Header Ads



முஸ்லிம்களை நம்ப முடியாதென்ற, சிந்தனை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது - விக்னேஸ்வரன்

கடந்த காலத்தில் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் தொடர்பில் கொண்டிந்த தவறான புரிதல்களே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டட மகிழுர் கண்ணகிபுரத்தில் இன்று -20- மக்கள் சந்திப்பு நடைபெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும் வகையிலும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன்,

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் இந்த நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் பின்னர் பல்வேறு விதமான சிந்தனைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவருகின்றன.

தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருகாலத்தில் சகோதரத்துவம் நிலவிவந்தது. ஆனால் இன்று சந்தேக நிலமையே இருசமூகங்கள் மத்தியிலும் நிலவிவருகின்றது. ஒருகாலத்தில் முஸ்லிம்களும் தமிழ் மக்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல வாழ்ந்துவந்த நிலைதான் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் இருந்தது.

அண்மைக்காலமாக இந்த நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய மக்கள் பல காரணங்களுக்காக தங்களுடைய காணிகளை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கும் வேறு இடங்களுக்கும் செல்கின்றனர். அந்தக்காணிகளை ஒரு இனத்தவர்கள் வாங்கிக்கொள்கின்றனர்.

ஆகையால் காணி சம்பந்தமான அவர்களுடைய உரிமைகள் விரிவுபடுகின்றன. எங்களுடைய காணி சம்பந்தமான உரிமைகள் குறைந்துகொண்டு வருகின்றன. இதைவிட வேறுசில நடவடிக்கைகளும் நடந்துவருகின்றன.

தற்போது தென்னிந்தியாவில் இருப்பதுபோன்று தமிழ் இந்து மக்களும் முஸ்லிம் மக்களும் கிறிஸ்தவர்களும் நாங்கள் யாவரும் தமிழர்கள் என்ற ஒரு சிந்தனையில் தான் இங்கும் வாழ்ந்துவந்தனர்.

அந்தக் காலத்தில் மசூர் மௌலானா அவர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கிய நபராக இருந்தவர். தந்தை செல்வாவினுடைய வலது கரம் என்றுகூட அவரைக் கூறலாம். அந்தக் காலத்தில் அவருடைய சிந்தனை நான் ஒரு தமிழன் என்றே இருந்தது. தமிழன் என்ற முறையில் தமிழ் மக்களோடு சேர்ந்து அவருடைய காரியங்கள் நடைபெற்றன.

அதன் பிறகு அஷ்ரப் அவர்கள் ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியோடு சேர்ந்துதான் அவருடைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் 1970, 1971ஆம் ஆண்டுகளில் கம்பொலையிலிருந்து மத்திய கல்லூரியின் முதல்வர் பதுர்டீன் முகமட் ஒரு மந்திரியாக வந்ததன் பிற்பாடு முஸ்லிம் மக்களின் சிந்தனை வேறுபட்டது. நாங்கள் ஏன் தமிழ் மக்களோடு சேர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும், நாங்கள் ஒரு வித்தியாசமான மக்கள் குழுக்கள் என்ற எண்ணம் அவர்களுக்குள் உட்புகுந்தது.

தமிழரசுக் கட்சியோடு சேர்ந்து இயங்கி முன்னெழுந்துவந்த அஷ்ரப் கூட இந்த சிந்தனைக்குள் இழுக்கப்பட்டார். நாங்கள் தமிழ் மக்கள் என்ற எண்ணத்தை விட்டு முஸ்லிம்கள் சமய ரீதியாக மத ரீதியாக நாங்கள் வேறுபட்ட காரணத்தினால் மொழி ரீதியாக ஒன்றுபட்டவர்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களுள் சிலர் சிங்களம் பேசுகின்றனர் சிலர் தமிழ் பேசுகின்றனர் சிலர் அரபு பேசுகின்றனர். எனவே நாங்கள் வேறொரு இனம் என்ற கருத்தை உட்புகுத்தினார்கள். ஆகையால் ஒருமித்திருந்த நாங்கள் அந்த காலகட்டத்தில் பிளவுபட ஆரம்பித்தோம்.

