Header Ads



பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின், இடையே வெளியேறிய சட்டமா அதிபர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்குவதற்காக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (26) ஆஜராகியிருந்தார். 

இதன்போது அவர், வழக்கு விசாரணைகள் இடம்பெறும் நேரத்தில் தான் சாட்சியமளித்தால் அது தனது கடமை சார்ந்த முரண்பாட்டை தோற்றுவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை என அனைவரையும் தான் பிரதிநிதித்துவபடுத்துவதாகவும் சாட்சி வழங்குவதால் குறித்த தரப்பினருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாவதில் சிக்கலான நிலமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதனால் தெரிவுக்குழு முன்னிலையில் சட்டமா அதிபர் என்ற ரீதியில் தன்னால் சாட்சி வழக்குவதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

சட்டமா அதிபரின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக தெரிவுக்குழு 15 நிமிடங்கள் ஒத்துவைக்கப்பட்டிருந்தது. 

மீண்டும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று கூடிய சந்தர்ப்பத்தில், இதற்கு முன்னர் சாட்சியமளிக்க வருகை தந்தவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தை குறிவைத்து மேற்கொண்ட கருத்துக்கள் தொடர்பில் மாத்திரம் விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அதற்கு பதிலளித்த சட்டமா அதிபர், அவை தொடர்பில் சாட்சியமளிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரை முன்னிலைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். 

அதற்கு தெரிவுக்குழுவின் அனுமதி கிடைத்ததை அடுத்து சட்டமா அதிபர் அவ்விடத்தில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். 

பின்னர் சாட்சி வழங்குவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி அப்துல் மாலிஸ் அஸீஸ் ஆகியோர் தெரிவுக்குழு முன்னினையில் ஆஜராகி இருந்தனர்.

No comments

Powered by Blogger.