Header Ads



சுதந்திரக் கட்சியினர் இரவு நேரங்களில், சஜித்­துக்கு ஆத­ரவு தெரிவிக்கின்றனர் - டிலான்

(ரொபட் அன்­டனி)

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அடுத்த  ஜனா­தி­பதி தேர்­தலில்   போட்­டி­யிட வேண்­டு­மென  கூறி­வ­ரு­கின்ற  சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் மறு­புறம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு    ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப்­பி­டிக்­கின்­றனர் . பகலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வேண்டும் என்று கூறு­ப­வர்கள்  இரவில்   சஜித்­திற்கு   ஆத­ரவு வழங்கும்  செயற்­பாட்டில்  ஈடு­ப­டு­கின்­றனர்  என்று அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  டிலான் பெரேரா தெரி­வித்தார். 

எங்­கி­ருந்தோ வந்­த­வர்கள் இன்று   எமது சுதந்­தி­ரக்­கட்­சியை நிர்­வ­கிக்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் நாங்கள்  எப்­போ­துமே ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு எதி­ரா­கவே இருப்போம்.  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ஐக்­கிய  தேசி­யக்­கட்­சிக்கு எதி­ராக இருக்­கின்ற  பட்­சத்­தி­லேயே இந்த நாட்டின் அர­சி­யலில்  ஒரு முக்­கிய வகி­பா­கத்தை வகிக்க முடியும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

 பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா சுதந்­தி­ரக்­கட்­சியில் இருந்து கொண்டு பொது­ஜன பெர­மு­ன­விற்கு  சார்­பாக செயற்­பட்டு வரு­கின்றார் என்றும்   அவர் அவ்­வாறு தொடர்ந்து செயற்­பட்டால் அவ­ருக்கு  எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டி ஏற்­படும் என்றும் சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லாளர்  தயா­சிறி ஜய­சே­கர    தெரி­வித்­தமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

எதிர்­வரும்  ஜனா­தி­பதி தேர்­தலில்   ஐக்­கிய தேசிய கட்­சியை எதிர்த்து எந்த வேட்­பாளர்   போட்­டி­யிட்­டாலும்   அவரை நாங்கள் ஆத­ரிக்­க­வேண்­டிய   சூழல் ஏற்­படும்.  எமக்கு வேறு வழி­யில்லை.  கோத்­த­பாய ராஜ­ப­க்ஷதான் எதிர்­த­ரப்பு  வேட்­பாளர் என்று தீர்­மா­னிக்­கப்­பட்டால் நாம் அவரை ஆத­ரிக்­க­வேண்டி வரும் ஆனால் அப்­ப­டி­யாகும் சந்­தர்ப்­பத்தில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில்   சுதந்­தி­ரக்­கட்­சியின் கொள்­கையை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.  அவ்­வாறு ஏற்­றுக்­கொண்டால்   நாங்கள் அவ­ருக்கு ஆத­ரவு அளிப்போம்.  வாசு­தே­வ­நா­ண­யக்­கார போன்­ற­வர்­களும் இந்த நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­றனர். 

எனினும் இன்று சுதந்­தி­ரக்­கட்­சியில் எமக்கு எதி­ராக சிலர்  பேசிக்­கொண்­டி­ருக்­கின்­றனர் .   என்னைப் பொறுத்­த­வ­ரையில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி எப்­போதும்   ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு எதி­ரா­ன­தா­கவே இருக்­க­வேண்டும். சுதந்­தி­ரக்­கட்சி ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு எதி­ரா­ன­தாக செயற்­பட்டால் நாம் அந்தக் கட்­சியில் நீடிப்போம். அல்­லது    ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக   போகின்ற வேறொரு கட்­சியில் நாங்கள் இணை­ய­வேண்­டிய தேவை ஏற்­படும்.  

ஒரு­கா­லத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் சஜித்­பி­ரே­ம­தாஸ அணி­யாக இருந்­த­வர்கள் இன்று ஜனா­தி­ப­தியை சுற்றி இருக்­கின்­றனர். அவர்கள்  மீண்டும்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்  பக்கம்  சுதந்­தி­ரக்­கட்­சியை  இழுத்து செல்­லவே முயற்­சிக்­கின்­றனர்.   அதா­வது   சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்கும் போக்கில் ஜனா­தி­ப­தியை சுற்­றி­யி­ருக்கும்  இந்த  பிர­மு­கர்கள் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   எதிர்­வரும்  ஜனா­தி­பதி தேர்­தலில்  போட்­டி­யிட வேண்டும் என்று கூறும் முக்­கி­யஸ்­தர்கள் மறு­புறம் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு மறை­மு­க­மாக ஆத­ரவு வெளி­யிட்டு வரு­கின்­றனர். 

 அதற்கு நாம் இட­ம­ளிக்­க­மாட்டோம். இதனை நாங்கள் கண்­டு­பி­டித்து விட்டோம். அதனால் தான் எமக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­வ­தாக அறிக்கை விடுக்­கின்­றனர். எங்­கி­ருந்தோ வந்­த­வர்கள் எமது கட்­சியை நிர்­வ­கிக்க ஆரம்­பித்­த­விட்­டனர். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால  சிறி­சேன மீண்டும் ஒரு­போதும்  கையை  சுட்­டுக்­கொள்­ள­மாட்டார் என  எண்­ணு­கிறோம்.  அவர்  மீண்டும் ஒரு­போதும்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்  பக்கம் செல்­ல­மாட்டார். அவர் அவ்­வாறு  ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு எதி­ராக செயற்­படும் பட்­சத்­தி­லேயே    அவர் தொடர்ந்தும்  இந்த நாட்டில் ஒரு செயற்­பாட்டு ரீதி­யான அர­சி­யலை முன்­னெ­டுக்க முடியும்  சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கிய சில உறுப்­பி­னர்கள்  தற்­போது சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ரவு வழங்கும் போக்கில் இருப்­ப­தாக  எங்­க­ளுக்குத் தெரி­கி­றது.   

பகலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வேண்டும் என்று கூறு­ப­வர்கள்  இரவில்   சஜித்­திற்கு   ஆத­ரவு வழங்கும்  செயற்­பாட்டில்  ஈடு­ப­டு­வ­தாக தெரி­கி­றது. சுதந்­தி­ரக்­கட்­சியில் தற்­போது 23  உறுப்­பி­னர்கள்  உள்­ளனர்.  அவர்­களில்   10 எம்.பி.க்கள் வரை  ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு எதி­ரான  நிலைப்­பாட்டில் உள்­ளனர்.  ஆனால்  பல முக்­கிய பிர­மு­கர்கள்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்  பக்கம் சாயவே முயற்­சிக்­கின்­றனர். அவ்­வாறு  ஐக்­கிய தேசியக்கட்சியின் பக்கம் சாய முயற்சிப்பவர்கள் எம்மை  சுதந்திரக்கட்சியிலிருந்து    வெளியேற்ற முற்படுகின்றனர். 

 அது தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் போன்று  ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே செயற்படுவோம்.  சுதந்திரக்கடசியிடம் தற்போது 15 இலட்சம்  வாக்குகளே உள்ளன. ஆனால் தாமரை மொட்டிடம் 50 இலட்சம் வாக்குகள் உள்ளன.  பலம் அந்த பக்கமே இருக்கின்றது. எனவே நாம் தான்  சில விட்டுக்கொடுப்புடன்   பொதுஜனபெரமுனவுடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.