Header Ads



ரிசாட் பதியுதீனை கைது, செய்ய விடாமல் தடுப்பது யார்..?

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு நாங்கள் தெரிவித்திருக்கும் கொலை, ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களே போதுமானதாகவும். ஆனால் அவரை கைது செய்ய விடாமல் யார் தடுக்கின்றார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொரளையில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரிசாட் பதியுதீனின் மனைவியின் வங்கிக்கணக்கில் 5 கோடி ரூபா பரிமாற்றப்பட்டு வந்மை தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றது.

என்றாலும் இவ்வளவு பாரிய தொகை தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றபோதும் அவரின் மனைவி இன்னும் சுதந்திரமாகவே செயற்பட்டு வருகின்றார். அதனால் பொலிஸார் இந்த விடயங்களை சாதாரணமாக கருதாமல் முறையான விசாரணையை மேற்கொள்ளவேண்டும்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கடந்த 2010/ 2013 காலப்பகுதில் மன்னார் மாவட்டத்தில் 68 காணி உறுதிகளில் 6 ஆயிரத்து 568 ஏக்கர் காணிகளை தனக்கும் தனது குடும்பத்தினர் மற்றும் தனக்கு நெருக்கமான சிலரது பெயருக்கு கொள்வனவு செய்திருக்கின்றார்.

குறித்த காணித் துண்டுகள் அனைத்தும் அந்த பிரதேசத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானதாகும். அவர் அந்த மக்களிடமிருந்து அச்சுறுத்தியும் பெறுமதியைவிட அதிக பணம் கொடுத்துமே பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் 3ஆயிரம் ஏக்கர் காணி குறித்த ஒரு பிரதேசத்திலிருந்து மாத்திரம் கொள்வனவு செய்திருக்கின்றார். ஏனைய காணிகளை மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கொள்வனவு செய்திருக்கின்றார். அதேபோன்று அவருக்கு புத்தளத்திலும் கேரளாவிலும் காணிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுதொடர்பிலும் நாங்கள் தேடிவருகின்றோம் என்றார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ரிசாட் பதியுதீன் சாட்சியமளிக்கும்போது, தனக்கும் தனது குடும்பத்துக்கும் 55 ஏக்கர் காணி மாத்திரமே இருப்பதாகவும் மேலதிகமாக இருந்தால் அதனை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் தெரிவுக்குழுவில் தெரிவித்த விடயங்கள் அனைத்தும் பொய். அவருக்கு எதிராக நாங்கள் தெரிவித்திருக்கும் கொலை, ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள், அவரை கைதுசெய்வதற்கு போதுமானதாகும். ஆனால் அவரை கைதுசெய்ய விடாமல் யார் தடுக்கின்றார் என்பதை தேடிப்பார்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.