Header Ads



முப்தி றிஸ்வியிடம் அன்பான வேண்டுகோள், பேசு பொருளாகியுள்ள ஜம்இய்யாவின் புதிய நிர்வாகத் தெரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்புப் பிரகாரம் அதன் நிறைவேற்றுக் குழுவின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். அவ்வகையில் கடந்த 2016.07.24ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்றுக் குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 2019.07.23 இல் முடிவடைய இருக்கும் நிலையில்; புதிய தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டம்; எதிர்வரும் 2019.07.13ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

1924ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தனது பயணத்தை சிறியதொரு வட்டத்துக்குள் ஆரம்பித்த ஜம்இய்யா இன்று பரந்து விரிந்த விருட்சமாக மாறி நாட்டுக்கும் உலகுக்கும் பயன்கொடுத்து நிற்கின்றது. அன்று பெருநாள் விவகாரத்துக்கு தலைமைதாங்கியவர்கள் இன்று இலங்கை வாழ் இருபத்து இரண்டு இலட்சம்  முஸ்லிம்களுக்கும் தலைமை தாங்கி நிற்கின்றனர். அண்மைக்காலமாக நிறுவனம் என்ற வகையில் ஜம்இய்யா  மிகவும் விமர்சனத்துக்குள்ளாகி வருவதுடன் தனிப்பட்ட முறையில் அதன் தலைவர்  றிஸ்வி முப்தியும் விமர்சிக்கப்படுகிறார். 'காய்க்கும் மரம்தான் கல்லெறி சில்லெறி படும்' என்ற பழமொழிக்குள் ஜம்இய்யா சிக்கிக்கொண்டது. 

ஆலிம்களுக்கு உலக விடயங்கள் எதுவும் தெரியாது என்று ஒதுக்கித் தள்ளும்; துறைசார்ந்தோர் பலர் அச்சபையின் உயர் மட்டக் குழுவில் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென  வேண்டி நிற்பது நல்லதொரு நகைச்சுவையாகும்.

வைத்தியர் சங்கத்தில், சட்டத்தரணிகள் சங்கத்தில், வியாபாரிகள் சங்கத்தில் தங்களையும் உயர்மட்டக்குழுவில் உள்வாங்க வேண்டுமென ஆலிம்களோ குறித்த சங்கத்தைச் சாராதோர் யாரேனும்; வேண்டி நிற்பதாய்த் தெரியவில்லை. ஆனால் ஆலிம்களின் சங்கமாகிய ஜம்இய்யத்துல் உலமாவில் மாத்திரம் எங்களுக்கும் இடம் வேண்டுமென ஆலிம்கள் அல்லாதோர் வேண்டி நிற்பது அதற்காக பல்வேறு உபாயங்களைச் செய்து நிற்பது எவ்வகையில் நியாயமாகும். சில நேரம் ஜம்இய்யத்துல் உலமா என்ற அரபுச் சொல்லுக்கு அர்த்தம் தெரியாததின் விளைவாகவும் இவ்வேண்டுதல்கள் அமைந்திருக்கலாம் என்பதால் அதன் அர்த்தத்தையும் இவ்விடம் சொல்லிவைக்கின்றேன். ஜம்இய்யத்துல் உலமா என்பது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை எனப் பொருள்படும். 

ஜம்இய்யாவின் தெரிவு முறை

1924ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜம்இய்யா 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டது. கூட்டிணைக்கப்பட்ட நிறுவனத்துக்கு அதன் நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்தும், வரையறுக்கும்  யாப்பொன்று இருந்தேயாகும். அவ்வகையில் ஜம்இய்யாவுக்கும் யாப்பொன்றுள்ளது. ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் தெரிவு முதல் மத்திய சபை, நிறைவேற்றுக் குழு, ஜம்இய்யாவின் உயர் பதவிகள், அதன் செயற்பாடுகள் நடவடிக்கைகள் அனைத்தும் அந்த யாப்பைத் தழுவியே நடைபெறுகின்றன.

