Header Ads



மைத்திரி - ரணிலின் தனிப்பட்ட கோபதாபங்களால், மக்களின் உயிரை பாதுகாக்க முடியாமல் போனது


ஜனாதிபதிக்கும் பிரமதமருக்குமிடையில் காணப்படுகின்ற தனிப்பட்ட கோபதாபங்களால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் போதுமானளவு தகவல் கிடைத்திருந்த போதிலும் அப்பாவி பொது மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்கவில்லை. இதன் மூலம் நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க முடியாத தலைவர்கள் தாம் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

ரணில் - மைத்திரி அரசாங்கம் கடந்த நான்கரை வருடங்களாக நாட்டை சீரழித்தது போதும். தொடர்ந்தும் இந்நாட்டை நிர்வகிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. எனவே அவர்களை ஆட்சியிலிருந்து தானாக பதவி விலகுமாறு கோரி ஜே.வி.பி முன்னெடுத்த மக்கள் பேரணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

' நம்பிக்கையை மீறிய அரசாங்கமே உடனே பதவி விலகு '  என்ற தொனிப்பொருள் ஜே.வி.பி நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள மக்கள் பேரணி இன்று இரண்டாவது நாளாக மொரட்டுவையில் முன்னெடுக்கப்பட்டது. 

களுத்துறையில் நேற்றைய தினதம் ஆரரம்பமான இந்த பேரணி 25 கிலா மீற்றர் பயணித்து இன்று மொரட்டுவை நகரை வந்தடைந்துள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

1 comment:

  1. UNP UDAYA ATHANAI KONDARAATHUHALAYUM.
    VETRIHAMAHA, MUDIKKUM KATCHI.
    J V P.
    IZAI THAVIRA J V P MAKKALUKKU,
    ENNA SHEVAI SHEIZAZU.

    ReplyDelete

Powered by Blogger.