Header Ads



தமிழ் கூட்டமைப்பின் அரசியலுக்கு, முஸ்லிம்களை பலியாக்க முடியாது - ஹரீஸ் ஆவேசம்

நாட்டுக்கு வெளியே உள்ள சிலரின் அஜந்தாக்களை யார் ஆதரித்து நாட்டை காட்டிக் கொடுக்க முனைந்தாலும், நாட்டை சீரழிக்க எங்களால் அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைஉறுப்பினர்களினதும்,கல்குடா தொகுதி மக்களினதும் குறைகேள் சந்திப்போன்று நேற்று (05) மாலை  ஓட்டமாவடியில் அமைப்பாளர் இஸ்மாயில் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது. 

இங்கு கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்  மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் குறைநிறைகளை ஆராய்ந்த வேளை மக்கள் கருத்துக்களை செவிமடுத்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கலந்துகொண்டு கருத்து தெரிவித்து மக்கள்
---------------------------------------------------------------

2700 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறத்தாள மூன்றில் ஒரு பங்கு முஸ்லிங்கள் வாழ்கிறார்கள். விகிதாசாரத்தின்படி குறைந்தது 700 சதுர கிலோமீட்டர் அளவிலாவது காணி இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வெறும் 20 கிலோமீட்டர் பரப்பு மட்டுமே முஸ்லிம் மக்களுக்கு காணி இருக்கிறது. அதிகமான மக்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ளார்கள். 

இங்கு வாழைச்சேனையை மையமாக வைத்து ஒரு பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.  எங்களுடைய காணிகளை கிரான், வாகரை போன்ற பிரதேசங்களின் எல்லைக்குள் உள்வாங்கி எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  சகல முஸ்லிம் எம்.பிக்களும் ஒன்றிணைந்து எங்களது காணிகளையும், உரிமைகளையும் பெற்றுத்தர முன்வர வேண்டும். 

இந்த மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா போன்ற இடங்களில் முஸ்லிங்கள் செறிந்து வாழ்கிறோம். எங்களுக்கு நிம்மதியாக சுவாசிக்க கூட முடியாமல் உள்ளது. குடிநீர், மேய்ச்சல் தரை போன்றவற்றில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் வஜிர அபேவர்த்தன எங்கள் பிரச்சினையை அமைச்சராக இருந்த மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடாக பேசியிருந்தும் தேர்தல் காரணமாக அது கிடப்பில் போடப்பட்டது என பல பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்கள் பேசினர். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்,

உங்களின் பிரச்சினைகளை தீர்க்க எடுக்கவேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குவங்கி அரசியலுக்கு முஸ்லிங்களை பலியாக்க முடியாது. நல்லிணக்கத்தை விரும்புவதால் எமது தலையில் ஏறி யாரையும் பயணிக்க அனுமதிக்க முடியாது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குவங்கி அரசியலுக்கு முஸ்லிம்களை பலியாக்க முடியாது. நல்லிணக்கத்தை விரும்புவதால் எமது தலையில் ஏறி யாரையும் பயணிக்க இனியும் அனுமதிக்க முடியாது. 

பாராளுமன்ற தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்பதனால் எவ்வித உடன்படிக்கையையும் செய்யாமல் ஆதரவு வழங்கியது போன்று இனிவரும் காலங்களில் அப்படி செய்ய முடியாது. 

தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒப்பிடும் போது கல்முனை பிரதேச செயலக பிரச்சினை சிறிய பிரச்சினை. அதை பூதாகரமாக மாற்றி தேசிய பிரச்சினையாக காட்டுகிறார்கள். கல்முனை பிரச்சினை போன்றே தோப்பூர்,  பிரதேசம் இன்னும் பல இடங்களில் அதே பிரச்சினை இருக்கிறது. 

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபயவாக இருந்தாலும் சரி சஜித் பிரமதாஸவாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் புதிய அரசாங்கம் ஒன்று அமையும் போது  மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க அனுமதிக்க கூடாது. அதை நாட்டை நேசிக்கும் எங்களால் அனுமதிக்க முடியாது. 

திருகோணமலை மாவட்டத்தில் 45 சதவீதம் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு அமெரிக்க இராணுவ தளம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு இராஜதந்திர சலுகைகள் வழங்கினால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இப்போது இப்படியான அஜந்தாக்களை நிறுவி பின்னர் வடக்கையும் கிழக்கையும் இணைக்க கட்டளை பிறப்பிக்கப்படும். அமெரிக்காவின் கோரிக்கைகளை  நிராகரிக்க முடியாமல் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் எமது நிலை என்ன? இணைக்கப்பட்ட வடகிழக்கில் நாம் எப்படி வாழ்த்தோம். என்பதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. அதனை பிரிக்க நாம் கடுமையாக பாடுபட்டு பிரித்தோம். இனியும் அப்படி ஒரு தவறை செய்ய இடமளிக்க முடியாது. மக்களுக்கும் நாட்டுக்கும்  நல்லது எது என்பதை சிந்தித்தே இனிவரும் காலங்களில் முடிவு எடுக்கப்படும் என்றார். 

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா இணைப்பாளர் அன்வர் நௌஷாத், பிரதேச சபை உறுப்பினர்களான  தையுப் ஆசிரியர், எம்.ஐ. காமித் லெப்பை, ஏ.எல்.ஏ.கபூர், எம்.ஐ. இம்தியாஸ், அமைப்பாளர் இஸ்மாயில் ஹாஜியார், மு.கா வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

(எஸ்.அஷ்ரப்கான்)

1 comment:

  1. See the kachcheri administration at Ampara. Compare with batticalo. There are no even an AGA as represent the muslMu community at kachcheri

    ReplyDelete

Powered by Blogger.