பிரதேசக் கிளைத் தெரிவு

மூன்று வருடத்துக்கொரு முறை ஜம்இய்யாவின்  பிரதேசக் கிளைத் தெரிவு நடைபெறும். அத்தெரிவில் ஜம்இய்யாவின் அங்கத்துவம்; பெற்றவர்கள் மாத்திரம் கலந்துகொள்ள முடியும். அல் ஆலிம் சான்றிதழைப் பெற்றவர்களுக்கு மாத்திரமே ஜம்இய்யா அங்கத்துவம் வழங்கும்.  தெரிவு நடைபெறும் பிரசேத்தைச் சேர்ந்த ஜம்இய்யாவின் அங்கத்துவத்தைப் பெற்ற அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி அழைக்கப்படுவர். வருகை தந்தோர் மற்றும் தக்க காரணத்தைக் கூறி முன்னர் அனுமதி பெற்று வருகை தராதோர்களிலிருந்து சபையோர் தமக்கு விருப்பமான 25 ஆலிம்களை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வர். அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பிரதேசக் கிளையின் செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு மத்தியில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பதவி தாங்குநர்களைத் தெரிவு செய்து கொள்வர்.  

மாவட்டக் கிளைத் தெரிவு

ஒரு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரதேசக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உட்பட குறித்த மாவட்டத்தின் தெரிவுக்கு முன்னர் அம்மாவட்டத்தின் செயற்குழுவாக இயங்கிய உறுப்பினர்கள் மத்தயிலிருந்து  25 பேர் மாவட்டக் கிளையின் செயற்குழுவுக்கு  இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்து செய்யப்படுவர். அதன் பின்னர் மாவட்டக்கிளையின் செயற்குழு தங்களுக்கு மத்தியில் பதவி தாங்குநர்களைத் தெரிவு செய்து கொள்ளும். 

மத்திய சபைத் தெரிவு 

மாவட்டக் கிளைகளின் தலைவாகள்;, செயலாளாகள்;, பொருளாளாகள்;, மற்றும் தெரிவுக்கு முன்னர் பதவியிலிருந்த நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களைக் கொண்டமைந்ததே ஜம்இய்யாவின் மத்திய சபையாகும். மத்திய சபை உறுப்பினர்கள் தங்களுக்கு மத்தியில் 25 பேரை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஜம்இய்யாவின் உயர்மட்டக் குழுவாகிய நிறைவேற்றுக் குழுவுக்குத் தெரிவு செய்வர். மத்திய சபையால் தெரிவு செய்யப்படும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தங்களுக்கு மத்தியில் தலைவர், பிரதித் தலைவர், உப தலைவர்கள் ஐந்து பேர், செயலாளர், உப செயலாளர்கள் இரண்டு பேர், பொருளாளர், மற்றும் உப பொருளாளர்களைத் தெரிவு செய்து கொள்வர். இதுவே ஜம்இய்யாவின் உயர் மட்டக்குழுத் தெரிவாகும் முறையாகும்.

ஜம்இய்யாவின் உயர் பதவிகள்.

ஜம்இய்யாவின் யாப்பு கூறும் தெரிவு முறையின் பிரகாரம் அதன் அங்கத்துவம் பெற்ற யாரும் அதன் எத்தகைய பதவிகளையும் எவ்வித இயக்க, அமைப்பு பாகுபாடுகளுமின்றி வகிக்க முடியும். ஜம்இய்யாவின் அங்கத்துவம் பெற்ற ஒருவர் பிரதேசக் கிளையால் தெரிவு செய்யப்படும்போது அவர் மாவட்டக் கிளையின் உறுப்பினராகிறார். மாவட்டக்கிளையின் உறுப்பினர்கள் ஒருவரை அதன் தலைவராக, செயலாளராக, பொருளாளராக தெரிவு செய்யும் போது அவர் ஜம்இய்யாவின் மத்திய சபை உறுப்பினராகிறார். மத்திய சபை ஒருவரைத் தெரிவு செய்யும்போது அவர் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகிறார், நிறைவேற்றுக் குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர் எத்தகைய உயர் பதவிகளுக்கும் தெரிவாக முடியும். 

