Header Ads



வஹாபி - சலபிகளின் வியாபாரங்களை இனம்கண்டு, அவற்றை புறக்கணிக்க வேண்டும் - ஞானசார தேரர்

பிக்­கு­க­ளுக்கு புத்தர் வழங்­கிய பொறுப்பு..?

நாட்­டிற்கு அரசன் இல்­லா­த­போது அர­சனை உரு­வாக்­கி­ய­வர்கள் பிக்­கு­க­ளா­கிய நாம். அடுத்­தது நாம் இந்த நாடு பெளத்த மதத்தால் போசிக்­கப்­பட்­டுள்­ளது என்று நம்­பு­கிறோம். இந்த பூமி பெளத்த மதத்­திற்­காக அர­சர்­களால் பல சந்­தர்ப்­பங்­களில் பூஜை செய்­யப்­பட்­டது. அதனால் பெளத்த மதத்­திற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்­போது, சிங்­கள இனத்­திற்கு வர­லாற்று ரீதி­யாக இடம்­பெறும் அநீ­தி­க­ளுக்கு எதி­ராக பேசாமல் எம்மால் பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது.

எங்­கி­ருந்து இந்த வேலையை ஆரம்­பிப்­பீர்கள்..?

இந்தப் பிரச்­சி­னையை கலந்­தா­லோ­சனை செய்ய தேசிய மட்­டத்தில் ஆணைக்­குழு ஒன்று அமைக்­கப்­பட வேண்டும். அதனை மக்­க­ளுக்­காக திறக்க வேண்டும். முஸ்லிம், தமிழ், சிங்­கள சமூ­கத்­தி­லுள்ள பிரச்­சி­னைகள் அங்கு முறை­யி­டப்­பட வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையில் உள்ள இந்தப் பிரி­வி­னைக்கு கார­ணிகள் என்ன? அனை­வரும் வந்து அந்த ஆணைக்­கு­ழு­வுக்கு சாட்­சி­ய­ம­ளிக்க முடியும். இதனை செய்­யாமல் இருப்­பதால் மென்­மேலும் பிரி­வினை அதி­க­ரித்து, தேவை­யில்­லாத வகையில் மக்கள் பல முகாம்­க­ளாக பிரிவர்.

நீங்கள் சொல்லும் விடயம், சிங்­கள சமூ­கத்­திற்குள் மாத்­தி­ரமே நீங்கள் பேசு­கி­றீர்கள் இல்­லையா..? இவ்­வா­றா­ன­தொரு பிரச்­சி­னையை தீர்க்க வேண்­டு­மென்றால் தமிழ் , முஸ்லிம் ஆகிய சமூ­கங்­க­ளுடன் நல்­ல­தொரு கலந்­தா­லோ­ச­னையை ஆரம்­பிக்க வேண்­டிய தேவை இருக்­கி­றது தானே..?

இது நீங்கள் வெளிப்­ப­டை­யாக காணும் விடயம். உங்­க­ளுக்கு தெரி­யுமா..? நாம் எவ்­வ­ளவு முஸ்லிம் மக்­க­ளுடன் பேசு­கிறோம் என்று? எவ்­வ­ளவு தமிழ் மக்­க­ளுடன் பேசு­கின்றோம் என்று? நாம் கட்­டா­ய­மாக அவர்­க­ளு­ட­னான கலந்­தா­லோ­ச­னையை உள்­ளக ரீதியில் செய்து கொண்டு இருக்­கிறோம். ஆனால் நாம் அர­சியல் செய்­வ­தில்லை என்­பதால் அவர்­களின் பெயரை இவ்­வி­டத்தில் நாம் கூறு­வ­தில்லை.

வஹா­பி­ஸத்­திற்கு எதி­ரான சூபி முஸ்­லிம்கள் இந்த தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக எழுந்து வந்­தனர். காத்­தான்­குடி, பேரு­வளை, மாதம்பே, சிலாபம், காலி, வெலி­கம போன்ற பிர­தே­சங்­களில் சூபிக்கள் இந்த தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக பேச பயத்தில் வாயை மூடி இருக்­கின்­றனர். காரணம் வஹா­பிஸ அடிப்­ப­டை­வா­தத்­திற்கு அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் கட்­டுப்­பட்­டுள்­ளனர். நாம் அவ்­வாறு செய்­வ­தில்லை. நாம் அவ்­வா­றான மக்­களை அழிப்­ப­தில்லை. வெளிப்­ப­டுத்­தவும் மாட்டோம். ஆனால் நாம் இர­க­சி­ய­மாக மிகவும் சிறந்த முறையில் இந்த பிரச்­சி­னையை தீர்க்க கலந்­தா­லோ­ச­னை­களில் ஈடு­ப­டு­கிறோம்.

