Header Ads



ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம், வேட்பாளர் களமிறக்கப்படுவாரா..?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யாத, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வேட்பாளர் ஒருவர் தேர்தலில் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சார்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த வேட்பாளரை பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முஸ்லிம் வேட்பாளருக்கு அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் கட்சிகள் கூட்டாக இணைந்து ஓர் முஸ்லிம் கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்ற போதிலும் முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. அதை விட பேசாம கோட்டாவ ஆதரிக்கிறது..

    ReplyDelete

Powered by Blogger.