Header Ads



பிறந்த குழந்தையை பார்க்கப்போன போது ''இன்னுமொரு சஹ்ரான் பிறந்துள்ளான்'' எனச்சொன்ன தாதி

நாங்கள் தலை நிமிர்ந்து கௌரவமாக பல இடங்களுக்கு செல்கின்ற நேரத்திலும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலை காணப்படுகிறது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவானவர்களுக்கான உரித்து பத்திரங்களை வழங்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எவ்வாறான சவால்கள் வந்தாலும் எங்களது சமுதாயத்தை எல்லா வகையிலும் வலுவூட்டுவது எங்களது கடமையாகும்.

இப்போது பொருளாதார ரீதியாக மாத்திரமல்ல, பொருளாதார ரீதியாக இருந்தவர்களின் பொருள் எல்லாவற்றுக்கும் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. உடமைகள், உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை.

நாங்கள் தலை நிமிர்ந்து கௌரவமாக பல இடங்களுக்கு செல்கின்ற நேரத்தில், வியாபாரங்களை மேற்கொள்ளும் போது, வைத்தியசாலை மற்றும் ஏனைய விடயங்களுக்கு போகும் நேரத்தில் எங்களை ஏதோவொரு அடிப்படையில் பேசுவதும், சந்தேக கண்ணோடு பார்ப்பதுமாக இருக்கின்றது.

அண்மையில் வைத்தியசாலை ஒன்றில் பிள்ளை பிறந்துள்ளதை பார்ப்பதற்கு அவருடைய மாமனார் போகும் போது தாதியர் ஒருவர் கூறினார்.

''இன்னுமொரு சஹ்ரான் பிறந்துள்ளான்'' என்று. இவ்வாறு சொல்லுகின்ற அளவுக்கு எமது நிலைமை உள்ளது. இவ்வாறு முகங்கொடுக்கக்கூடிய நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.

உங்களது பிரதிநிதிகளாக எங்கெல்லாம் உங்களது குரல்களை, பிரச்சினைகளை எந்த அடிப்படையில் முகங்கொடுக்க வெண்டுமோ அந்த கடமையை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.