சிங்­கள சமூ­கத்­திற்கு, சிங்­கள தனித்­து­வத்­திற்கு நகர முடியும் என்றால் , தமிழர் தமது தனித்­து­வத்தை பாது­காக்க முடியும் என்றால், முஸ்லிம் சமூகம் அவர்­க­ளுக்கு உரிமை உள்ள அவர்­களின் தனித்­து­வத்தை நோக்கி நகர்­வதில் தவறு என்ன..?

நீங்கள் தேவை­யற்ற பைத்­தி­யக்­கார கதை ஒன்றை சொல்­கிறீர். இந்த நாடு யாரு­டை­யது? இந்த நாட்டின் வர­லாற்றை அமைத்­த­வர்கள் யார்? இந்த நாக­ரி­கத்தை கட்டி எழுப்­பி­ய­வர்கள் யார்? இந்தக் கதையை ஐரோப்­பா­வுக்கு சென்று கதைக்க முடி­யுமா? ஜப்­பானில் கதைக்க முடி­யுமா? இது என்ன கதை?
உலகில் எந்­த­வொரு நாட்­டிற்கும் “குடி­ம­க­னுக்கு உரிய” என்று சில உரி­மைகள் உள்­ளன. மேலும் நாட்டின் “தேசத்­திற்கு உரிய” உரி­மைகள் என்று இரண்டு வகை உள்­ளன. எமக்கு தவ­றிய இடம் இதுதான். இதில் குடி­மகன் யார் என்று புரிந்து கொள்­ள­வில்லை. வர­லாற்று புகழ்­மிக்க தேசிய இனம் யார் என்­பதை புரிந்து கொள்­ளவும் இல்லை. சிங்­க­ள­வனின் தனித்­து­வத்தை பாது­காக்­க­வில்லை என்றால் அதை சவூ­திக்கு சென்று செய்ய முடி­யுமா? மத்­திய கிழக்­கிற்கு சென்று செய்ய முடி­யுமா?

எமக்­கென்று ஒரு மொழி இருக்­கி­றது. எமக்­கென்று ஒரு கலா­சாரம் இருக்­கி­றது. எமக்­கென்று தனித்­துவம் ஒன்று இருக்­கி­றது. இன்று எமது எத்­தனை பேர் மத்­தி­ய­கி­ழக்கில் இருக்­கின்­றனர். அவர்கள் அங்கு இலங்கை கொலனி அமைக்கப் போவ­தில்லை. அங்­குள்ள சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்டு நடக்­கின்­றனர். பிறந்­தது இந்த நாட்டில் என்றால் ஏன் இரண்டு நாடு­களில் காலை வைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்? இந்த நாட்டின் சட்­டத்­திற்கு மதிப்­ப­ளிக்க வேண்­டுமே. இந்த நாட்டின் கலா­சா­ரத்­திற்கு நகர வேண்­டுமே.

தற்­பொ­ழுது நடை­பெ­று­வது இந்த எல்­லை­யற்ற சுதந்­தி­ரத்தை தவ­றாக பயன்­ப­டுத்­து­வதும், சட்­டத்தை சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தா­மை­யாகும். தலைக்­க­வசம் அணி­யாமல் செல்­லும்­போது முத­லா­வது நாளிலே தண்­டனை வழங்­கினால் அந்த சட்­டத்தை தொடர்ந்து பின்­பற்­றுவர். ஒரு தொல்­பொருள் உள்ள இடத்தை கைப்­பற்­றும்­போது சட்­டத்தை அமுல்­ப­டுத்­தினால் அனை­வரும் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்­டி­ருப்பர். தற்­பொ­ழுது அர­சி­யல்­வா­திகள் சட்­டத்தை அசைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். சட்­டத்தை சரி­யாக செய்ய விடு­வ­தில்லை. இவ்­வா­றான சூழலில் தான் தேவை­யற்ற மோதல்கள் உரு­வா­கின்­றன.

சிங்­களம் மற்றும் தமிழ் மக்­க­ளுக்­கி­டையில் வர­லாறு நெடு­கிலும் பிரி­வினை காணப்­பட்­டாலும் சிங்­களம் மற்றும் முஸ்­லிம்கள் மத்­தியில் அண்­மைக்­காலம் வரை நெருங்­கிய நட்பு காணப்­பட்­டது. இந்த நட்பு இவ்­வாறு தகர்த்­தெ­றி­யப்­பட இட­ம­ளிப்­பது அல்­லது அதற்கு யாரா­வது கார­ண­மாக இருப்­பது பெரிய தவறு இல்­லையா..?

