Header Ads



ஞானசாரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அதனை வரவேற்பேன், ரதன தேரரை கைதுசெய்ய வேண்டும்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் அதனை ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ரிசாட் பதியுதீன் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் தெரிவித்துள்ளதுடன், ரிசாட் பதியுதீன் அமைச்சராக பொறுப்பேற்றால் தூக்கிட்டுக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இக்கருத்துத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானிடம் வினவிய போது, ரதன தேரரின் கருத்து பௌத்த மதத்திற்கும், அதில் கூறப்பட்டுள்ள விடங்களுக்கும் எதிரானது. உடனடியாக பொலிஸார் அவரை கைதுசெய்ய வேண்டும். தூக்கிலிட்டுக் கொள்வதாக கூறுவதும் ஒரு பாரதுரமான குற்றமாகும்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சுக்களை மீள பொறுப்பேற்பதை ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் எதிர்ப்பதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை. அவ்வாறு எவரும் எதிர்ப்பு வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.

பொது பல சேனா செயலாளர் வன.ஞானசார தேரர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் ​போவதாக கூறியிருப்பது பற்றி வினவியதற்கு பதிலளித்த அவர்,

பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அதனை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.