July 21, 2019

தமிழர்களின் காணிகளை கூடிய விலைக்கு, முஸ்லிம்கள் கொள்வனவு செய்கிறார்கள் - விக்னேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் தன்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும், மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் சென்ற இடங்கள் எல்லாம், காணிகள், உரித்துக்கள் பறிபோகின்றதாகவும், இதற்கு காரணமாக முஸ்லிம்கள் இருப்பதாகவும் மக்களால் என்னிடம் கூறப்பட்டது.

அதாவது குறைந்த விலையில் உள்ள காணிகளை கூடிய விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகின்றது. எமது மக்கள் ஏதோவொரு காரணத்திற்காக விற்பனை செய்து விட்டு சென்றார்கள் என்றால் அந்த இடத்தில் வந்து முஸ்லிம்கள் குடியிருக்கின்றார்கள்.

வறுமையின் காரணமாக எமது பெண்கள் மதமாறுவது பிரச்சினையாக உள்ளது. இதனால் எமது உரித்துக்கள் பறிபோகின்றன. இவற்றுக்கெல்லாம் எவ்வாறு முகம்கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நாங்கள் எங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் பலமாக இருந்தால் எங்கள் பெண்கள் வெளியில் போக மாட்டார்கள், எங்களது காணிகளை மற்றவர்கள் கொள்வனவு செய்வதற்கு அவசியம் இருக்காது.

ஏனெனில் நாம் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமைக்கு வந்தால் எமது காணிகளை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஏழ்மை நிலையில், வசதியற்ற நிலையில் இருந்தோமானால் மற்றவர்களின் சதிக்குள் செல்ல வேண்டிய நிலைவரும்.

தங்கள் வாழ்க்கை நிலைமையை மாற்ற சகலதையும் செய்ய வேண்டும். உங்கள் கிராமத்தை முன்னேற்ற நீங்கள் முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எங்களால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும்.

புதிய வாழ்க்கையை கொண்டு வரவுள்ளோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். அத்தோடு பொறுமையும் இருக்க வேண்டும். எங்களுடைய கனிய வளங்களை பெறுவதற்காக மக்களிடம் பல பொய்களை கூறி வளத்தினை பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

எனவே இதனை எவ்வாறு தடை செய்யலாம், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம், இதனை பாதுக்காக என்ன செய்ய வேண்டும் என்று பல கோணங்களில் இருந்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எமது தமிழ் மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எல்லாம் போய் விட்டது இனி என்ன நடக்கப் போகின்றதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளதை நான் காண்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுவேந்திரன், ஊடகம் மற்றும் செயற்றிட்ட ஆக்க உப செயலாளர் த.சிற்பரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

11 கருத்துரைகள்:

இவன் லூசா இல்ல ல்லூசு மாதிரி நடிக்கிறானா? கேனை காசு கொடுத்துதானே வாங்குறான், இலங்கையில் யாரும் யாருடைய காணியை வாங்கவோ விற்கவோ கூடாதுன்னு சட்டம் இருக்கா? இல்ல இன்னார் இன்னாருக்கு மட்டும் தான் விற்கனும்ன்னு சட்டம் இருக்கா? இப்படி பேசுவது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானதுன்னு முன்னாள் நீதிபதி இந்த லூசுக்கு ஏன் தெரியாமல் போனது. முடிந்தால் உங்கள் ஆட்களிடம் சொல் விற்க வேண்டாம்ன்னு. ஏன் வாங்கினேன்னு கேட்காதே அதற்கு உனக்கு உரிமை இல்லை.

முதலில் நாம் அனைவரும் இந்த நாட்டின் மக்கள், யார் வேண்டுமானாலும் எங்கும் நிலத்தினை வாங்கி குடியிடுக்கலாம். அதனை தடுப்பதும் ஒருவகை மாதவதேமே. இந்த நாட்டில் மதரீதியான சனத்தொகைக்கும் நிலயிருப்பாயும் பார்த்தால், 70% சிங்களவரகள் 60% நிலத்தையும், 10% தமிழ்ரகள் 38% நிலத்தையும் 10% முஸ்லீம் 2% நிலக்கட்டுப்பாட்டை மட்டுமே வைத்துள்ளார்கள். ஆகவே முஸ்லிம்களுக்குள்ள ஒரே தெரிவு புதிதாக நிலத்தை சிங்கவேரிடமோ அல்லது தமிழரிடமோ என்னவிலைக்காவது வாங்குவதுதான். இது பிழைஎன்றால் முஸ்லிம்கள் கடலில்தான் வீடு கட்டவேண்டும்.

