Header Ads



"ஏகதமாய் பாயிஸ்" - மைத்திரிக்கு சொல்லிக்காட்டிய மகிந்த

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியாக இருக்க வேண்டும்.  
முன்னாள் பிரதி அமைச்சரான கெளரவ கே.ஏ பாயிஸ் அவர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் எட்டா கனியாகியது.
அது அவருக்கு அதிகாரம் இல்லாத காலப்பகுதி. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளராக மட்டும் இருக்கின்றார்.

அப்போது ஒருநாள் 
எமது புத்தளம் நகரின் ஹுதா பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் பார்மஸிக்கு வந்த ஒருவர் பல்வலி என்று மருந்து கேட்கின்றார்.

வைத்தியர் மருந்துக்காக வழங்கும் துண்டு(prescription) அவர் கொண்டுவரவில்லை என்றாலும் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மருந்து வழங்கப்பட்டது.

இவ்வாறு மருத்துவரின் துண்டு இல்லாமல் சாதாரண நோய்களுக்கு மருந்து வழங்கும் வழக்கம் நாட்டில் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றது.

மருந்தை கொடுத்து அடுத்த நிமிடம் சிலர் அதிரடியாக அந்த பார்மஸியை முற்றுகையிடுகின்றனர்.

துண்டு இல்லாமல் மருந்து வழங்கியது அவர் செய்த தேசத் துரோக குற்றம்போல் வந்தவர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.

அரசாங்கத்தின் கடும் தண்டனைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதுபோல் அவர்கள் பிதற்ற ஆரம்பிக்கின்றனர்.

செய்தி.... 
அதிகாரம் இல்லாத பாயிஸின் காதில் விழுகின்றது.

பதவி இல்லையே - அதிகாரம் இல்லையே என்று அவர் மூலையில் முடங்கி கிடக்கவோ, கண்மூடி கைகட்டி வெட்டியாக அதனை பார்த்துக்கொண்டிருக்கவோ இல்லை.

உடனடியாக மின்னல் வேகத்தில் அந்த இடத்திற்கு வந்தார் விடயத்தை தெளிவாக கேட்டறிந்த பின்னர் பரிசோதகர்களிடம் இது சாதாரணமான விடயம்தான் விட்டுவிடுங்கள் என்று நளினமாக சொல்லுகின்றார். 
அவர்கள் அடங்குவதாக இல்லை.

அவர்கள் அமைச்சின் கீழ் நேரடியாக கொழும்பில் இருந்து இயங்கும் பரிசோதகர்கள் என்பதால் கொழும்பில் இருந்து புத்தளம் வரை எத்தனையோ பார்மசிகள் இருக்கும்போது இங்கு வந்தது பாயிஸினால் ஜீரணிக்க முடியவில்லை.

துண்டு இல்லாமல் கொழும்பில்,நீர்கொழும்பில், சிலாபத்தில் இப்படி எல்லா இடங்களிலும் பரவலாக கொடுக்கும்போது நீங்கள் நேரே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் புத்தளம் நகருக்கு வந்து,

அதுவும் எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பார்மஸியை முற்றுகையிடுவது முற்றிலும் இனவாதமிக்க செயல் முஸ்லிம்கள் என்பதற்காகவே இதனை செயகிண்றீர்கள் என்று அவர்கள் மீது சீறிப்பாய்கின்றார்,

வந்தவர்கள் எவ்வளவு முயன்றும் பார்மஸிக்கு எதிராக பாயிஸை மீறி எதுவும் செய்ய முடியாமல் போனது.

பாயிஸை சுற்றி பலர் குவிகின்றனர் இவரது உரத்த குரலையும் அதிகார தோரணையையும் கண்டு அவர்கள் நடுங்கிப்போய் போலீசில் இவருக்கு எதிராக முறைப்பாடு செய்தனர்.

அப்போது இதற்கு பொறுப்பாக - சுகாதார அமைச்சராக இருந்தவர் கட்சியின் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள்.

விடயம் அறிந்த சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கொதித்துப்போனார். 
தனது அதிகாரத்தில் இருக்கும் ஒரு பரிசோதகர் குழுவை தடுக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு? என்ற வெறியில் 
இயல்பாகவே முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சியும், இனவாதமும் கொண்ட அவர்

தனது அமைச்சர் பதவியையும் - அதிகாரத்தையும் பயன்படுத்தி பாயிஸை பழிவாங்கவும்

"அரச உத்தியோகஸ்தரை வேலை நேரம் இடையூறு அல்லது அச்சுறுத்தல் விடுத்தார்"

என்ற குற்றச்சாட்டில் கைது செய்யவும், சட்டத்தின் முன் நிறுத்தவும் அவர் எடுத்த முயற்சிகள் யாவும் பாயிஸின் தன்னம்பிக்கையாலும், எதிர்த்து நிற்கும் சக்தியாலும் வெறும் செல்லாக் காசாகியது.

பாயிஸை பழிவாங்க கங்கணம் கட்டி இருந்த மைத்திரி அவர்கள்

ஒரு முறை கட்சி அமைப்பாளர்களுக்கான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வம்புக்கு இழுத்தார், கூட்டத்தில் சப்தமிட்டார்.

அப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடயத்தை மைத்திரியிடம் கேட்டறிந்த பின்னர் அவர் புன்னகையோடு மைத்திரியிடம் சொன்ன வார்த்தை.

"ஏகதமாய் பாயிஸ்" என்று.

இந்த விடயத்தை நான் எழுதுவதற்கு காரணம் என்னவென்றால்

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்கூட தனது சமூகத்திற்கு எதிராக இனரீதியான தாக்கங்கள், பழிவாங்கல்கள், அடக்குமுறைகள் ஏற்பட்டால் அது சின்ன விடயமாக இருப்பினும் அதனை கைகட்டி பார்க்கும் நிலையில் பாயிஸ் இல்லை.

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ அடக்குமுறைகள் பழிவாங்கல்கள் நடக்கும்போதும்கூட அதிகாரம் இருந்தும் கையாலாகாதவர்களாக செயல்படுகின்றனர்.

தற்போது அரசியலில் உயர் அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் பாயிஸ் அவர்களின் தைரியம், நெஞ்சுறுதி எமது சமூகத்தின் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் வர வேண்டும்.

Uwais Abusaleh

3 comments:

  1. What Fais did is wrong.....What here we have to proud with these culprits….?

    ReplyDelete
  2. அதிகாரம் இருந்தாலும் இல்லா விட்டாலும் ரவுடி ரவுடிதான்

    ReplyDelete

Powered by Blogger.