July 30, 2019

இலங்கையில் நிகாபுக்கு நிரந்தரத் தடை - அமைச்சரவையும் அங்கீகரித்தது - முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம்


முகத்தை முழுமையாக மூடும் வகையில் இஸ்லாமியப் பெண்கள் அணியும் நிக்காப்பை நிரந்தரமாக தடை செய்யும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர இன்று 30.07.2019 கூடிய அமைச்சரவை தீர்மானித்தது.

நீதியமைச்சர் தலதா இதற்கான அனுமதியை கோரியிருந்தார். 

அவசர காலச் சட்டத்தின் கீழ் இப்போது அது தடை செய்யப்பட்டிருந்தாலும், அதனை நிரந்தரமாக தடை செய்யவே அமைச்சரவை இன்று தீர்மானித்தது. Tn

16 கருத்துரைகள்:

لا قدر الله

அமைச்சர்கள் உடனடியாக களத்தில் இறங்கி ஜம்இய்யதுல் உலமா சபையுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவை வழங்க வேண்டும். எமது கலாச்சாரத்தை யார் யாரோ கையில் எடுத்து விளையாட, பாதிக்கப்படுவது எமது பெண்கள் தான்.

MUSLIM THALAIVAN ENRU, THANNAI PUHALNDUHOLLUM, VETKAM KETTA EMAATRUKKARAN,
HAKEEMUKKU KIDAITHA,
MUZALAVAZU VETRY.
MUSLIMGALUKKU KIDAITHAZU * KOLIPPAL *

This is not an acceptable move, the recent attack nothing to do with Burka, the attackers were not worn Burka but jeans and T shirts.

Government and racist groups make use of the recent attack to ban Burka. SL Muslims politicians are making big mistake to support for this move.

Selecting a dress code is an individuals right, apart from religious matter. If the women wear shorts, Will SL Government going to ban short?

Good. Niquab is not an Islamic dress. It is a cultural garment used by a very small group of people in certain countries. Koran or Hadis do not insist anywhere that Niquab is a must for Muslim women.

Nikaaf must be avoided as it is creating lot of fake issues..
Also, its not in Islam.... So, better keep away this...
Hope all community would understand this issue

Please dont poke your fingers in the religion
The ban will be lifted as the emergency laws is been taken out there is no connection with the dress and crimes then we have to go naked if we try to remove dress codes due to individuals act
And there is no need to ban hijab also it racism only

The racist are demolishing there own country and people by this foolish acts

It’s in the Qur’an or Its not in the Qur’an is not the matter the Matter is it’s a cultural right. We should not give it up.
I personally disagree with this dress but it does not matter.
I will not say no to the right of wearing Face Cover.

anybody wearing niuab should be sent to pakistan or suadi arabia, or sent to jail. it is not srilankan muslim culture. it is wahabi muslim fanatics.

ஊர்வாரியாக முகமூடும் பெண்களிடம் கையொப்பம் எடுத்து எமது இந்த உரிமையை மீட்டெடுக்க மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

நிகாப் தடைச்சட்டத்தில் அதிக மகிழ்ச்சி வேண்டாம்!!!

நிகாப் தடைச்சட்டத்தில் இனவாதிகளை விட சில முஸ்லிம் பெயர் தாங்கிகளுக்குத்தான் அதிக சந்தோசம் போல் தெரிகிறது, சிலர்கள் இதன் மூலம் ஏதோ இலங்கையில் இஸ்லாமிய கிலாபத் வந்து விட்டது போன்ற சந்தோசத்தில் குதூகளிக்கின்றனர், கருத்து வேறுபாடுகளின் போது இமாம்கள் கடைப்பிடித்த ஒழுங்குவிதிகள் பற்றி பாடம் எடுக்கச் சொன்னால் அவர்களை மிஞ்சிய உஸ்தாதுகள் யாரும் இல்லை, ஆனால் அந்த ஒழுங்குகளை கடைப்பிடிப்பதில் அவர்களை விட பூஜியம் யாரும் கிடையாது!!

முகத்திரை ஹிஜாப் 1400 வருடங்களாக இஸ்லாமிய உம்மத்தில் இருந்து வருகின்றது, இது ஒழுக்கத்துக்கும் பேனுதலுக்குமான ஆடை என்பதில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை, கண் குருடர்களும், அறிவிலிகளும், மேற்கின் அழுத்தங்களுக்கு உட்பட்ட முப்திகளுமே இவ்வுண்மையை மறுப்பர். அவர்களைப்பற்றி இங்கு அலட்டிக்கொல்ல வேண்டிய அவசியமில்லை. நிகாப் கடமை இல்லை என்று அதிக பக்கங்கள் கொண்ட நூல் எழுதிய இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் உட்பட தனது மணைவிமார்களையும் பிள்ளைகளையும் முகத்தை மறைக்குமாறே வழியுருத்தி இருந்தார்கள், அல்பானியின் கிதாபிலிருந்து முகத்தை திறப்பதற்கு ஆதாரம் தேடியவர்கள் அதே நூலில் 8க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து முகத்தை மறைப்பதே சிறந்தது என்றும் நிருவியுள்ளார். முகம் மறைப்பது கட்டாயம் இல்லை என்ற அல்பானியின் கருத்தை பரப்பியவர்கள் அதே அல்பானி முகம் மூடுவதுதான் மிகச்சிறந்தது என்று வழியுருத்தியதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கவில்லை!!

