Header Ads



இனவாதத்தினூடாக ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ள எதிரணியினர் முயற்சி - மரிக்கார்

இனவாதத்தினூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ளவே  ஒன்றிணைந்த எதிரணியினர் முயற்சித்து வருகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை  இனவாதிகளாக காட்டி சிறுப்பான்மையினரின்  வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிரணியினர் எதிர்பார்ப்பதாக  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று -09- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த திருத்தம் தேவையற்றது என்கிறார்கள்.  மீண்டும் சர்வாதிகாரம் தலைத்தூக்கும் போதே இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் அருமை தெரியவரும்.

மத்ரசா பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவந்து பிரிவேனா கல்வியை போன்று இதனையும் மாற்றியமைக்க வேண்டும்.  மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றசாட்டுக்கள் உள்ளிட்ட தற்போது எழுந்துள்ள சகல பிரச்சினைகளுக்குமான அடித்தளத்தை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே உருவாக்கியது.  

குண்டுத்தாகுதல் சம்பவங்களுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்காமல் இந்த பிரச்சினைக் காரணமாக கொண்டு  சிங்கள பெரும்பான்மையினரின் பலத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகளையே  முன்னெடுத்து வருகின்றனர். மறுபுறம்  சிறுப்பான்மை மக்கள் மத்தியில்  அச்ச நிலையை உருவாக்கி அவர்களின்  வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.