யாப்புத் திருத்தம்.

ஜம்இய்யாவின் அனைத்து அங்கத்தவர்களினதும் பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு யாப்பில் எத்தகைய மாற்றங்களையும் செய்ய முடியும் என்பதே ஜம்இய்யாவின் நிலைப்பாடாக இருந்தது. எனினும் கடந்த 2016 ஆண்டு கண்டியில் நடைபெற்ற அனைத்து அங்கத்தவர்களினதும் பொதுக் கூட்டத்தில் ஜம்இய்யாவின் அங்கத்தவர்கள் எண்ணிக்கை 7500 தாண்டியுள்ளதால் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டித் தீர்மானம் எடுப்பது பல்வேறு அசௌகரியங்களுக்கு காரணமாக அமையும் விடயம் கவனத்திற் கொள்ளப்பட்டதுடன்; யாப்பு மாற்றம் சம்மந்தமான கருத்துக்களை கிளைகள் ரீதியாக  அங்கத்தவர்களிடமிருந்து பெற்று பிரதேச, மாவட்டக் கிளைகளின் பதிவதாங்குநர்களின் பொதுக் கூட்டத்தில்  அதாவது சுமார் 900 பேர் ஒன்றிணைந்து மாற்றம் செய்ய முடியும் என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. 

ஜம்இய்யாவின் யாப்புத் தொடர்பில் அதன் அங்கத்தவர்கள் நிலைப்பாடு.

ஜம்இய்யாவின் செயற்பாடுகள், அதன் நடவடிக்கைகள், அதன் யாப்பு முறை தொடர்பில் ஜம்இய்யாவின் 7500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பூரணத் திருப்தியுடன் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் ஜம்இய்யாவின் பிரதேச, மாவட்டக் கிளைகள், மற்றும் அங்கத்தவர்கள் கூடும் கூட்டங்களில் இது தொடர்பாக எவ்வித விமர்சனங்களையும் என்னால் காண முடியவில்லை. 2018.11.19 கடந்த ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகம் தற்போது நடைமறையிலுள்ள யாபப்பில் மாற்றங்கள செய்யப்பட வெண்டுமெனக் கருதின் அறிவிக்குமாறு அனைத்துக் கிளைகளுக்கும் அறிவித்திருந்ததோடு 2019.04.07 ஆம் திகதி நடைபெற்ற மத்திய சபைக் கூட்டத்திலும் இது தொடர்பில் கருத்துக் கோரியது. அவ்விரு சந்தர்ப்பங்களிலும் யாப்புத் தொடர்பில் ஒரு சில அவதானங்கள முன்வைக்கப்பட்ட போதிலும் விமர்சிக்கும் அளவுக்கு எதுவும் முன்வைக்கப்படவில்லை. 

ஜம்இய்யாவில் ஆலிம்கள் அல்லாதோரின் பங்களிப்பு 

ஜம்இய்யா முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் தலைமை தாங்குவதால் அதன் நிhவாகக்குழுவில் துறைசார்ந்தவர்களும் உள்வாங்கப்படல் வேண்டும் என்ற் அர்த்தமற்ற கோஷம் ஒன்றும் எழுப்பப்படுகிறது. ஜம்இய்யாவின் அனைத்து நடவடிக்கைகளிலும் துறைசார்ந்த்வர்களின் அதிகபட்ச பங்களிப்பு இருந்துவருகின்றது. நாட்டின் பல்வேறு துறைகளிலும் உயர் பதவி வகிக்கின்ற மனத்தூய்மையுள்ள எத்தனையோ நல்லுள்ளங்கள் ஜம்இய்யாவுடன் இணைந்திருக்கின்றன. அதற்கு ஜம்இய்யாவின் யாப்போ அல்லது அதன் நிறைவேற்றுக் குழுவோ எவ்வித தடையுமில்லை. மாறாக அதனையே அவர்களும் விரும்புகின்றனர். துறைசாந்ர்தவர்களும் ஆலிம்களும் இணைந்தால்தான் இந்த சமூகத்தை வெற்றிகரமாக வழி நடாத்திச் செல்ல முடியும் என்பது மறுக்க முடியாத யதார்த்தம் ஆனால் அதற்காக உயர்மட்டக் குழுவுக்குள் துறைசார்ந்தவர்களும்; உள்வாங்கப்பட்டால்தான் சேவை செய்ய முடியும் என்பதை எந்தக் கோணத்திலும்  நியாயப்படுத்த முடியாது.

