Header Ads



பிரதமர் அலுவலகம், முலிடம் பெற்றது

அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தும் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின் விசேட செலவின பிரிவின் கீழ் உள்ள 838 நிறுவனங்களில் பிரதமரின் அலுவலகம் முதலிடம் பெற்றுள்ளது.

பிரதமர் அலுவலகம் 100க்கு 100 புள்ளிகளை பெற்று முதலிடத்திலும், கணக்காய்வு திணைக்களம் இரண்டாவது இடத்திலும், இலங்கையின் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு மூன்றாம் இடத்திலும் உள்ளன.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் உட்பட அரசாங்கத்தின் விசேட செலவின் பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 109 நிறுவனங்கள் விசேட அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன.

அமைச்சுக்களில் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, திணைக்களங்களுக்கிடையில் திறைசேரி செயல்பாட்டு திணைக்களம் மற்றும் மாவட்டச் செயலகங்களில் கம்பாஹா மாவட்ட செயலகம் ஆகியவை முதலிடத்தை பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் விருதுகளை வழங்க உள்ளார்.

No comments

Powered by Blogger.