Header Ads



ஷாபி வழக்கில், நீதவான் நடந்துகொண்ட விதம் - விசாரிக்குமாறு முறைப்பாடு

குருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான வழக்கில் குருநாகல் நீதவான் நடந்துகொண்ட விதம் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து கோரிக்கை விடுத்துள்ளது.

குருநாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் குருநாகல் நீதவானின் மனைவிமாரும் இதே வைத்தியசாலையில் மருத்துவர்களாக பணியாற்றுவதாலும் – நீதிமன்றத்தில் வைத்தியசாலை பணிப்பாளர் அளித்த சாட்சியத்தை மன்றில் பதிவிட வேண்டாமென நீதவான் தரப்பில் இருந்து சொல்லப்பட்டதா என்பது பற்றியும் ஆணைக்குழு ஆராய வேண்டுமென ஊடகவியலாளர் சங்கம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

இதேவேளை டாக்டர் ஷாபி குறித்து மேற்கொள்ளும் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட பிரிவிடம் ஒப்படைக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.