புதிய நிர்வாகத் தெரிவு தொடர்பில் மத்திய சபையின் கவனத்திற்கு

நாளைய தினம் பாரிய அமானிதம் ஒன்றை நிறைவேற்றப்போகின்றீர்கள். உங்களது பார்வையில் இவ்விடயம் பெரிதாகத் தெரியாவிட்டாலும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர்வரும் மூன்றாட்டுக்கான தலைமையத்துவத்தை தெரியும் நாளாகும். பல சவால்களைச் சந்திக்கும் திறனும், வளமும், ஆற்றலும், அல்லாஹ்வுடன் தொடர்பும் அவன் அச்சமும் உள்ளவர்களையே தெரிவு செய்ய வேண்டும். அதுவல்லாமல் இயங்கங்களின் பிரதிநிதிகள், எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்தக்காக மாத்திரம் தெரிவு செய்தால் நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்வது ஒரு புறம் இருக்க இந்த சமூகத்துக்கு வரலாற்று அநீதி இழைத்தவர்களாக மாறிவிடுவீர்கள்.  

ஜம்இய்யாவின் தலைவரை மாற்ற வேண்டும். 

ஜம்இய்யாவின் தற்போதைய தலைவர் 2003 முதல் பதவி வகிப்பதால் அவர் மாற்றப்பட வேண்டும். ஒரே தலைமைத்துவம் நீடிப்பது நிறுவனத்துக்கும் சமூகத்துக்கும் நல்லதல்ல என்ற மற்றுமொரு கூற்று பரவலாகப் பேசப்படுகிறது. யார் தலைவர் என்பதை நியமிக்கும் பொறுப்பு 7500 உலமாக்களின் பிரதிகளாகக் கலந்துகொள்ளும் மத்திய சபையின் கையிலிருக்கின்றது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் நல்லது செய்யும் ஒருவர் எத்தனை முறையும் தலைவராக வரலாம். ஜம்இய்யாவின் யாப்பு இதற்கு பூரண அனுமதியளிக்கின்றது. இஸ்லாமும் இதற்கு தடைவிதித்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் இன்றைய நிலைமைக்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவு செய்வது  மத்திய சபையாகிய உங்கள் கையிலுள்ளது. தற்போதைய தலைவர் பொருத்தம் எனக் கருதினால் அவரைத் தேர்ந்தெடுங்கள் இல்லையெனில் அவரைத் தூக்கி எறிந்து விட்டு பொருத்தமான ஒருவரைத் தெரிவுசெயயுங்கள். இது மத்திய சபையின் சுய விருப்பத்தில் அமைய வேண்டும். அதுவல்லமால் வெளியிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு பயந்து நல்லவரை விலக்கவும் கூடாது கெட்டவரை நீடிக்க விடவும் கூடாது. ஏனெனில் ஆடு நலைவதற்காக அழும் ஓநாய்கள் எமது சமூகத்தில் அதிகம். 

முப்தி றிஸ்வியிடம் அன்பான வேண்கோள்.

