Header Ads



இலங்கையர்கள் இப்படியும் ஏமாற்றப்படுகிறார்கள் (எச்சரிக்கை செய்தி)

மின்னஞ்சல் ஊடாக மக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தெழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளின் பிரபுக்களின் பெயர்களை பயன்படுத்தி குறித்த மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றது. ஆசிய எல்லையில் பாரிய நிதியை செலவிட்டு சமூக முதலீட்டு திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கூறி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்து மோசடி செய்கிறது.

இவ்வாறான மின்னஞ்சல் பல இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல் ஊடாக தொலைபேசி இலக்கம் பெற்றுக் கொண்டு முதலீட்டிற்காக இலங்கைக்கு வருகைத்தர வேண்டும் எனவும் அதற்கான விமான டிக்கட் செலவை ஏற்குமாறும், தங்கள் வங்கி கணக்கில் பணம் வைப்பிடுமாறும், போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பொது மக்களை ஏமாற்றியுள்ளனர்.

இந்த முதலீட்டிற்காக இலங்கை செல்லும் குழுவிற்கு விமான டிக்கட் போன்றவற்றிற்கு பணம் வழங்கினால், திட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்னர் பணம் வைப்பிட்டவர்களுக்கு பணம் மற்றும் சலுகை கிடைப்பதாக தெரிவித்து இவ்வாறான போலி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நபர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் அவ்வாறான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் எனவும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.