Header Ads



குனூத் அந்நாஸிலாவை, சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம் - ஜம்இய்யத்துல் உலமா

எமது நாட்டில் 21.04.2019 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட ஆசாதாரண நிலை நீங்கி நாட்டு மக்களுக்கு மத்தியில் சாந்தியும், சமாதானமும் மேலும் ஐக்கியமும் ஏற்பட ஐவேளைத் தொழுகையிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதிவருகின்றோம்.

அல்லாஹுதஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்கிறான். இச்சோதனைகள் நீங்குவதற்காக நாம் மேற்கொள்ளும் துஆ, திக்ர், தொழுகை, நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல் அமல்களை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

எனவே, நாம் தொடர்ந்தும் அந்த அமல்களைச் செய்து அவன் பக்கம் நெருங்குவதுடன், இந்நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும், சாந்தியுடனும் மேலும் ஐக்கியத்துடனும் வாழ்வதற்குப் பிரார்த்தனையும் செய்வோம்.

அத்தோடு ஓதிவரும் குனூத் அந்நாஸிலாவில் பாவமன்னிப்புக் கோருதலுடன் பின்வரும் துஆக்களை ஓதி குனூத்தை சுருக்கிக் கொள்ளுமாறு தொழுகை நடாத்தும் இமாம்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

أللَّهُمَّ إِنَّا نَسْئَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِيْنِنَا وَدُنْيَانَا وَأَهْلِنَا وَمَالِنَا.
أَللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا أَللّهُمَّ احْفَظْنَا مِنْ بَيْنِ أَيْدِيْنَا وَمِنْ خَلْفِنَا وَعَنْ يَمِيْنِنَا وَعَنْ شِمَالِنَا وَمِنْ فَوْقِنَا وَنَعُوْذُ بِعَظْمَتِكَ أَنْ نُغْتَالَ مِنْ تَحْتِنا. 
أَللّهُمَّ آمِنَّا فِي أَوْطَانِنَا وَأَدِمْ نعْمَةَ الْأَمْنِ وَالْإسْتِقْرَارِ فِي بَلَدِنَا. 
أَللّهُمَّ مَنْ أَرَادَنَا وَبِلاَدَنَا بِسُوْءٍ فَأَشْغِلْهُ بِنَفْسِهِ وَاجْعَلْ كَيْدَهُ فِي نَحْرِهِ.
أَللّهُمَّ الْطُفْ بِعِبَادِكَ يَا رَحِيْمُ وَاحْفَظْهُمْ وَاكْشِفْ غَمَّهُمْ وَاحْقِنْ دِمَائَهُمْ وَاحْفَظْ مَسَاجِدَهُمْ وَأَمْوَالَهُمْ.
أَللّهُمَّ احْفَظْ سِرِيْلاَنْكَا وَأَهْلَهَا وَاجْعَلْهَا فِي أَمَانِكَ وَضَمَانِكَ وَإِحْسَانِكَ.
أَللّهُمَّ انْجِزْ لَنَا مَا وَعَدْتَنَا أَللّهُمَّ آتِنَا مَا وَعَدْتَنَا يَاحَيُّ يَا قَيُّوْمُ.


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் 
செயலாளர், பத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

3 comments:

  1. இந்த விடயத்தை ஏன் ஊதி பெரிசு படுத்துறேயேல் . ஒண்டும் நடேகா .

    ஆணே அடிகத்துக்கு முந்தி ஏன் தான் அடிச்சி சாகுரியேல்

    சும்மாஹ் இருக்கிறே ஆகேலேயும் பயமுழுதத்தூரெயில்



    ReplyDelete
  2. இது மாத்திரம் போதுமனதல்ல.
    சமூகத்தில் உள்ள பல பாவச் செயல்களை இல்லாமல் செய்ய வேண்டும்.
    ஆடம்பர திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும். இது எமது சமூகத்தை பீடித்துள்ள ஒரு சாபம்.

    ஆடம்பர, தேவைக்கு அதிகமான வீடுகள் கட்டுவது நிறுத்தப்பட வேண்டும்.
    இவைகள் நாம் இந்த உலக வாழ்க்கையில் கொண்டுள்ள மோகத்தினதும் மனத்தில் கொண்டுள்ள வெறுப்பினதும் வெளிப்பாடுகளே. இது எங்களை கோழைகளாக்கி அல்லாஹ்வின் உதவியை தடுக்கக்கூடியவை. நாம் அதிகம் திருந்த வேண்டி உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.