இந்தப்பொறுப்பு உங்கள் மிது மத்திய சபையால் சுமத்தப்பட்டால் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வெளியிலிருந்து வரும் அழுத்தங்களுக்காக பின்னடையாதீர்கள். ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பூரண உரிமை பெற்ற மத்திய சபை உங்களை மீண்டும் தலைவராகத் தெரிவு செய்து வெளி அழுத்தங்களுக்காக தாங்கள் ஏற்கத் தவறிவீட்டால் இந்த சமூகத்தின் நிலை என்னவாகும். 

-அஷ்-ஷைக் அஸ்மிர்.

14 comments:

  1. ACJ must be heeded by Islamic scholars not by any Tom and harry. My suggestion to ACJ to add the qualifications to become ACJ precedent on this AJM take approval.






    ReplyDelete
  2. Al hamdulillah..
    Good explanations...jazakumullahu khair

    ReplyDelete
  3. Very resourceful article.it is an organisation of ulema and only ulema should comprise the orgamisation.other intellectuals may be experts in their respective fields taking those inside this ulema would dilute the organisation and eventually it would lead to adlutertion and politics.

    ReplyDelete
  4. "The Muslim Voice" is only KINDLING the "aspirations and ispirations" of the Muslim community concerning this ACJU and Rizvi Mufthi in order to bring about a change and create a new "honest and dignified culture" within in the Sri Lanka Muslim Community. "THE MUSLIM VOICE" WISHES TO KEEP THISE ISSUES WITHIN OUR SELVES/OUR COMMUNITY AND GOING TO THE POLICE TO MAKE COMPLAINTS AS SUGGESTED BY YOU WILL COMPLICATE MATTERS FOR ACJU AND RIZVI MUFTHI. LOOK AT THE QUESTIONS RAISED AT THE PSC AND THE TV REGARDING THE TYPES OF EXPENSIVE VECHILES USED BY OUR ACJU MOULAVIS? Take a look at this note made by a learned Sri Lankan Muslim academic living abroad - Quote “To start with, ACJU must include within its hierarchy qualified men and women from other fields. The religious class has arrogated for too long the name ulama exclusively to itself. That name, which is simply the plural of alim, meaning a learned person, applies even to secularly educated intellectuals. Why aren’t secular experts admitted into ACJU? Once ACJU itself is reformed that body can become a progressive force to stimulate ” Unquote.
    All learned Sri Lankan Muslims and concerned Muslim vote bank/community should be “BOLD ENOUGH” to face the below stated “REALITY” and work towards correcting them, Insha Allah.
    "THE MUSLIM VOICE" has been asking "DUA" from God AllMighty Allah after every daily prayers and Jumma's since the manner in which the so-called Mufthi Rizvi, the incumbent president started to flirt with politicians and made a "MOCKERY" of the "HALAL ISSUE" to amaze millions of rupees for his personal gains and benefits with the support of "DECEPTIVE/MUNAAFIK" and "HOODWINKING" Muslim politicians and some professionals. The ACJU and Rizvi Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -1015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.
    The ACJU and Rizvi Mufthi should answer the questions raised by “The Muslim Voice” before talking about other matters. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk poder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. PLEASE KINDLY NOTE THAT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER. The Muslims in Sri Lanka need a "CHANGE" to the Leadership of the ACJU and our Political institutions, Insha Allah.
    Noor Nizam – Convener “The Muslim Voice”.