சஹ்­ரான்கள் வெடித்­தது இன்று நேற்று என்­றாலும், இத­னு­டைய ஆரம்பம் எழு­ப­து­களில், எண்­ப­து­களில் இடம்­பெற்­றது. உல­க­ளா­விய ரீதியில் இதனை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இன்று மாத்­திரம் இல்லை, இஸ்­லாத்­து­டைய கதையைப் பார்த்தால், இஸ்லாம் தொடர்­பாக எழு­தப்­பட்­டுள்ள விட­யங்கள், விசே­ட­மாக மேற்கு ஐரோப்­பாவில், முஸ்­லிம்­க­ளாக இருந்து, இஸ்­லாத்தை பின்­பற்றி, அதனை உயர் கல்­வியில் கற்­ற­வர்கள் கூட இன்று அதனை விமர்­சனம் செய்­கின்­றனர். அவர்­க­ளு­டைய எழுத்­துக்­களை பார்க்­கும்­போது எந்­த­வொரு சமூ­கத்­திலும் முஸ்லிம் சமூகம் 2% ஐ விட அதி­க­ரிக்கும் பொழுது , 5% ஐ அதி­க­ரிக்கும் பொழுது 7% ஐ அதி­க­ரிக்கும் பொழுது, இவ்­வாறு 50% ஐ அதி­க­ரிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று கணக்குப் பார்த்­துள்­ளனர். அதற்கு உலகில் வேண்­டி­ய­ளவு சான்­றுகள் உள்­ளன. 10% ஐ அதி­க­ரிக்கும் பொழுது அவர்கள் தமது தீவி­ர­வா­தத்தை, பிரி­வி­னை­வா­தத்தைக் கொண்டு வரு­கின்­றனர். அது புதிய விடயம் இல்லை. உல­கி­லுள்ள ஏனைய நாடு­க­ளுக்கு நடந்த விடயம் அதுதான்.

தற்­பொ­ழுது இந்தப் பிரச்­சினை இங்­கி­லாந்தில் இல்­லையா..? அவுஸ்­தி­ரே­லி­யாவில் இல்­லையா..? அந்த அனைத்து நாடு­க­ளி­லுமே இந்தப் பிரச்­சி­னைக்கு முகம்­கொ­டுக்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. எந்­த­வொரு நிலை­யிலும் இவற்றைக் கவ­னிக்­காது எம்மால் செயற்­பட முடி­யாது.

இதற்கு தீர்வு, சிங்­கள மக்­களின் சனத்­தொகை அதி­க­ரிப்பில் கவனம் செலுத்­து­வது, சிங்­கள தாய்­மார்கள் அதி­க­மான பிள்­ளை­களை பெற வேண்டும் என்ற கருத்து மக்கள் மயப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அந்த கருத்­துடன் நீங்கள் உடன்­ப­டு­கி­றீரா..? அது தீர்வு என்று நினைக்­கி­றீரா..?

நாம் பிறப்புக் கட்­டுப்­பாடு பற்றிப் பேச வேண்­டி­யது முஸ்லிம் பிரச்­சினை கார­ண­மாக இல்லை. நாட்­டி­லுள்ள வளங்­களை நினைத்து. நாட்டில் நீர் வளம் குறைவு. இடம் குறைவு. வளி­மண்­ட­லத்­திற்கு ஒரு எல்லை இருக்­கி­றது. எமக்­குள்ள அனைத்து இயற்கை வளங்­களும் மட்­டு­ப்ப­டுத்­தப்­பட்­டவை.
ஒரு இனத்தை அதி­க­ரிக்கச் சொல்­லவும், இன்­னொரு இனத்தை அழிக்­கும்­படி எம்மால் சொல்ல முடி­யாது. அது நல்ல முறையும் இல்லை. இது எமக்கு மாத்­திரம் இல்லை, முழு உல­குக்கும் உள்ள பிரச்­சினை. அதனால் நாம் இயற்கை வளங்­களை கவ­னத்தில் கொண்டு இதற்­காக நாம் என்ன செய்ய முடியும் என்று உரை­யா­டலை ஆரம்­பிக்க வேண்டும்.

