July 16, 2019

குவைத்திற்கு தொழிலுக்கு சென்று துன்பப்பட்டு, வெறுங்கையுடன் இலங்கை திரும்பிய சகோதரி


பணிப்பெண் வேலைக்காக குவைத் சென்ற எஹ்லியகொடவை சேர்ந்த மாரிமுத்து சுலோச்சனா என்ற நான்கு பிள்ளைகளின் தாயார் அங்கு எஜமானரால் துன்புறுத்தப்பட்டு வெறுங்கையுடன் நேற்று நாடு திரும்பினார்.

உடல்நலம் குன்றிய நிலையில் வந்த அவரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

குவைத் எஜமானர் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை பணிஸ் போன்ற உணவை தருவதாகவும் உணவு அல்லது ஊதியத்தை கேட்டால் அடித்து சித்திரவதை செய்வதாகவும் சுலோச்சனா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து தப்பியோடி குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்தாலும் அங்கு வந்த எஜமானர் நல்லவிதமாக பேசி திருப்பி அழைத்துச் சென்று அறை ஒன்றில் பூட்டி சித்திரவதை செய்ததாகவும் , ஊதியத்தை கேட்டால் அது இலங்கைக்கு அனுப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டதாகவும் சுலோச்சனா மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசரணைகளை செய்துவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இவருக்குரிய ஊதியத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

5 கருத்துரைகள்:

தனது தாய் பிள்ளைகளை வளர்த்தால்தான் தாய் பாசம் என்றால் என்ன என்று புரியும். பொதுவாக அரேபியா நாடுகளில் பிள்ளைகளைய் வளர்ப்பது ஆசியா மற்றும் ஆபிரிக்க நாட்டை சேர்ந்தே பணிப்பெண்களே.

இந்த சூழ்நிலையில் வளர்ந்த ஆண்களும் பெண்களும் ஒரு கொடூரமான மனநிலை கொண்டவர்கள், இவர்களாலே நமது நாட்டு பணிப்பெண்கள் தாக்கப்படுகின்றேனர்.

இன்ஷால்லாஹ் இந்த பெட்ரோலிய கனிமவளங்கள் குறைந்து அரபிகள் பிச்சை எடுக்கும் நிலை வெகு தொலைவில் இல்லை.

இந்த கொடூரமான மனம்கொண்ட அரேபியா பெண்களும் ஆண்களும் அழியட்டும் .

உண்மை Ahamed Nifras, இறைவனுக்கு பின்செல்கிறவர்கள் அரபு நாட்டுப் பணத்துக்குப் பின்செல்லமாட்டார்கள்.

பாவம் இப்பெண் இந்நாட்டில் தொழில் இல்லாதால் கஷ்டத்தினால் வெளிநாடுசென்றாவது உழைக்கவேண்டுமென்று சென்றவள், உழைத்துவாழவேண்டுமென நினைத்தவள், இவளுக்குயார் துணைநிற்கப்போகிறார்கள், அரசும் வெளிநாட்டுவேலைவாய்ப்புப்பணியாகமும் மத்திய கிழக்குநாடுகளின் கைப்பொம்மை, முதலாவதாக பெண்களை வெளிநாட்டுவேலைக்கு அதிலும் மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதனை சட்டரீதியாக தடைசெய்யவேண்டும், ஏனெனில் அந்நாடுகள் ஜனநாயக நாடுகளல்ல, ஆட்சியாளர்கள் மக்களால் தெரிவானவர்களுமல்ல, அவர்களின் அரச ஆட்சிக்காக இஸ்லாமியச்சட்டங்களை சாக்காக வைத்திருப்பவர்கள், ரிசானா என்னும் 17 வயது ஏழைச்சகோதரிக்கு மரணதண்டனை விதித்த அக்கொடூரம் இன்னும் எம்கண்முன்நின்று மறையவில்லை, அவளும் ஒரு குழந்தையாகத்தான் உழைக்கவேண்டிய கட்டாயத்தில் சவூதி சென்றவள், ஏன் எவ்வாறு ஜமால் கசோஜியைக்கொலைசெய்தார்கள், இன்றய உலகம் பணத்திட்குமுன் குருடாகவும் ஊமையாகவும் அடங்கிப்போய்விட்டது, ஏன் அமெரிக்காவே சவுதியின் பணத்திட்கு தலைகுனிந்திருக்கும்போது ஏனைய நடுகளைக்கேட்கவாவேண்டும், நாம் ஏன் இன்னும் இவ்வாறான செயல்பாடுகளுக்கு துணைபோகவேண்டும், எமது சகோதரிகளை நாம்தான் சட்டரீதியாகப்பாதுகாக்கவேண்டும்

இந்த தாய் உண்மையில் பாதிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் பலர் வேலைசெய்வதற்கான எந்த நோக்கமும் இல்லாமல் எஜமானனை ஏமாற்ற நினைப்பது எஜமானுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தி கையு மெய்ஞமாக அவனது மனைவியிடம் மாட்டுவது போன்ற பல சம்பவங்களும் இதற்குக் காரணமாக அமைகின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும். பணிப்பெண்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் அரிது அனால் இவை ஊடகங்களில் அவற்றின் பிரபலத்திற்காக சுட்டிக்காட்டப்படுவது கவனிக்கத்தக்கது

சகோதரர் Jiffry யின்பதிவு இந்தஇடத்திட்க்குப்பொருத்தமில்லையென நினைக்கிறேன், இதைத்தான் உமது சகோதரியாக இருந்தாலும் சொல்வீரோ? அல்லாஹ் எங்கள் செயலை மாத்திரமல்ல எங்கள் எண்ணங்களையும் கவனித்துக்கொண்டுதானிருக்கின்றான், அவனுக்குப்பயந்துகொள்ளுங்கள், இவ்வாறான செய்திகளை அதிலும் குறிப்பாக jaffnamuslim.com போன்ற முஸ்லிம்கள் அதிகம் பின்பற்றும் ஊடகங்கள் கட்டாயம் வெளிக்கொணரவேண்டும் அப்போதுதான் எமது சமூகத்திட்கு பெண்களின் வெளிநாடுவேலைவாய்ப்பென்றால் என்னவென்றுதெரியவரும், இன்னும் எமது சமூகத்தில் பெண்களைவேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தூங்குவோர் இருக்கின்றனர்

Post a Comment