Header Ads



கொழும்பில் மனித இறைச்சி, விற்பனை செய்யப்பட்டதா..?

கொழும்பு இரவுநேர கேளிக்கை விடுதியொன்றில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி ஆங்கில ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

கனடாவின், ஒட்டாவாவில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவிதமாக இலங்கை, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ட்ரினிடாட் அன்ட் டுபாகோ ஆகிய நாடுகளின் இரவுநேர கேளிக்கை விடுதிகளில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது.

எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் ஒரே செய்தி சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு நாடுகள், இடங்கள் மாற்றம் செய்யப்பட்டு போலியாக வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் சிலவற்றிலும் சமூக ஊடகங்களிலும் இந்த விடயம் தொடர்பிலான செய்திகள் வெளியாகியிருந்ததாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.