இலங்கையில் எந்தவொரு தனி மனிதனும் தான் விரும்பிய மதத்தை பின்பற்றலாம், முஸ்லீம் யாரும் கட்டாய மதெமாற்றம் செய்யவில்லை, அதே நேரம் ஒரு தனிமனிதன் முஸ்லிமாக மாறவிரும்பினால் தடுக்கவும் கூடாது, அதற்காக யாரும் காசுகொடுத்து மாற்றுவதில்லை, அந்தளவு காசும் முஸ்லிம்களிடம் இல்லை. உங்கள் சமூகத்தை முன்னேற்ற முதலில் மதுசாரம் குடிப்பதை நிறுத்தி முஸ்லிம்களைப்போல் அதி காலையில் எழுந்து உழைக்க சென்றால் நிச்சயம் வறுமை நீங்கும்.

இவனுக்கு தேர்தல் பைத்தியம் முற்றி விட்டது.செருப்படி நாய்க்கி.வியாபாரம் Sri Lanka வில் சட்டரீதியானது.

கொழும்பில் சில பிளட்டுகளில் தமிழர்கள் மட்டுமே வாங்க முடியும் குடியிருக்க முடியும் கொழும்பு 15 ல் பல பிளாட்டுகளில் தமிழர் அல்லாதோர் வாங்க முடியாது குடியிருக்க முடியாது.

Just thinking about the decisions given by this racist

Hello are you a judge or trouble maker. Don't you know any Srilankan citizen, he is Muslim,Sinhalese or Tamils have right to purchase land or property according to his ability and his need. It is his civic right. Selling and purchasing is a business and it is not a crime or terrorism.

You talking of purchasing the land by Muslims,but not talk about how Tamils grabbed and plundered entire Jaffna Muslim's property. Gave only two hours to leave their home.How barbaric act is it? is not not terrorism and land grabbing?

திரு விக்னேஸ்வரன் அவர்களது கூற்றை ஒரு நாகரீகமான விமர்சகனாக நானும் விமர்சித்து வருகிறேன். யாப்பாண முஸ்லிம்களின் காணிகள் தமிழருக்கு விற்கப்படுவதை அனுமதிக்க வேண்டாமென இருபது வருடங்களுக்கு முன்னமே சரிநிகர் பதிரீகையூடாகவும் நேரிலும் புலிகளையும் அரச அமைப்புகளையும் வற்புறுத்திவந்திருக்கிறேன். திரு விக்னேஸ்வரன் முதல்வராக இருக்கும்போதும் முஸ்லிம்களின் காணி தமிழரால் வாங்கபட்டதுடன் கோட்டல்போன்ற மக்கள் வசிக்கும் இடங்களில் கட்டக்கூடாத அமைப்புகளும் கட்டப்பட்டுள்ளது. இவற்றுக்கு திரு.விக்னேஸ்வரன் பதில் சொல்ல வேண்டும். ஆனால் தமிழர்களின் தலைமைப்பதவியில் இருந்த திரு விக்னேஸ்வரனையோ அல்லது வேறு தமிழ்,முஸ்லிம் தலைவர்களையோ நாகரீகமின்றி இனவாத ரீதியாக விமர்சிக்க யாழ் முஸ்லிம் சஞ்சிகை அனுமதிக்கக்கூடாது.

election talk. dont mind him.

இவர் வரலாற்றை மறந்துவிட்டாரா என்ன ? அல்லது இவருக்கு வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்ற வரலாறும் அதன்பின்னர் முஸ்லிம்கள் அவர்களால் தமது பூமிக்கு மீழத்திரும்ப முடியாது என்ற நம்பிக்கையை இழந்திருந்தபோது அவர்களின் சொத்துக்கள் தமிழ் மக்களால் அற்பசொற்ப விலைகொடுக்கப்பட்டு வாங்கப்பட்டு அவர்களுடைய வாழ்வுரிமை மறுக்கப்பட்ட வரலாறு இவருக்குத்தெரியாதா என்ன ???

நியாயப்படி பாரத்தால் - தமிழ்மக்களால் அவ்வாறு வாங்கப்பட்ட முஸ்லிம்களுடைய அத்தனை சொத்துகளும் இப்போது மீழளிக்கப்படல் வேன்டும்.

விக்னேஸ்வரன் உண்மையானவராக இருந்தால் இதனைச் செய்து காட்டத் தேவையில்லை - ஏனெ்ன்றால் அதனை இவர் செய்யவே மாட்டார் - ஆகக்றைந்த பட்சம் இதற்காக அவர் குரல் கொடுக்கவாவது சொல்லுங்கள் பார்ப்போம் அவரிடம்.

அகதிகளாக வெளியேற்றபட்ட யாழ் மற்றும் வடமாகாண முஸ்லிம்களின் காணிகள் தமிழர்களால் வாங்கபட்டிருந்தால் அவற்றை வடபகுதி முஸ்;லிம்களுக்கு வாங்கிய விலைக்கு விற்கும்படி மனச்சாட்ச்சியின்படியும் சட்டங்களூடாகவும் நிர்பந்திக்கப்பட வேண்டும்.அல்லது அரசு அவற்றை கைபற்றி முஸ்லிம்களின் பொதுத்தேவைக்கு பயன்படுத்த வேண்டும்.

Post a Comment