Header Ads



முஜிபுர் ரஹ்மான், கேட்டுள்ள முக்கிய கேள்வி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை யார் நியமித்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று -04- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பேர்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரனை நியமித்தமைக்கான பொறுப்பினை பிரதமர் ஏற்க வேண்டுமென உரக்கக் குரல் கொடுத்தவர்கள், ஹேமசிறியை யார் நியமித்தார் என்பது பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை?

அர்ஜூன் மகேந்திரனின் செயற்பாடுகளினால் நாட்டில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

எனினும், ஹேமசிறியின் செயற்பாடுகளினால் 250 பொதுமக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து நியமித்தவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.

பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டது தனியொருவரின் தேவைக்கு அமைய மேற்கொள்ளப்பட்டது என முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

1 comment:

  1. Exactly. All those who ignored the intelligence alert failed to protect the masses.

    ReplyDelete

Powered by Blogger.