முஸ்லிம் வியா­பா­ரத்தைப் புறக்­க­ணிப்புச் செய்ய வேண்டும் என்ற கருத்து சிங்­கள சமூ­கத்தில் பர­வு­கி­றது. அந்த கருத்­துடன் உடன்­ப­டு­கி­றீரா..?
இந்த குண்டு வெடிப்பின் கார­ண­மாக அடிக்க வேண்­டிய இடங்­க­ளுக்கு இல்லை அடிக்­கப்­ப­டு­கி­றது. அப்­பாவி வியா­பா­ரிகள் பாதிக்­கப்­பட்டனர். பாதையில் வடை விற்கும் வியாபாரி பாதிக்கப்பட்டார். இது அநியாயம் ஆகும்.
நாம் வியாபாரத்தை புறக்கணிப்பு செய்வதென்றால் ஒட்டுமொத்த முஸ்லிம்களை புறக்கணிப்பு செய்ய கூடாது. நாம் வஹ்ஹாபி, சலபிகளின் வியாபாரம் எவை என்று இனம் காண வேண்டும். அவற்றை இனம் கண்டு புறக்கணிப்பு செய்து பாரம்பரிய சுதேச முஸ்லிம் மக்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

தற்பொழுது தனித்தனியாக நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. எம்மால் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால்தான் நான் கூறினேன் தேசிய வேலைத் திட்டம் இல்லை என்றால் எல்லாம் குழப்பமடைகின்றன. அவ்வாறு நடக்கும் பொழுது தேவை இல்லாத பாதையில் இது செல்லும்.

உங்களுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்தது சிறையில் அவர் உங்களைச் சந்தித்து நடந்த உரையாடலின் பிறகுதானே? எவ்வாறான உடன்பாடுக்கு இரு தரப்பினருக்கும் வர முடிந்தது?

ஒரு உடன்பாடும் இல்லை. ஜனாதிபதி என்னைச் சந்தித்த பொழுது நான் இஸ்லாம் பிரச்சினையை பற்றிய அதிகமான தகவல்களை சொன்னேன். நாம் நினைக்கும் இடத்தில் இல்லை இந்த பிரச்சினை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.

நான் நினைக்கிறேன் அவர் இந்த பிக்கு வெளியே வந்தால் இந்த பிரச்சினையை தீர்க்க ஏதாவது செய்வார் என்று சிந்தித்திருப்பார். அந்தப் பொறுப்பை சுமந்து தான் நான் செயற்படுகிறேன். அவ்வாறு இல்லாமல் எந்தவொரு நிபந்தனையும், எந்தவொரு அரசியலும் அவர் என்னுடன் பேசவில்லை.

நேர்­காணல்: ஷீ லால் செனெ­வி­ரத்ன தமிழில்: -சப்ராஸ் சம்சுதீன்

3 comments:

  1. இந்த காபிர் முனாபிக்குக்கு இந்த நாட்டில் எதுவேண்டுமானாலும்பேசலாம், எழுதலாம், சிங்கள இனத்தை முஸ்லிம், தமிழ் இனத்துக்கு எதிராக தூண்டிவிடலாம், இனங்களுக்கு இடையில் முறிவு ஏற்படுத்தும்செயல்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கலாம். சகவாழ்வும், நல்லிணக்கமும் இந்த காபிர் நாய்க்கு பொறுந்தாது. இந்த நாட்டின் சட்டம் எப்போது எல்லோருக்கும் ஒரே சட்டமாக இயங்கும்?

    ReplyDelete
  2. நாட்டுக்கு பொருளாதாரத்தில் மிகப் பெரும் பங்களிப்பும்,யுத்த நேரத்தில் Muslim நாடுகலினூடாக அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கி இந்த நாட்டுக்காக பாடுபட்ட Muslim ளின் மயிரை இன்னும் புடுங்கி கொண்டிருக்கிரீர்கல்.சஹ்ரான் எனும் மன நோயாளியும் அவனுடன் இனாந்து ஒரு 100 பேரும் செய்த பயங்கரவாதத்துக்காக.ஆனால் 30 வருட கொடூரத்தை மறந்து விட்டீர்கள்.ஆனால் கத்தி,வாள்கலுடன் ஆரம்பித்த ஆவா எனும் குழுவை அடக்க கூட முடியவில்லை.ஆனால் நேற்று குண்டுத் தாக்குதல் நடத்தியிருக்கிறது அந்த கும்பல்.எனவே நீங்கள் Muslim களின் மயிரை பிடுங்கும் போதே அந்த ஆவா கும்பல் ஆயுத கும்பலாக மாறப் போகிறது,அப்போது புரியும் உங்களுக்கு Muslim களின் அருமை.

    ReplyDelete
  3. Pls be patient.Allah will help us always.not to worry.Nabi (sal)period his family given trouble torture hate speech maximum they gave hard time.but
    In our country only very few monks group soughting.dontpanic brothers.We are Always success with patient

    ReplyDelete

Powered by Blogger.