Header Ads



பெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை

சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இளம் பெளத்த துறவிகளை பாதுக்காக வேண்டியது அவசியமாகுமெவும் எய்ட்ஸ் தொற்றுநோய் தடுப்புப்பிரிவுப் பணிப்பாளர் Dr. நிமால் எதிரிசிங்கவை மேற்கோள்காட்டி சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பரபரப்பு குற்றச்சாட்டை முவைத்துள்ளார்.

பிரபல பாடகர் இராஜ் விக்கிரமரத்ன தனக்கெதிராக வெளியிட்ட சர்ச்சைக்குரிய செய்தி தொடர்பில் எழுந்துள்ள விமர்சனத்தையடுத்து கடந்த சில திங்களாக தனக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சேறு பூசும் செயற்பாடு தொடர்பில் விசாரணை நடாத்தக்கோரி நேற்று 18.07.2019ம் திகதி வியாழக்கிழமை மீரிகான பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த அவர், ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த கருத்துக்கள் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பீதியைத் தோற்றுவித்துள்ளதுடன், பெளத்த துறவிகள் மீதான அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்திள்ளன.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,

நான் சொல்லாததை சொன்னதாக ஊடகங்களில் வெளியிட்ட கலைஞர் இராஜ் விக்கிரமரத்னவுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளேன். அவர் விசாரிக்கப்பட வேண்டும். அத்துடன், என் மீதான அபாண்டத்திற்கு எனது சட்டத்தரணியூடாக மான நஷ்டயீடு கோரி வழக்குத்தாக்கல் செய்யவுள்ளேன்.

அத்துடன், பெளத்த மக்களிடத்திலுள்ள எனது செல்வாக்கை இல்லாமல் செய்யும் முயற்சியாக இதனை என்னால் பார்க்க முடிகிறது. என் மீதான குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கலாகும். இராஜ் அரசியல் கொந்துராத்து வேலையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், பெளத்த போதனை மேற்கொள்ளாமல் பாதையில் இறங்கி மற்றவர்களைக் கொல்வோம், அடிப்போம் என ஊழையிடும் மத உடை அணிந்த மதகுருமார்களையே நான் விமர்சிக்கிறேன், உண்மையான பெளத்த தேரர்கள் என் மீது எந்தக்குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை. வெறுமனே பச்சை குத்திக்கொண்டு பொலிஸ் மாஅதிபரின் தொலைபேசியை களவாடி, சிறைத்தண்டனை பெற்ற, சிறுவர் துஷ்பிரயோகம் செய்த, பாலியல் செயற்பாடுகளை மேற்கொண்டோரே என் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறான சுமார் 600 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் செலுத்திய மதகுருமாரின் வழக்கு தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளன. இவ்வாறானவர்களுக்கெதிராக யாராவது கிளர்ந்தெழ வேண்டிய அவசியம்

யாரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பிலும் நான் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. பொது மக்களின் சொத்துகளை சூரையாடி, வங்கிக்கொள்ளைகளில் ஈடுபட்டோர் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளேன்.

எய்ட்ஸ் (HIP) நோயுள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த மதகுருமார் நாட்டில் உள்ளனர். அவர்கள் தினமும் நாரஹேன்பிட்டியிலுள்ள வைத்தியசாலைக்கு தமது மதகுருமார் அணியும் ஆடையைக் களைந்து விட்டு சாதாரண டெனிம் மற்றும் தொப்பி அணிந்து வந்து சிகிச்சை பெறுவதாக எய்ட்ஸ் தொற்றுநோய் தடுப்புப்பிரிவுப் பணிப்பாளர் Dr. நிமால் எதிரிசிங்க குறிப்பிடுகிறார்.

இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும், இவ்வாறானவர்களிடமிருந்து ஏதுமறியாத சின்னஞ்சிறு பெளத்த மதகுருமார்களை காப்பாற்றவே நான் குரல் கொடுக்கிறேன்.

அதுமட்டுமன்றி, பாதிக்கப்பாட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்காக இன, மத பேதமின்றி குரல் கொடுக்கிறேன். எனக்கான வாகன கொள்வனவுப்பத்திர அனுமதியினைப்பெற்று அதன் பணத்தை எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் வைத்திய செலவுக்காகச் செலவிடுகின்றேன்,

எனக்கு அண்மையிலுள்ள பன்சலை மதருருவுக்கு எய்ட்ஸ் உள்ளது. அவர் அதற்கான சிகிச்சையைப் பெற்று வருகிறார். அதே நேரம், அதே பன்சலையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறுபராயமுடைய மதகுருமார்கள் உள்ளனர், இவர்கள் தொடர்பில் என்னால் எப்படிப்பேசாமல் இருக்க மூடியும்?

என்னிடம் சில பெண்கள் சொல்கிறார்கள் நாங்கள் காலையில் பன்சலைக்கு போய் அங்குள்ள மதகுருமார்களை வணங்குகிறோம். அவர்கள் இரவில் எங்களிடம் கும்பிடு போடுகின்றனர் எனச்சொல்கின்றனர். இந்த அவல நிலையை நாம் யாரிடம் போய்ச்சொல்வது?

