Header Ads



தமிழ் கூட்டமைப்பு, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு   நாட்டு மக்களின் ஆதரவு ஒருபோதும் கிடைக்காது. சிங்கள மக்களின்  பெரும்பான்மை விருப்பு இனி  ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே  ரத்ன தேரர் தெரிவித்தார்.

மாவத்தகம பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு,  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது. சிங்கள பெரும்பான்மையினரின் கருத்துக்கள் பிற்போடப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர்  கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையினை   தோற்கடித்து இவ்விரு தரப்பினரும் இடைப்பட்ட காலத்தில் தமது சுய தேவைகளை  நிறைவேற்றிக் கொள்ள வுள்ளனர்.

பாராளுமன்ற நம்பிக்கையினை வெற்றிக் கொண்டுள்ள  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒருபோதும் இனி மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறாது என  அவர் இதன் போது தெரிவித்தார்.

5 comments:

  1. ஹீஹீ இவரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர். அதுவும் ரணிலின் ஐ.தே.க வழங்கியது. முதலில் நீர் பதிவியை துறவும்.

    ReplyDelete
  2. நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியுற்றிருக்குமானால் ஒரு தம்படி செலவும் இல்லாமல் பாராளுமன்ற சுகம் அனுபவித்த அத்துரலிய ரத்ன தேரர் மஹாத்தயா அவரகள் ஆச்சிரமத்திற்குத்தான் செல்ல வேண்டி வந்திருக்கும்.

    ReplyDelete
  3. ஹாஹாஹா Anush சில மாதங்களாக அவர் ரத்ன தேரர் தெய்வம் போல் உங்களுக்கும்,கிழக்கு தமிழர்களுக்கும் காட்சி தந்தாரே அப்போ அவரை கும்பிட்டு குடை பிடித்து ஆராத்தி எடுத்தீர்கல்.அந்த நேரத்தில் நாம் சொன்னோம்,தனி நாடு கேட்ட உங்களை கல்முனை வடக்கு எனும் நிலைக்கு கொண்டு வந்து பிறகு Muslim கலுடனும் பகைக்க வைத்து உங்களுக்கு ஆப்பு அடிக்க திட்டம் என.இப்போது அவர் தேர்தல் நெருங்க நெருங்க மஹிந்தவின் செல்லப் பிள்ளை என புரிகிரதா,அதனால் குடை பிடித்த உங்களுக்கு இனி அவர் கசக்கிரார் போலும் 😃😂😂

    ReplyDelete
  4. @Rizard, “எதிரிக்கு எதிரி நண்பன்” என்றவகையில் கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாததை ஒழித்து, அமைதியை ஏற்படுத்த, சிங்களவர்கள் (பிக்குகள்) ளோடு இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

    ReplyDelete
  5. Ajan உங்களுடன் அவர்கள் இணைவது மீண்டும் உங்களை முள்லிவாய்காலில் தந்ததை விட மிக பெறுமதியான ஆயுதமில்லா செருப்படி தருவதற்கு.

    ReplyDelete

Powered by Blogger.