Header Ads



பல முஸ்லிம் கிராமங்கள், தமிழ் கிராமங்களாக மாற்றப்பட்டதே உண்மை - விக்னேஸ்வரன் கூறியதையும் மறுக்கிறார் ஹிஸ்புல்லாஹ்


முன்னாள் வடமாகாண முதலமைச்சர் கலாநிதி சீ.வி.விக்னேஸ்வரன் 300 தமிழ் கிராமங்களை முஸ்லிம் கிராமங்களாக மாற்றியுள்ளதாக வெளியிட்ட செய்தி தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவை பாதிக்கின்றது.

அவ்வாறு தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால் உடனடியாக அது தொடர்பில் ஆராய்ந்து இந்தக்கிராமங்களை நாங்கள் முடியுமான வரை தமிழ் மக்களிடத்தில் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழ், முஸ்லிம் தலைமைகள் மத்தியிலே இருக்கிறது.

அதே போன்று பல முஸ்லிம் கிராமங்கள் தமிழ் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்புக்களினாலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.எனவே முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் இவ் அறிக்கையினை வெளியிட்டிருப்பார் என நினைக்கவில்லை.

ஆகவே முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மதிப்பையும்,  மரியாதையும் முன்னிட்டு உடனடியாக இந்த 300 தமிழ் கிராமங்கள் எந்த மாவட்டத்தில் எங்குள்ள தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது என்ற விபரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்துமாறு உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் மீது நான் என்றும் மரியாதை வைத்துள்ளேன்,  உங்களின் கருத்தை நான் மதிக்கின்றேன். எனவே இது தொடர்பில் ஆராய்ந்து முஸ்லிம் தலைமைகள் இறுதித்தீர்மானத்தினை எடுக்கவேண்டியுள்ளதால் உடனடியாக தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்ட விபரத்தினை வெளியிடுமாறு முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. விக்கிக்கு தமிழர்களின் வாக்கு தேவை அதனால் இனவாதம் பேசுகிரார்.இவரை கனக்கெடுக்க தேவையில்லை.

    ReplyDelete
  2. நிச்சயமாக இதற்கான விளக்கத்தை “தலைவர் விக்கி” ஐயா அவர்கள் தந்தே ஆக வேண்டும் என்பதை மிகப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  3. எழுதிவைத்து வாசித்து அரசியல் செய்யும் இந்த ஐயாவுக்கு நட்டு கிறியிட்டு.300 வேணாம். 3 கிராமத்தின் பெயரை சொல்லட்டுமே.

    ReplyDelete
  4. எழுதிவைத்து வாசித்து அரசியல் செய்யும் இந்த ஐயாவுக்கு நட்டு கிறியிட்டு.300 வேணாம். 3 கிராமத்தின் பெயரை சொல்லட்டுமே.

    ReplyDelete
  5. Mr Vikki, you should give us the evidence. he speaking racism as to get votes from Tamil peoples.

    ReplyDelete
  6. "அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று அறிவிழந்து தடுமாற்றமடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உன் சிந்தையிலெடுத்துச் சீர்தூக்கிப் பார்" என்று ஒரு வசனம் சோக்ரட்டீஸ் நாடகத்தில் வருகின்றது. ஐயா, முன்னாள் நீதிபதி அவர்களே நீங்கள் மேற்கோள் காட்ட அறிவிழந்த அத்துரலிய தான் அகப்பட்டாரோ? எவ்வளவு பெரிய அபத்தம் ஐயா!

    ReplyDelete

Powered by Blogger.