July 07, 2019

முஸ்லிம்கள் இலங்கையில் இருக்கமுடியாது - அழிப்போம் என ஞானசாரர் எச்சரிக்கை

“இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாமென நான் கூறிவைக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு கண்டியில் இன்று -07- பிற்பகல் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார் ஞானசார தேரர்.பொதுபலசேனாவின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

சம்பிரதாய முஸ்லிம்கள் எவ்வளவு மாறியிருக்கிறார்கள் என்பதை அண்மைய தாக்குதல்களில் அறிந்துகொண்டோம். கடந்த காலங்களில் விட்ட எச்சரிக்கைகளை பற்றி பேசாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க நாம் செயற்பட வேண்டும்.

இன்று ஒரு பக்கம் சோபா ஒப்பந்தத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி. மறுபக்கம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் செயற்பாடு, இன்னொருபக்கம் பலம்வாய்ந்த உலக நாடுகளின் புலனாய்வுச் சேவைகள் நமது நாட்டை கூறுபோட செயற்படும் நடவடிக்கை என்று பல பிரச்சினைகள்.

இது சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்க கூடாது. எல்லாவற்றுக்கும்போல நாட்டுக்கு ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள் தான் வரலாறு கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கவுரவமான இனம்.

இன்று எமது வீட்டிற்குள் விஷப்பாம்பு வந்துவிட்டது. வீட்டிற்குள் இருக்கும் பாம்பை நாங்கள் வெளியேற்ற வேண்டும். அதில் வீட்டுக்குள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இவ்வருடம் இதுவரை எட்டாயிரம் பேர் வரை உலகில் கொல்லப்பட்டுள்ளனர்.அப்படியான அடிப்படைவாதம் இது.

நாம் உலமா சபையுடன் கவனமாக இருக்க வேண்டும். உலமாக்களுடன் பேசுவதை அரச தலைவர்கள் நிறுத்த வேண்டும். சுபி முஸ்லிம்கள் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுடன் பேச வேண்டும். அல் – தக்கியா என்ற போர்வையில் உலமா சபை செயற்படுகிறது.

உலமா சபைக்கு இன்று பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளது. அவர்கள் இந்தோனேசியா , மலேசியா , இந்தியா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளனர். 4 அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ளனர்.இங்கே 40 வகையான மொழிபெயர்ப்புக்களுடன் குரான் உள்ளது.1950 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குர் ஆன் உள்ளது. அந்த குர் ஆன் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

அரசுக்குள்ளே அரசு , சட்டத்திற்குள்ளே சட்டம் , நீதிமன்றத்திற்கு வெளியே காதி சட்டம், வெவ்வேறான சட்டங்கள் உள்ளன. எந்த அரசு வந்தாலும் வஹாபிவாதிகள் அதில் உள்ளனர். அட்டுலுகமவில் இன்று தப்லீக் ஜமாத் செயற்படுகின்றது.தலைக்கு மேலே பறந்து சென்றாலும் தலையில் கூடு கட்ட நாம் விட மாட்டோம். உலமாக்கள் இங்கு வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்படியே சென்றால் நீங்கள் இங்கு இருக்க முடியாது. உலமாக்களின் கொஞ்சம் ஓட்டுக்களுக்காக எமது அரசியல்வாதிகள் அலைகின்றனர்

சிங்கள அரசை அமைப்போம். சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம். பாராளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம். சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரில் குற்றம் செய்யாதவர்களை காண முடியாது. இனத்துக்கு தலைமை வழங்கக் கூடிய ஒரு அரசியல் கலப்பற்ற தலைவன் எமக்கு வேண்டும். ஜனநாயகத்தின் காப்பரணான பாராளுமன்றத்தில் செயற்படும் ஒருவர் – சிங்களவரின் பாராளுமன்றம் இன்று தேவை. சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை. அது நமக்கான பாராளுமன்றம் வேண்டும்.

காவிகளின் பலத்துடன் நாம் இந்த நாட்டை வெற்றியை நோக்கி கொண்டு செல்லலாம். நாட்டில் 10 ஆயிரம் விகாரைகள் உள்ளன.7 ஆயிரம் விகாரைகளை நாம் ஒன்று சேர்த்தால் பிரிவினைகளை மறந்தால் நாம் எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்கும். நாங்கள் கல்வி பயின்று அனுபவத்துடன் தான் வந்துள்ளோம்.எங்களால் இந்த நாட்டை நல்ல இடத்திற்கு கொண்டு செல்லலாம். 70 வருடம் இந்த நாட்டை வீணாக்கியவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆட்சியை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. ஆனால் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும்.

இன்று சிங்களவர்கள் சிங்களவர்களாக இருக்கவைக்க எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் .அதற்காக பாடுபட வேண்டும் என்றார் தேரர்.

2

இஸ்லாமிய அடிப்படைவாதம் விஷப் பாம்பாகும் அதனைக் கண்ட இடத்தில் நசுக்கி விடுங்கள். கொடிய விஷத்தைக் கொண்டு தீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தர்மத்தின் வழியில் அழிப்போம். உலமா சபையுடனான அனைத்துவித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின்  பொது செயலாளர் ஞானசார தேரர் , தனிச் சிங்கள இராச்சியத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை கண்டியிலிருந்தே ஆரம்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் மாநாடு  இன்று (07) ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெற்றது. இதன் போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

தேசிய பிரச்சினையாக காணக்ககூடிய இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகப் போராட வேண்டும். தமிழ்ச் சகோதரர்களே நாட்டை பாதுகாக்க எங்களுடன் ஒன்று சேருங்கள் . நாட்டில் அரசியல் முறை சீரழிந்துள்ளது. தேசிய கொள்கை குறித்து பேசாது கட்சிக் கொள்கை குறித்து பேசுகின்றனர். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரே இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து பேசுகின்றனர்.