தற்போது எனக்கெதிராக கூப்பாடு போடும் அனைத்து மதகுரு வேடம் தரித்தோரின் கோவைகளும் என்னிடமுள்ளன. அவர்கள் விமல் வீரவன்சவிடம் வாகனங்களைப் பெற்றுக்கொண்டமை, பெண்களுடன் தொடர்பில் உள்ளமை , ஓரினச்சேர்க்கை ஈடுபடுவது, பகலில் மத போதனையிலும் இரவில் பாலியலிலும் ஈடுபடுவது தொடர்பிலும் நாம் அறியாமலில்லை. அதற்கான போட்டோ, காணொளி ஆதரங்கள் என்னிடம் உள்ளன. அதுமட்டுமன்றி, கஞ்சா பாவனை, மற்றும் இன்னோரன்ன அனாச்சாரங்களின் முழு ஆதாரமும் உள்ளன,

இவைகளை நான் பேசுவதால் எனக்கு பல்வேறு பட்டப்பெயர்களை சூட்டி அழைக்கின்றனர், இது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறன பேச்சுகளை மதகுருமார் பேச முடியுமா? சாதாரண பொது மகன் மற்றும் என்னைப்போன்றவர்கள் பேச முடியும். தவறுகளைச்செய்ய முடியும், இதையே மதகுருமார்கள் செய்யலாமா?

நான் சாதாரண மனிதன் என்ற வகையில் பெண் தொடர்புகளை வைத்திருக்க முடியும். பெளத்த துறவிகள் இவ்வாறான தொடர்புகளை வைத்திருக்க முடியுமா? அப்படியானால், மதகுருமாருக்கும் சாதாரண மக்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடும்.

எந்த மதகுருவாவது பகிரங்கமாக ஊடகங்களில் வந்து தூசண வார்த்தைகளைப்பேச முடியுமா? எனது வாயைக் கிழிக்கப்போவதாக ஒரு மதகுரு குறிப்பிடுகிறார், இன்னொருவர் என் வாயை கல்லால் அடித்து சேதப்படுத்தப் போவதாக சொல்கிறார். மத அடையாளத்தை, மத ஆடையை அணிந்து கொண்ட மதகுருமார்களால் இவ்வாறெல்லாம் பேச முடியுமா?

அவ்வாறு பேச வேண்டுமாக இருந்தால், அல்லது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமாக இருந்தால், தமது மதகுரு வேசங்களையும் அந்த புனிதமான ஆடைகளையும் களைந்து விட்டு வாருங்கள். சிலர் மிகவும் பிரபல்யமான பெளத்த துறவிகளுடன் தம்மை ஒப்பிட்டுப் பேசுகின்றனர். அவர்களையும் இவர்களையும் எவ்வாறு ஒன்றாகப்பார்க்க முடியுமா?

மதிப்பிற்குரிய அவர்கள் இவர்கள் போன்று பொறியியல் திணைக்களத்தில் எரிபொருள் களவாடினார்களா? விமல் வீரவன்சவிடம் வாகனம் பெற்றார்களா? அப்பாவி சிங்கள மக்களுக்கு ஏசினார்களா? இவர்கள் எமது மதிப்பிற்குரிய பெளத்த தேரர்களுடன் தம்மை ஒப்பிட்டு தேச தியாகிகளாகப் பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் மது போதையில் வாகனம் செலுத்தினோமா, குடிபோதையில் வாகனத்தை செலுத்தியதால் சிறை சென்றோமா? அல்லது இவர்களைப்போல மதிப்பிற்குரிய முன்னாள் பெளத்த தேரர்கள் பெண்களுடன் தொடர்புகளைப் பேணினார்களா? ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்களா? கொள்ளையடித்தார்களா? வங்கிகளில் நடைமுறைக்கணக்குகளை வைத்திருந்து சொத்துச் சேர்த்தார்களா?

தயவு செய்து மதிப்பிற்குரிய முன்னாள் பெளத்த தேரர்களின் பெயர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யாதீர்கள் என வினையமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

புத்தபிரானின் உருவத்தைப் பார்க்கின்ற போது அந்த முகத்தில் ஒரு சாந்தமும் அமைதியும் காணப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிகிறது. அதே நேரம் இவ்வாறான துறவிகளின் முகங்களைப் பார்க்கின்ற போது, இறைச்சிக்கடைகளில் மாடு வெட்டுபவர்களின் முகங்களை விடவும் அகோரமாக உள்ளன, எந்தவொரு சாந்தமும் அமைதியும் அவர்கள் முகத்தில் இல்லை.

கொல்வோம். குத்துவோம், வெட்டுவோம் என வசனம் பேசும் மதகுருமார்களை உலகில் நான் எங்கும் கண்டதில்லை. இவ்வாறெல்லாம் பேசப்பேச பெளத்த மதத்தை மக்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள் என ஆக்ரோஷமாக தனது கருத்துக்களை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ராம நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


4 comments:

Powered by Blogger.