Header Ads



நான் எந்த சவாலையும், ஏற்பதற்கு தயங்காதவன் - மத்தியுஸ்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியுஸ் பல மாதங்களிற்கு பின்னர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியமை நேற்றைய போட்டியில் பலரின் கவனத்தை கவர்ந்த விடயமாக மாறியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியுஸ் நான் எந்த  சவாலையும் ஏற்பதற்கு தயங்காதவன் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக நான் பந்து வீசவில்லை எட்டு மாதங்களிற்கு பின்னர் நான் வீசிய முதல்பந்து அது என அவர் தெரிவித்துள்ளார்.

புரான் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார்  இதேவேளை அணிக்காக யாராவது புதிதாக சில ஓவர்களை வீசவேண்டிய நிலை காணப்பட்டது இதனால் நான் அணித்தலைவரிடம் சென்று எனக்கு பந்து வீசுவது குறித்து அனுபவம் உள்ளது என தெரிவித்தேன் என மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஆட்டமிழக்க செய்யவேண்டிய வீரராக புரான் காணப்பட்டார்,அவர் எனது பந்துகளை  எல்லைக்கோட்டிற்கு வெளியே அடிப்பதற்கு முதல் அவரை  அதிஸ்டவசமாக ஆட்டமிழக்க செய்துவி;ட்டேன் எனவும் மத்தியுஸ் குறிப்பி;ட்டுள்ளார்.

எந்தவேளையிலும் சவால்களை எதிர்கொள்ள  தயங்காதவன் நான் எனவும் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

நான் இதற்கு முன்னர் பல ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளேன் இதனால் எனக்கு அனுபவமுள்ளது என தெரிவித்துள்ள அவர் மூன்றுவகை போட்டிகளிலும் விளையாடி பந்துவீசியுள்ளதால் எந்த தருணத்தில் எதனை செய்யவேண்டும் என்பது எனக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ள மத்தியுஸ் என்னால் அதனை நிறைவேற்ற முடிந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.