Header Ads



ஞானசாரருக்கு ஏற்பட்ட பரிதாபம், தனது பெயரையும் மாற்றுகிறார்

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பெயரை மாற்ற வேண்டியுள்ளதாக, அந்த அமைப்பின் பிரதம நிலைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் பெயருக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளமையினால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பேஸ்புக் பக்கத்தில் ‘கலகொட அத்தே ஞானசார’ எனக் குறிப்பிடும் போது, அந்தப் பெயர் தடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, எதிர்காலத்தில் ‘அபே ஹாமதுருவோ’ (எங்கள் மதகுரு) எனும் புனைப் பெயரை, தனது பெயராக ஞானசார தேரர் பயன்படுத்துவார் எனவும், டிலந்த கூறியுள்ளார்.

அதேவேளை, பொதுபல சேனா அமைப்பும் எதிர்காலத்தில் ஞானசார தேரரை ‘அபே ஹாமதுருவோ’ என்றே, பேஸ்புக்கில் குறிப்பிடும் என்றும், டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. ஞானசாரர் என்ற பெயர்தான் மக்களுக்கு ஒரிஜினல் .

    ReplyDelete
  2. என்ன கொடுமடா இது

    ReplyDelete
  3. மாத முத்தா என்ற பெயர் மிகவும் பொருத்தமாகவும் எடுப்பாகவும் இருக்கும்

    ReplyDelete
  4. 'Premanantha' also suitable to him

    ReplyDelete
  5. Better celebrate a naming ceremony

    ReplyDelete
  6. Do not they feel ashamed to tell this..

    ReplyDelete
  7. Use as Ape Pissu Aamaduruwo "අපේ මානසික භික්ෂුව "

    ReplyDelete

Powered by Blogger.