Header Ads



மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு, தயவுசெய்து தங்கள் முடிவை கைவிடுங்கள்..!

- V.I.S.Jayapalan -


மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு,,

தாங்கள் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிற்ச்சி தருகிறது. அத்தகைய நிலைபாடு எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு கறையாகிவிடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள். நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.

ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள். கட்ச்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து என்னைய முஸ்லிம் கட்ச்சிகளுடனும் பேசி கட்ச்சியை முஸ்லிம் கூட்டமைப்பாக மேம்படுத்த உழையுங்கள். இது உங்கள் கடமை. 

கல்முனைத் தாயின் மூன்று பிள்ளைகளான கல்முனை, சாய்ந்தமருது முஸ்லிம்களுடனும் கல்முனை வடக்கு தமிழர்களுடனும் சமரசம் செய்துகொள்ளுங்கள். அமைச்சராகி கல்முனையின் மூன்று சகோதரகளுக்கும் நற்பணி ஆற்றுங்கள். முஸ்லிம்களின் கனவான தென்கிழக்கு கரையோர மாகாணத்துக்கான போராட்டத்தை முன்னெடுங்கள். நாங்களும் தமிழர்களை திரட்டி துணை வருகிறோம். இதுதானே உங்கள் கனவு.
.
நீங்கள் அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனையின் மூன்று சகோதரர்களையும் சக வாழ்வால் இணைக்கவேண்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.

3 comments:

  1. என்ன ஹறிஸ் பதவி துறக்கபோகிறாரா?, எத்தனை நாட்களுக்களுக்காம்?

    ReplyDelete
  2. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களே உங்கள் சிந்தனையின் அடிப்படையினையினை மாற்றுங்கள், கல்முனைக்குப்பல பாராளுமன்றஉறுப்பினர்கள் உங்களுக்குமுன் இருந்திருக்கின்றார்கள், அக்காலங்களில் இவ்வளவு மும்முரமாக தமிழர்கள் தனிப்பிரிவு கேட்டார்களா, சாய்ந்தமருதான் இவ்வளவு மும்முரமாகக்கேட்டார்களா? கல்முனை பல சிறிய பெரிய ஊர்களைக்கொண்ட ஒருதேர்தல் தொகுதி, எல்லாஊர்களையும் அணைத்துச்செல்வதுதான் தலைவனுக்குரிய தகுதியும் சிறந்த அணுகுமுறையும், கல்முனை முஸ்லிம்களின் தலைநகரமென்றால் அதன் தலைவன் முஸ்லிம்களின் தலைவனுக்குரிய பண்புகளோடுஇருக்கவேண்டும், அவனது தலைமையின் நேர்மையினைக்கண்டு சகசமூகத்தினர் முஸ்லிம்களைக்கணிக்கும் ஊடகமாகத்திகழவேண்டும், ஹுதைபிய்யா உடன்படிக்கையினையும் நாம்பின்பற்றும் மார்க்கத்தினையும் சிறிது சிந்தித்துப்பார்க்கவேண்டும், நீங்கள் ஒரு ஊரினை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக இருக்கமுடியாது, ஒரு சமூகம் முக்கியமா அல்லது ஒரு ஊர் முக்கியமா? கல்முனையில் இருக்கும் நிறுவனங்களின் நிர்வாகக்கட்டமைப்பில் சகஊர் சகசமூகங்களுக்கும் இடமளியுங்கள், எடுத்ததர்க்கெல்லாம் ஊர்வதத்தினை முன்னிலைப்படுத்தாதீர்கள், முன்னிலைப்படுத்துவோரைச் சேர்த்துச்செல்லாதீர்கள், அரிசி கொடுத்து, காசி கொடுத்து சிறிய ஊர்களிலிருந்து வாக்குப்பெற்று பிரதிநிதியாகியகாலம் இனியும் வராது, இனிவரும் காலங்களிலாவது நீங்கள் ஒரு கௌரவக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதட்குரியவகையில் நடந்துகொள்ளுங்கள், அமைச்சுப்பதவியிலும் MP பதவியிலும் நீங்கள் முன்பும் பலமுறை தடம்புரண்டிருக்கின்ரீர்கள் அதன்மூலம் பொதுவானபிரச்சினையில் எமதுசமூகம் சார்ந்த கட்ச்சியனைப்புறம்தள்ளியுமிருக்கின்ரீர்கள், தயவுசெய்து உங்கள் நம்பகத்தன்மையினை நீங்கள்தான் காற்றுக்கொள்ளவேண்டும்

    ReplyDelete
  3. எள்ளுக்காயுது எண்ணெய்க்கென்றால் இந்த எளிப்புளுக்கை ஏன் காயுது.

    ReplyDelete

Powered by Blogger.