Header Ads



"இந்தத் தகவலை எந்த‌ ஊட‌க‌மும், இதுவ‌ரை உங்களுக்கு அறிவித்திருக்க‌ மாட்டாது"


- Kalai Marx -

துனீசியாவின் த‌லைந‌க‌ர‌ம் துனீஸ் மேய‌ராக‌ ஒரு பெண் தெரிவு செய்ய‌ப் ப‌ட்டுள்ளார். அதிலும் அவ‌ர் ஒரு மித‌வாத‌ இஸ்லாமிய‌க் க‌ட்சியின் வேட்பாள‌ராக‌ போட்டியிட்டு வென்றுள்ளார்.

உல‌க‌ வ‌ங்கி அறிக்கையின் ப‌டி, ம‌த்திய‌ கிழ‌க்கு அர‌பு- முஸ்லிம் நாடுக‌ளின் பெண் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் எண்ணிக்கை 19% ஆக‌ அதிக‌ரித்துள்ள‌து. அல்ஜீரியா, துனீசியா, ஈராக், சூடான், ஜிபூத்தி, சோமாலியா ஆகிய‌ நாடுக‌ள் அதிக‌ள‌வு பெண் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை கொண்டுள்ள‌ன‌.

உங்க‌ளுக்கு இப்ப‌டியான‌ த‌க‌வ‌ல்க‌ளை, இதுவ‌ரை எந்த‌ ஊட‌க‌மும் அறிவித்திருக்க‌ மாட்டாது. முஸ்லிம் நாடுக‌ளைப் ப‌ற்றி எதிர்ம‌றையான‌ த‌க‌வ‌ல்க‌ளைப் ப‌ர‌ப்பி, இஸ்லாமிய‌ர் அல்லாத‌வ‌ர் ம‌ன‌த்தில் இன‌வாத‌த்தை தூண்டி விடுவ‌தில் அக்க‌றை காட்டும் ஊட‌க‌ங்க‌ள் இது போன்ற‌ த‌க‌வ‌ல்க‌ளை புற‌க்க‌ணிப்ப‌தில் ஆச்ச‌ரிய‌ம் எதுவும் இல்லை.

அவை தான் ப‌ண‌த்திற்காக‌ மான‌த்தை விற்றுப் பிழைக்கும் விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ள் என்று விட்டு விட‌லாம். ஆனால், ஒரு சில‌ "மெத்த‌ப் ப‌டித்த‌", "அறிவுஜீவிக‌ளும்" சிந்திக்க‌ ம‌றுப்ப‌தேன்? இன‌வாத‌ம் மூளையை ம‌ழுங்க‌டிக்கும்.

5 comments:

  1. இவ்வாறு இன்னும் எமது பெண்கள் கல்வியில் முன்னேர வேண்டும்.சிறு வயது திருமணங்கள் எமது சமூகத்தில் குறைவடைந்து விட்டன.இன்னும் அதை முற்றாக ஒழித்து பெண் பிள்ளைகளின் கல்விக்கு அதி முக்கியத்துவம் வழங்க அனவரும் முயற்ச்சி பன்னவேண்டும்

    ReplyDelete
  2. இலங்கையில் நிலைமை தலை கீழ், பெண்கள் படித்து அதிகமாக இருக்கிறதால் ஆண்கள் வீட்டில் இருந்து tv பாத்துட்டு time pass பண்றாங்க அவங்க வெள வெட்டி என்று வெளிய சுத்தி த்ரிராங்க...
    ol கூட இல்லாதவாங்க gratuateஐ முடிக்குற காலமிது.so நம்ம பசங்கல படிக்க வெகிற வழிய பாக்கணும்

    ReplyDelete
  3. அதிகமான பெண்களுக்கு (graduates)
    கற்ற துணைகளை தேடிக்கொள்ள முடியாத நிலை பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் ஏற்பட்டுள்ளது.இதனாலேயே இந்நிலை.
    Boys OL ஐ தாண்டாத நிலையும் அதிகமாக உள்ளது.

    ReplyDelete
  4. கல்வி என்ற பெயரில் ஒழுக்கம்,மார்க்கம் வீண் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.