Header Ads



கோத்தபயவின் குடும்பத்தினர் மீதும், குமாரவெல்கம விமர்சனம்

சிலர் அமெரிக்காவில் வசித்துக்கொண்டோ ஏகாதிபத்தியவாதிகளை விமர்சிப்பதாகவும் குடியுரிமையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்து வருபவர்களின் மனைவியும் பிள்ளைகளும் அமெரிக்காவிலேயே இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

எப்போதும் அமெரிக்காவை பற்றியே பேசுகின்றனர். தொலைக்காட்சியில் பார்த்தாலும் கூட்டங்களை நடத்தினாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவே பேசுகின்றனர்.

எனினும் எமது தலைவர்கள் எத்தனை பேர் அமெரிக்காவில் இருக்கின்றனர்?. தற்போது அமெரிக்காவுக்கு எதிராக பேசினாலும் மனைவி அமெரிக்காவில் இருக்கின்றார். மனைவி டிஸ்னிலேண்டில் லொலி பொப் சாப்பிடுகிறார். புதல்வர்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர்.

மேலும் சில தலைவர்களின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றனர். மற்றுமொரு தலைவரின் மகள் அமெரிக்காவில் இருக்கின்றார். எமது கட்சியின் பிரதான அமைப்பாளர்களின் முழு குடும்பமும் அமெரிக்காவில் இருக்கின்றது.

சிலர் குடியுரிமையை இரத்துச் செய்யவில்லை. கடவுச்சீட்டை மட்டுமே ஒப்படைத்துள்ளனர். குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு வந்தாலும் மனைவியும் மகனும் அமெரிக்காவிலேயே இருப்பார்கள்.

ஒரு காலை அங்கும் ஒரு காலை இங்கும் வைத்துள்ளனர். வெளிநாடுகளில் பாதுகாப்பை பெற்று வாழ்ந்து விட்டு, அமெரிக்காவை விமர்சிக்கின்றனர். இதுதான் நகைச்சுவை. இதனை தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது என்றால், அடுத்து இருக்கும் சிரேஷ்ட தலைவரை நிறுத்துங்கள். கூட்டு எதிர்க்கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்களில் நான் மூன்றாவது நபர். எனக்கு முன்பாக மேலும் இரண்டு பேர் இருக்கின்றனர். வேட்டியும் பனியனும் அணியும் ஒருவரும் இருக்கின்றார் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.