அந்த காலகட்டத்தில் தான் தமிழ் இளைஞர்கள் போராட ஆரம்பித்தனர். இந்தப் போராட்டத்தில் முதல் சில வருடங்களில் பல முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். காலஞ்செல்லச்செல்ல அவர்களிடையே நாங்கள் ஏன் இவர்களுடன் சேர்ந்து போராடி உயிரைவிடவேண்டும் என்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து எங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் என்ன என்ற அடிப்படையில் நாங்கள் வித்தியாசமான ஒரு இனம் என அவர்கள் கூறத்தொடங்கியதில் இருந்துதான் தமிழ், முஸ்லிம் மக்களின் உறவில் விரிசல் ஏற்படத்தொடங்கியது.

அதனை அரசாங்கமும் சரியா முறையில் பயன்படுத்தி சில காரியங்களை செய்துகொண்டதால் முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என தமிழர்கள் சிந்திக்கவும் தமிழர்கள் தான் செய்தனர் என முஸ்லிம்கள் சிந்திக்கவும் ஏற்ற வகையில் தமது இராணுவத்தை பயன்படுத்தி அரசாங்கம் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதன் காரணமாக தமிழ், முஸ்லிம் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு தற்போதைய நிலையில் ஏப்ரல் 21ற்குப் பின்னர் முஸ்லிம் மக்களை நம்ப முடியாது என முழு இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றார்.

இதில் தமிழ் மக்கள் கூட்டணி கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.சிற்பரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

12 comments:

  1. ஓகோ நீங்கள் காணியை விற்பதனால் நாங்கள் வாங்கிரோம்,நீங்கள் விற்கா விட்டால் யாரும் வாங்க போவதில்லை.இவருடைய பேச்சை பார்த்தால் சிரிப்பு வருகிறது.எங்களுக்கு தனி நாடு தேவையில்லை அப்படி இருக்க உங்கலுடன் சேர்ந்து தனி நாட்டுக்காக போராட என்ன தேவை எமக்குல்லது.அய்யா,நீங்கள் 35 வருடங்களாக தனி நாடு கேட்டு போராடி எதை சாதித்தீர்கல்.அப்பாவி மக்கள் லட்சக் கணக்கில் கொல்லப்பட்டும்,Sri Lanka வின் பொருளாதாரம் அழிந்ததே தவிர வேறு எதுவுமே கிடைக்கவில்லை.

    ReplyDelete
  2. விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் முஸ்லீம்கள் பற்றிய புரிதல்களில் மிகவும் தவறான உள்ளீடுகள் காணப்படுகின்றன. வரலாறு தெரிந்த முஸ்லிம் ஆராச்சியாளர்கள் எம்மிடையே மிகவும் அதிகமானோர் இருக்கின்றனர். தயவுசெய்து அவர்கள் ஐயா அவரகளுக்கு சரியான புரிதலை வழங்க முன்வருவார்களா? முதலில் அரசியலாளர்கள் வரலாறுகளை இடத்துக்கு இடம் மாற்றி மாற்றி பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. விக்னேஸ்வரன் அவர்களுக்கு, தங்கள் ஆட்ச்சிக் காலத்தில் வடபகுதி முஸ்லிம் அகதிகளின் / யாழ்ப்பாணம் முஸ்லிம் அகதிகளின் நிலங்கள் உல்லாசவிடுதி கட்ட துஸ்பிரயோகம் செய்யபட்டது. உங்களால் முஸ்லிம் அகதிகளின் மீழ்வரவும் அபிவிருத்தியும் மோசமாக புறக்கணிக்கப்பட்டது. அதற்க்காக குறைந்தபட்ச்சம் மனிப்பு கோருங்கள். முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசினால் அடுத்த தேர்தலில் வெற்றிபெறலாம் என்கிற தவறான நம்பிக்கையால் இனவாதம் பேசாதீர்கள்.

    ReplyDelete
  4. Rizard Thambi, Can you do it please.

