Header Ads



ரணிலை சந்தித்தபின், ரஞ்சனின் நிலைப்பாடு இதுதான்..!

நான் தேரர்களை இழிவுபடுத்தும் விதத்தில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதால் மன்னிப்பு கேட்பதற்கான எந்த தேவையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மாலை சந்தித்து பேசியிருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

நான் தேரர்களை இழிவுபடுத்தும் விதத்தில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அதனால் மன்னிப்பு கேட்பதற்கான எந்த தேவையும் இல்லை என்றார்.

முன்னதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விகாரைகளிலுள்ள பெளத்த தேரர்களை அமைதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளிக்குமாறு ரஞ்சன் ராமநாயக்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று அலரி மாளிகைக்கு சென்று பிரதமரை சந்தித்து தனது கருத்துக்களை தெரிவித்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

1 comment:

  1. This is where the politics mixes with the reality. Budhist monks are not accepting the fact that there are blacksheeps in their groups. Well done Ranjan!

    ReplyDelete

Powered by Blogger.