Header Ads



இலங்கைக்கு வருவதற்கு, மறுப்புத் தெரிவித்தார் கனடா பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கனேடிய அரச தலைவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜதந்திர ரீதியில் இந்த கோரிக்கை விடுத்திருந்ததுடன் கனேடிய அரசாங்கமும் ராஜதந்திர ரீதியில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நாட்டின் அரச தலைவர், மற்றுமொரு நாட்டுடன் நெருங்கிய உறவுகளை பேணும் நோக்கில், மற்றைய நாட்டின் அரச தலைவருக்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்கான அழைப்பை விடுப்பதே வழக்கம்.

இதற்கான தகவல் பரிமாற்றங்கள் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது அல்லது திகதிகள் சம்பந்தமான பிரச்சினை இருந்தால், அழைப்பு விடுத்த தலைவரை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுப்பது வழமையான நடைமுறை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை கனேடிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் தமது நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனை அமுல்படுத்த காட்டிய ஆர்வமான அணுமுறை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் காட்டிய அனுபவமற்ற தன்மை ஆகியனவே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறியமை உட்பட பல காரணங்கள் இதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.

கனடாவுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலேயே ஜனாதிபதி, கனேடிய அரச தலைவருக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 comments:

  1. Sri Lanka வில் Muslim களுக்கு எதிராக நிகழும் அனைத்து இனவாத நடவடிக்கைகளும் இந்த உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது,அதற்கான முதல் பதிலடி கனடாவில் ஆரம்பம்.

    ReplyDelete
  2. கனடியப்பிரதமர் திரு ஜஸ்டின் ஒரு இளைய தலைமுறையின் முன்மாதிரியான தலைவர், இனவாதமில்லாத கௌரவ குடும்பத்தில் பிறந்த, ஒருகௌரவமான முன்னாள் கனடியப்பிரதமரின் மகன், கனடாவில் ஜனநாயக சட்டத்தின் ஆட்ச்சியே தவிர தனிமனித ஆட்ச்சிக்கு இடமில்லை, கனடாவில் சமய பேச்சு அரசியல் தனிமனித சுதந்திரம் மிகஉயர்ந்தநிலையில் பேணப்படுகிறது, இதில் எந்தப்பண்பு இலங்கையில் இருக்கின்றது கனடியப்பிரதமரைக் கர்வதட்கு, அல்லது இங்கிருந்து எதைக்கற்றுக்கொள்ள அவர்வரவேண்டும்? நல்லமுடிவு

    ReplyDelete
  3. ISIS பயத்தில் வரவில்லை

    ReplyDelete

Powered by Blogger.