Header Ads



இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கமாட்டோம் - அமெரிக்கா

இலங்கையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை. இலங்கையுடன் எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அது இலங்கையின் இறையாண்மைக்கு முழுமையான மதிப்பை வழங்கும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா 'படைகளின் நிலைப்பாடு' தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கையிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்று ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மறுப்பு வெளியிட்டுள்ளார். 

குறித்த பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதுவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இலங்கையில் அமெரிக்க இராணுவ தளமொன்றை அமைக்கும் திட்டமோ அல்லது நோக்கமோ இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

1 comment:

  1. அமேரிக்க இலங்கையில் தளம் ஒன்று அமைத்தால் தான் ISIS யிடம் இருந்து இலங்கையை எதிர்காலத்தில் பாதுகாக்க முடியும்.

    ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.