எது எவ்வாறிருந்த போதிலும் இத்தடையின் மூலம் பாதிக்கப்பட்டிருப்பது பல்லாயிரக்கனக்கான நமது முஸ்லிம் தாய்மார்களும் சகோதரிகளுமே!! அவர்களின் துக்கத்தில் குளிர்காய்பவர்கள் இஸ்லாமிய பண்பாட்டுக்கப்பால் மனித உணர்வையே இழந்து நிற்கின்றனர்!!

எகிப்தின் ஜனாதிபதி முர்ஸி அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வேலை, ஸஊதியின் மூத்த அறிஞர் சபையின் உருப்பினர்களில் ஒருவரான கலாநிதி ஸஃத் அல் ஹத்லான் அவர்கள் 'முர்ஸியின் பதவி நீக்கத்தில் சந்தோசப்படுவது மிகவும் கேவலமான செயல் என்று சொன்னார், கருத்தியல் ரீதியாக இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தோடு அந்த அறிஞருக்கு சில மாற்றுக்கருத்துக்கள் இருந்தும் அவருக்கு சதி செய்து பதவி நீக்கம் செய்தவர்கள் இஸ்லாத்துக்கெதிரான சிந்தனைப்போக்கிலுள்ள மதச்சார்பின்மை வாதிகளாவர், எவ்வளுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இஸ்லாத்தின் பொது எதிரி தனது முஸ்லிம் சகோதரனை வீழ்த்துகின்ற போது அதில் சந்தோசப்படக்கூடாது.

பிக்ஹுல் அவ்லவியாத், ஆதாபுல் ஹிலாப், பிக்ஹுல் வாகிஃ, பிக்ஹுத் தஃவா பற்றி பேசுகின்ற சிலர் நிகாப் தடைச்சட்டத்தில் சந்தோசப்பட்டு பதிவிடுவதுதான் ஆச்சரியமாக உள்ளது!!!!!

நீங்கள் சந்தோசப்படுவதற்கு இங்கே ஒன்றும் இல்லை!! தூனிசியா பாராளுமன்றில் அதி பெரும்பான்மையாக இருக்கும் இஹ்வான்களின் நஹ்ழா கட்சியை மதச்சாரப்பின்மைவாதிகள் இன்று வரைக்கும் பலவீணப்படுத்தி தோற்கடித்தே வருகின்றனர். அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் பல முஸ்லிம் அரபு நாடுகளில் பால்படுத்தப்பட்டிருக்கின்றன!! அவற்றை அமுல் படுத்த குரல் கொடுத்தால் அவர்கள் தீவிரவாதிகள் என்ற பெயரில் சிறையிலடைக்கப்படுகின்றனர், பலர்கள் நாடு கடத்தப்பட்டுமுள்ளனர், பலர்கள் அகதிகளாக்கப்பட்டிருக்கின்றனர், மேற்கு உலகு எம்மை மாட்டு மந்தைகளாக்கிவிட்டு, எமக்குள் பிரச்சினைகளை கிளரிவிட்டு கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர், சகல வளங்களையும் தனதாக்கிக் கொண்ட நாம், நமது முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டெடுக்க முடியாத அளவு எம்மை செல்லாக்காசுகளாக ஆக்கியிருக்கின்றனர், எமக்கு ஆயுதத்தை விற்று எம்மையே முட்டி மோத விட்டுள்ளனர்

எனவே, நிகாப் தடைச்சட்டத்தின் மூலம் அக மகிழ்வு கொள்ளும் எமது சகோதரர்கள் மேற் சொன்ன உலக முஸ்லிம்களின் துன்பங்களிலும்; அகமகிழ்வு கொள்ளுங்கள்!!! உங்களுக்கு வேண்டுமானால் இது சாதாரன சட்டப்பிரச்சினையாக இருக்கலாம், ஆனால் இனவாதிகளைப் பொருத்த வரையில் அவர்களின் மிகப் பெரும் சாதனையாக இதனை கருதுகின்றனர். எனவே, அவர்களுக்கு தீனி போடுவதை உடனடியாக நிருத்தி பாதிக்கப்பட்ட எமது சகோhதரிகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள், முடியாவிட்டால் உபத்திரம் செய்யாமலாவது இருங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான். Received

Why Muslim women did not wear Hijab/Bhurga 25 years back? They dont know Islam?

Post a Comment