    ReplyDelete
  5. Suhood bro I will explain to mr.vicky! அய்யா விக்கி அவர்களே முதலில் நீங்கள் முதலமைச்சராக இருக்கும் போது வட பகுதி Muslim மக்கள் குடியேறிய போது நீங்கள் காட்டிய இனவாதமும் உங்கள் இனவாத பேச்சுக்கலும் இன்னும் எம் காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டுதான் உள்ளது.அய்யா விக்கி முதலில் 1915 ம் ஆண்டு நீங்கள்தான் Muslim களுக்கு எதிராக துரோகத்தை ஆரம்பித்து வைத்தீர்கல்.என்பதை நீதிபதியாகிய உங்களுக்கு நான் சொல்லித்தர தேவையில்லை.புலிகள் இயக்கம் ஆரம்பித்த போது கிழக்கில் அந்த இயக்கதுக்கு பணம்,பாதுகாப்பு,உணவு ஏன் எமது இலைஞ்ஞர்கலும் சேர்ந்து போராட்டத்துக்கு உதவினோம்.ஆனால் சில வருடங்கள் கழிய ஜரோப்பாவுக்கு அகதிகளாய் போன தமிழர்கலின் பணம் வந்ததும் செய் நன்ரி மறந்து Muslim களை தாக்கிய கோழை கதையும் உங்களுக்கு தெரியும்.இப்படியான துரோகங்கல் உங்கள் பக்கம் அதிகமாக நாங்கள் சிங்களவர்கலுடன் இனைய வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டோம்.ஆக வரலாறு நெடுகிலும் Muslim களுக்கு துரோகம் இழைத்து விட்டு இவ்வாறு பேச உங்களுக்கு கொஞ்ஞமாவது வெட்கம் இல்லையா? உங்களுக்கு தமிழரின் வாக்கு பிச்சை தேவை எனில் நேரடியாக அவர்களிடம் பிச்சை கேட்கலாம் அதை விட்டு விட்டு Muslim களின் மயிரை புடுங்க வேண்டாம்.இனியாவது உங்கள் மரியாதையை நீங்கள் தக்கவைத்து கொள்ளவும்.

    ReplyDelete
  6. இந்த மனிதன் கொடுத்த தீர்ப்பு எல்லாம் எபன்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று யாராவது யோசித்து பார்த்ததுன்டா??

    ReplyDelete
  7. இந்த மனிதன் கொடுத்த தீர்ப்பு எல்லாம் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று யாராவது யோசித்து பார்த்ததுன்டா??

    ReplyDelete
  8. உங்களோடு சேர்ந்து இயங்கிய முஸ்லிம்களை முதுகில் குத்திய துரோகம் தான் முஸ்லிம்கள் உங்களை விட்டு பிரிய காரணம். மசூர் மெளானாவின் கால கதையும் சொல்லி முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கும் இவன் அதற்கெல்லாம் முதலே சிங்கள இனவாதிகளுக்கு கூட்டிகொடுத்து முஸ்லிம்களை எதிர்த்த பொன்னம்பல இராமநாதனை பற்றி மறந்தது தான் வேடிக்கை. தமிழர், முஸ்லிம் பிரிவிற்கு தூபமிட்டவனே பொன்னம்பலம் இராமநாதன் தான்

    ReplyDelete
  9. கூட்டமைப்பு விட்ட தவறே இவரை வடக்குக்கு எடுத்தது ராஜபக்ஷ வை மகிழ்விக்க ஜனாதிபதி தேர்தலில் வேறு போட்டி இட்டு தமிழர் வாக்குகளை பிரிக்க போகிறார் ..

    ReplyDelete
  10. nee tamilargala patti pesa unakku enna thaguthi irukku

    ReplyDelete
  11. பிரிந்து விட்டார் வரட்டுக் கெளரவத்தைக் பாதுகாத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டும். இனவாதத்தில் தஞ்சமடைந்துள்ளார். நிம்மதி இழந்து தவிக்கும் கவலைப்படவேண்டிய ஜீவன். சிங்கள மக்கள் ஞான தேரவுக்கு வாக்களிக்கவில்லை. தேர்தல்கள் வரும்போது தமிழ் மக்களின் முடிவில் தெரியும் முஸ்லிம்கள் தமிழர்களுடன் சேர்ந்து செல்வதா? அல்லது சிங்களவர்களுடன் சேர்ந்து செல்வதா? என்பது.

    ReplyDelete

Powered by Blogger.