Header Ads



கொழும்பில் சமாதான மாநாடு, உலக முஸ்லிம் லீக் செயலாளர் வருகிறார் - அஸ்­கி­ரிய பீடாதிபதி, மல்கம் ரஞ்சித்தும் பங்கேற்பர்

மக்கள் மத்­தியில் நல்­லி­ணக்கம், சமத்­துவம், சகோ­த­ரத்­துவம் மற்றும் இன ஐக்­கி­யத்தை வளர்ப்­ப­தற்கு எதிர்­வரும் 30 ஆம் திகதி கொழும்பில் சமா­தான மாநா­டொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு தாமரை தடா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்டில் அஸ்­கி­ரிய பீடம், மல்­வத்து பீடம், ராமன்ய நிகாய, அம­ர­புர நிகாய என்­ப­ன­வற்றின் சமயத் தலை­வர்­களும் கிறிஸ்­தவ மதத்­த­லைவர் கார்­டினல் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை, அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மற்றும் இந்து மதத் தலை­வர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செய­லா­ளரும் விஷேட பிர­தி­நி­தி­யாக கலந்து கொள்­ள­வுள்ளார்.

இச்­ச­மா­தான மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக கண்டி அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீட மகா­நா­யக்க தேரர்­களை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், மேல்­மா­காண ஆளுநர் எம்.ஜே.எம். முஸம்மில் மற்றும் இன ஐக்­கி­யத்­துக்­கான தேசிய வேலைத்­திட்­டத்தின் தலைவர் அப்­துல்­காதர் மசூர் மௌலானா ஆகியோர் நேரில் சந்­தித்து அழைப்பு விடுத்­தனர். இந்த சமா­தான மாநாட்டை அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும், மேல்மாகாண ஆளுநர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்யவுள்ளன.

இக்பால் அலி, காதிர்கான்

1 comment:

  1. நல்ல விடயம், இந்த மாநாட்டுக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் (சிங்களம்,அரபு,தமிழ் ) உள்வாங்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.