Header Ads



ரம்புட்டானை சுவைத்துவிட்டு, தோலை வீதியில் போடாதீர்கள் - உயிருக்கு ஆபத்தாகலாம்

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அந்தப் பகுதிகளில் நீக்கப்பட்ட ரம்புட்டான் தோல்களே இதற்கு காரணமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரம்புட்டான் உட்கொள்ளும் பலர் அதன் தோல்களை வீதியில் வீசிவிட்டு செல்வதனை பழக்கமாக்கி கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தோல்களில் தேங்கும் நீரில் டெங்கு நுளம்பு முட்டையிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக ரம்புட்டான் தோல்களை உரிய முறையில் சேகரித்து கழிவுப்பொருட்களுடன் சேர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயின் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.