் நம்மல பாதுகாக்கனும் .....

A K Jowfer Thaheen

No comments

Powered by Blogger.