    ReplyDelete
  5. Mashallah excellent explanation

    ReplyDelete
  6. "The Muslim Voice" is only KINDLING the "aspirations and ispirations" of the Muslim community concerning this ACJU and Rizvi Mufthi in order to bring about a change and create a new "honest and dignified culture" within in the Sri Lanka Muslim Community. "THE MUSLIM VOICE" WISHES TO KEEP THISE ISSUES WITHIN OUR SELVES/OUR COMMUNITY AND GOING TO THE POLICE TO MAKE COMPLAINTS AS SUGGESTED BY YOU WILL COMPLICATE MATTERS FOR ACJU AND RIZVI MUFTHI. LOOK AT THE QUESTIONS RAISED AT THE PSC AND THE TV REGARDING THE TYPES OF EXPENSIVE VECHILES USED BY OUR ACJU MOULAVIS? Take a look at this note made by a learned Sri Lankan Muslim academic living abroad - Quote “To start with, ACJU must include within its hierarchy qualified men and women from other fields. The religious class has arrogated for too long the name ulama exclusively to itself. That name, which is simply the plural of alim, meaning a learned person, applies even to secularly educated intellectuals. Why aren’t secular experts admitted into ACJU? Once ACJU itself is reformed that body can become a progressive force to stimulate ” Unquote.
    All learned Sri Lankan Muslims and concerned Muslim vote bank/community should be “BOLD ENOUGH” to face the below stated “REALITY” and work towards correcting them, Insha Allah.
    "THE MUSLIM VOICE" has been asking "DUA" from God AllMighty Allah after every daily prayers and Jumma's since the manner in which the so-called Mufthi Rizvi, the incumbent president started to flirt with politicians and made a "MOCKERY" of the "HALAL ISSUE" to amaze millions of rupees for his personal gains and benefits with the support of "DECEPTIVE/MUNAAFIK" and "HOODWINKING" Muslim politicians and some professionals. The ACJU and Rizvi Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -1015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.
    The ACJU and Rizvi Mufthi should answer the questions raised by “The Muslim Voice” before talking about other matters. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk poder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. PLEASE KINDLY NOTE THAT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER. The Muslims in Sri Lanka need a "CHANGE" to the Leadership of the ACJU and our Political institutions, Insha Allah.
    Noor Nizam – Convener “The Muslim Voice”.

    ReplyDelete
  7. Looks like a Moulavi Rizvi mufti sympathiser has written this article. We can do research on Jammiyathul Ulamas in Muslim countries. The writer thinks he is the only one who is considered as Aalim in Islam. An Aalim can be a doctor, lawyer, engineer, teacher etc.

    ReplyDelete
  8. Dear ghouse...An Aalim can be a doctor,lawyer,engineer,teacher but A doctor,engineer or teacher can't become an aalim without the knowledge of quran and sunnah

    ReplyDelete
  9. Who is this noor nizam..repeatedly posting samething for a long time..Most of the people are not reading his big comments as it is always copied one..what he has done to this society...can he approach ACJU directly or court..Like our rathna thero he is always talking nonsense

    ReplyDelete
  10. A fool Gouse saying doctor is aalim

    ReplyDelete
  11. இந்த கட்டுரை முழுமையாக தவ்க்காரனால் எழுதப்பட்டவையாகும்.ரிஸ்வி முப்தி தான் பொருத்தமானவர் உலமா சபைக்கு ஒவ்வொருத்தர் சொல்லுறமாதிரி தலைவரை அடிக்கடி மற்ற முடியாது.

    ReplyDelete
  12. Masha Allah sirantha vilakkam

    ReplyDelete
  13. ACJU வின் தலைவராக 20 வருடங்கள் ஆற்றியசிறப்புப் பணி

    * கிண்ணியாவில் கண்ட பிறையை மறுத்து முஸ்லிம்கள் மத்தியில் பெருநாள் குழப்பம் ஏற்படுத்தியமை.

    * மத நல்லிணக்கம் என்ற பெயரில் அடிக்கடி மார்க்கத்தை விட்டுக்கொடுத்து கூனிக்குறுகி நிக்கின்றமை.
       உதாரணமாக, அண்மையில் தனது பரிவாரங்களுடன் கையில் விளக்கேந்தி வெசக்/பொசன் மத நல்லிணக்கம் காட்டியமை.

    இப்படியாக மார்க்கத்துக்காக அயராது உழைக்கின்றவரை ஆயுட்கால தலைவராக நாம் வைத்திருந்தே ஆக வேண்டும் 😢 😢 😢

    ReplyDelete
  14. Moulana's very famous for candles

    ReplyDelete

Powered by Blogger.