இது சிங்கள நாடு . இவ்வாறு கூறியதற்காக தமிழ் சகோதரர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். அதே போன்று நாம் கள்ளத்தோணிகளும் அல்ல. எனவே கொடிய விஷத்தைக் கொண்டு தீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தர்மத்தின் வழியில் அழிப்போம். உலமா சபையுடனான அனைத்து வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும். பல உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத 4 அமைப்புகளுடன் தொடர்புகளை பேணி வருகின்றனர். எனவே இவர்களை அரசாங்கம் அங்கீகரிக்க கூடாது.

மறுப்புறம் 1950 ஆம் ஆண்டில் சிங்களத்தில் அமொழிபெயர்க்கப்பட்ட குர்ஆனை இலங்கை வாழ் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். ஒரு கடவுள் என்றால் ஓரு குர்ஆன் தான் காணப்பட வேண்டும். இதனை விடுத்து உலமா சபை அடிப்படைவாத்தை விதைத்ததால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். எனவே போதும் அத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

13 கருத்துரைகள்:

முஸ்லிம்களோடு மோதினால் உனக்கு தான் அழிவு.

இது சிங்கள நாடு வட,கிழக்கு உட்பட,இப்போது புரிந்ததா தமிழர்களே உங்களுக்கு வட,கிழக்கு,தனி நாடு,சுயாட்சி,எல்லாமே கனவுதான்

இந்தத் தேரனுக்குத் தலையில் கோளாறு. எப்படியுமே குணப்படுத்த முடியாது.விசப்பாம்பு இவன். மீண்டும் உள்ளே புகும் நாள் விரைவில் வருமோ?

அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போது, சட்டம் ஒழுங்கு அமைச்சரான சனாதிபதி அவர்களின் ஆசீர்வாதம் அனுசரணை பொன்னு நடைபெற்ற மாநாட்டில் சம்பிக்க ரணவக்கவின் முன்மொழிவுகள் நிறைவேற்ற பட்டுள்ளன

நீதான் அழிவுப்பாதையில் இருக்கின்றாய் ஒரே கடுவுளாகிய அல்லாஹுவால் உனக்கு தரப்பட்டுள்ள உன் வாழ்நாட்களை சிந்தித்துப்பார் மிக விரைவில் நீ மண்ணில் புதைக்க்ப்பட்டுவிடுவாய் அப்போது உனக்கும் மாபியாக்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது

இஸ்லாமிய மனிதநேயமிக்க பண்புகள் நிறைந்த மார்க்கத்தை மனிதர்களின் உள்ளங்களில் பதியவைத்து அதனால் மக்களை வாழச்செய்வது அது வணக்கத்திட்குறிய ஒரு கடவுளாகிய அல்லாஹுவின் விருப்பம் அதை உன்னைப்போன்ற பைத்தியகார பிச்சிநாய்களால் சற்றும் சிந்திக்க முடியாது!

சிங்கள சினிமா காமெடி பீசுகள்...
ஞானசார, ரத்தன,மட்டக்களப்பு மங்கி, சம்பிக்க, விமல், கம்மன் பிலை ( பேர்லயே பிலை இது உருப்பட்ட மாதிரிதான்)

இந்த நாட்டில் வாழும் அனைவரும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான். சிலர் முதலில் வந்தார்கள் சிலர் கடைசியில் வந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் போகவேண்டும் என்று சொன்னால் முதலில் வந்தவர்கள் முதலில் போகவேண்டும் கடைசியில் வந்தவர்கள் கடைசியில் போவார்கள். DNA Journey Test மூலம் எங்கிருந்து வந்தார்கள் என்பதை கண்டறிந்து அந்தந்த இடங்களுக்கே திருப்பி அனுப்பலாம். DNA Journey Test இக்கு நாங்கள் ready நீங்கள் ready யா?

ELLARUKKUM ACJU UDANTHAAN KOOFAM.KAARANAM AVARHAL THAAN NAM NAATIL OTRUMAIAI KADAIPIDIPIKUM PADYUM PORUMAYAI IRUKKUM PADIUM SOLRARHAL

Muslim country if not do donate you will not find food to eat, even if they stop you cant wash your ash

பருப்பு ஞான சாரர் முடிந்தால் உமது சன்டித்தனத்தை வவுனியாவிற்கு அங்காள் வந்து கட்டட்டும் பார்ப்போம் குனிய கலட்டிவிட்டு அனுப்புவதில்.

Muslims mattum illama intha naata enga pooi epdi katti elupirupeenga werum mathuwum maathaum kanda samuham neenga saathitha keewalamana wishayatha muslim naanga solli kaatina wetkathula thuuku pooda wendui warum sahotharare paathu ungaludaya warthaihala usue pannunga witta eduka eela naagalum peesuwam aana islam itha solli tharala engaluku

Muslim hala pahaichu ennatha saathika pooreenga mannukula poora udambu thn ithu weena appawihala alichu paawatha kattitu pooi seera idea panreengala. Muslim hal illati neenga ellam intha naatla ennatha apdi kilichirupeenga awanga poota ....... thn walthutu erukeenga mind it. engalaalaum peesa eelum aana Islam atha s=engaluku solli kudukala. neenga periya manushan ndu nadanthukira withathulaye welanguhu neenga ellam oru matha thalaiwar kalati erinchitu pooi weera weela eruntha paarunga. moththa Sinhala sahothararhalaum keewala paduthaama

Post a comment