Header Ads



முஸ்லீம்களின் பொருளாதாரத்தை வீழ்த்த முயற்சி, புலிகளின் அக்கிரமத்தை ஞாகபமூட்டும் கல்முனை மேயர்

முஸ்லீம்களின் வியாபாரத்தை அழிக்கவே கல்முனை மாநகரத்திற்கு அடிக்கடி   புலிகள் தீ வைத்தனர்  என   கல்முனை  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

சனிக்கிழமை (13) இரவு 9 மணியளவில்  மருதமுனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் பொதுநூலக கேட்போர் கூடத்தில் வர்த்தக சமூகத்தினர் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பாக ஆராயும் நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது கருத்தில்

 முஸ்லீம் மக்களின் வியாபாரங்கள் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் மந்த கதியிலே நடைபெறுவதாக   கவலை தெரிவிக்கின்றனர்.இதற்கு காரணம் அதன் பின்னர்  இனங்களுக்கிடையிலான சந்தேக பார்வைகளும் தேவையற்ற வதந்திகளுமாகும்.தற்போது முஸ்லீம்களின் வியாபாரத்தில் ஏனைய சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பதில்லை.

அதே போன்று மற்றைய சமூகத்தினரின்  வியாபாரத்தில் முஸ்லீம்கள்  பங்கேற்க தயங்குகின்றார்கள்.சூழ்நிலை அப்படி போய்க்கொண்டு இருக்கின்றது.இதற்கு காரணம் கடந்த கால தாக்குதல்கள்  ஆகும்.ஒரு காலத்தில் முஸ்லீம்கள் மாத்திரம்  மேற்கொண்ட உடுதுணி வியாபாரம் இன்று   சகோதர இனத்தை சார்ந்தவர்கள்  முன்னெடுத்து தற்போது  அபிவிருத்தி அடைகின்றனர்.கடந்த காலங்களில் முஸ்லீம்களின் இவ்வாறான பாரிய  வியாபாரங்களை தடுப்பதற்காக கல்முனை மாநகரில்  பல தடவைகள்  புலிகள் எரித்தமை வரலாறு.

அதை எரித்தமைக்கான காரணம் முஸ்லீம் மக்களுடன் ஏற்பட்ட கோபம் அல்ல.புலிகளுக்கு பலமாகவும் எதிராகவும் முஸ்லீம்களின் பொருளாதாரம் வந்து விடும் என்பதற்காக வன்முனையை கட்டவிழ்த்து  தொடர்ந்து எரித்தனர்.இப்போது அவ்வாறில்லை.எனினும் முஸ்லீம்களின் பொருளாதாரத்தை வீழ்த்த முயற்சிகள் நடைபெறுகின்றன.இதில் 1915 ஆண்டு கலவரம் 1815 ஆண்டு கலவரம் மற்றும் 2015 முன்னரும் பின்னரும் மீண்டும் அந்த சூழல் உருவாக்கப்படுகின்றது. 

தற்போது இனவாதத்தின் ஊடாக முஸ்லீம்களின் பொருளாதாரத்தை குறிவைத்து அழித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதனை தடுப்பதற்கு என்ன திட்டங்களை நாம் வகுக்கலாம்.எவ்வாறான மூலோபாயங்களை கொண்டு இதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.அதிலிருந்து மீண்டு எழுவதற்கான மூலோபாயங்கள் என்ன என்பது நம்முள் எழுகின்ற கேள்வியாகும்.

இதனாலேயே தற்போது தமிழர்களும் வர்த்தக சங்கம் ஒன்றினை செயற்படுத்தி கொண்டு இருக்கின்றனர்.எனவே முஸ்லீம்களின் வியாபாரம் தமிழர்களின் வியாபாரம் என பிரிவினை தொடருமானால் எதிர்காலத்தில் பல மோசமான சம்பங்களை சந்திக்க நேரிடும் என்றார்.

- பாறுக் ஷிஹான் -

2 comments:

  1. இப்போ யார் உங்கள் வியாபாரத்துக்கு தடையாக உள்ளார்கள். சிங்களவர் பெயரை உச்சரிக்கவே திராணி இல்லை. நீ எல்லாம் ஒரு மேயர்.

    ReplyDelete
  2. When Muslim moves to north and east send enough land with them as well.

    ReplyDelete

Powered by Blogger.