Header Ads



மஹிந்தவிடமிருந்து மக்களை தூரமாக்கவே, ஞானசாரரை மைத்திரி விடுவித்தார்

ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரத்துக்கே ஞானசாரரை சிறையில் இருந்து ஞானசாரரை விடுதலை செய்திருக்கின்றார் என தேச விடுதலை கட்சியின் பிரதித் தலைவர் கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று -08- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் விரக்தியுற்றிருக்கும் நாட்டு மக்கள் தற்போது பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒன்றுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிங்கள பெளத்த மக்கள் மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து இணைந்து செயற்பட ஆரம்பித்திருக்கின்றனர். 

தேரர்களும் எம்முடனே இருக்கின்றனர். இதனை பிளவுபடுத்தி பெளத்தர்களை எம்மில் இருந்து தூரமாக்கவே தற்போது பொதுபலசேனா முயற்சிக்கின்றது. அதற்காகவே கண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கூட்டத்தில், சிங்கள இராஜ்ஜியம் ஒன்றை அமைக்க ஒன்றுபடுமாறு ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

2 comments:

  1. எல்லாமே நாடகம்

    ReplyDelete
  2. அப்போ ஏன் மஹிந்தவும்,பொதுஜன பெரமுன கட்சியும் ஜானசாராவுக்கு எதிராக பேசாமல் வாய் மூடிக் கொண்டிருப்பதும்,அவருக்கு எதிராக எந்த வித ஆகக் குறைந்தது கருத்துக்கள் கூட தெரிவிக்காமல் இருப்பது.

    ReplyDelete

Powered by Blogger.