Header Ads



கூறுபோடுவதற்கு கோடிஸ்வரனின் அப்பன் வீட்டு சொத்தல்ல கல்முனை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோடிஸ்வரன் சொல்வது போன்று கல்முனையை கூறுபோடுவதற்கு கல்முனை அவருடைய அப்பன் வீட்டு சொத்தல்ல. 

கல்முனைக்கான எல்லைகள் சரியான அடிப்படையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொருளாளருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்துள்ளார். 

சற்றுமுன் ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்முனை  எங்களது  அடையாளமாகவும் இருக்கிறது. இதனை அழித்து அவர்களுடைய தேவைக்கேற்ப பிரித்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. 

தமிழர் தரப்பினர் கேட்கின்ற நியாயமான எல்லையை ஏற்றுக்கொள்வோம், அதை பிரித்தும் கொடுப்போம். ஆனால் முஸ்லீம் சமூகத்தின் ஆள்புல எல்லைகள் மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்டாக வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் அரசை பயம்காட்டி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து காரியம் சாதிக்க நினைப்பது அவரது மடமைத்தனமாகும். 

முஸ்லிம் காங்கிரஸின் முட்டில்தான் இந்த அரசாங்கம் இன்னும் பயணிக்கிறது. முட்டை எடுத்து விட்டால் நடுவீதியில் இந்த அரசாங்கம் வரும் என்பதை அவர் உணர வேண்டும் என்றும் ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.   

4 comments:

  1. இவர்கள் இன்னும் இன்னும் கொக்கரித்தால் மஹிந்த நாம் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டியதை பற்றி சிந்திக்க வேண்டும்.மஹிந்த ஆட்சியில் பெட்டை கோழிகளாக முட்டையினை அடைகாப்பது போல் எங்கோ மூலையில் தூங்கிய அதிகமானோர் இப்போது நாம் அதிகாரத்துக்கு கொண்டு வந்த பொம்மகலின் ஆட்சியில் சேவலாக மாறிவிட்டனர்.எனவே அனைத்து Muslim கலும் சற்று சிந்தித்து மீண்டும் மஹிந்த கொண்டு வருவதால் எமது சமூகத்துக்கு வடக்கு/ கிழக்கிலும்,சரி Sri Lanka வின் அடுத்த மாகாணங்களில் சரி Muslim கலுக்கு சில நன்மைகள் உள்ளது போல் தென்படுகிறது.எனவே அடுத்த தேர்தலில் எமது மக்கள்,எமது அரசியல் வாதிகள் சற்று நிதானமாக,ஆழ யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய ஏ.சி.யஹ்யாகான் அவர்களுக்குமட்டுமல்ல கல்முனை தமிழர் பிரதி நிதியான கோடீஸ்வரனுக்கும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை பற்றி பேச உரிமை உள்ளது. எனவே மதிப்புக்குரிய ஏ.சி.யஹியாகான் முஸ்லிம் காங்கிரஸ் கட்ச்சியின் அனுசரணையுடன் கல்முனை மக்களின் பிரதிநிதிகளான மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களையும் மதிப்புக்குரிய கோடீஸ்வரன் அவர்களையும் சந்தித்து பேசவைத்து ஒரு இணக்கபாட்டை உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. இதனை விட்டால் எதிர்வரும் தேர்தலுக்கு வேறுயென்ன துரும்பு எங்களுக்கிருக்கின்றது, தமிழ் முஸ்லீம் பிரச்சினையிருக்கும் வரையில்தான் எங்களுக்கு அரசியல் நடத்தமுடியும்

    ReplyDelete

Powered by Blogger.