Header Ads



"புண்ணிய பூமியிலிருந்து, புனித மக்காவுக்கு" - கனடாவில் உயன்வத்தை ரொஷான் இஸ்மாயிலின் நூல் வெளியீடு

 மாவனல்லை உயன்வத்தையைச் சேர்ந்த அல்ஹாஜ் ரொஷான் இஸ்மாயில் அவர்களின் புண்ணிய பூமியிலிருந்து.. புனித மக்காவுக்கு... என்ற நூல் ஜூலை 14ம் திகதி வான்கூவர் ட்ரவுட் லேக் கொம்முனிட்டி சென்ரர் இல் நடைபெற்றது.

 பன்னூலாசிரியர் டாக்டர் நஜிமுதீன் ஷிஹாப்தீன் அவர்களின் தலைமையில் சிறுமி ராயிதா ரொஷானின் கிராத்துடன் ஆரம்பமான இவ்விழாவை இலங்கை வானொலியில் பணியாற்றிய திருமதி வர்ஷா முஸ்தபா தொகுத்து வழங்கினார்.

  நூல் பதாகையை நூலாசிரியர் அல்ஹாஜ் ரொஷான் இஸ்மாயில் திரை நீக்கம் செய்ய நூலாசிரியருக்காக நண்பர்களான சகோதரர்கள் பத்தி, பெரோஸ், சித்திக் ஆகியோரால் எழுதப்பட்ட கவிதை பதாகையை பொறியியலாளர் அர்ஸ் சித்தீக் அவர்களால் திரை நீக்கம் செய்யப்பட தொகுப்பாளினி திருமதி வர்ஷா முஸ்தபாவினால் அந்த கவிதை வாசிக்கப்பட்டது.

  தலைமை உரையை நிகழ்த்திய டாக்டர் நஜிமுதீன் ஒரு புத்தகம் வெளியிடுவதன் கடினத்தன்மையை எடுத்துக் கூறினார்.    நூலாசிரியரின் தமிழாசிரியர் கலையொளி எம்.எச்.எம் அஸ்ஹர் காணொளி மூலம் ஆசியுரரை வழங்கினார். சிறப்பு பேச்சாளராக இலங்கை தபால் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலிம் அவர்கள் காணொளி மூலம் உரையாற்றினார். அவர் தனதுரையில் இப்படியான பல புத்தகங்கள் வெளிவர வேண்டும். தான் அமைச்சராக பதவியயேற்ற போது ஒன்பது இலட்சத்துக்கும் அதிகமாக இருந்த ஹஜ் கட்டணம் நான்கரை இலட்சமாக குறைத்ததாக குறிப்பிட்டார். சில முகவர்கள் அதிக கட்டணம் அறவிட்டதால் தண்டிக்கப்பட்டதாகவும் அமேரிக்க டாலர் விலையேற்றத்தால் இவ்வருடம் ஒரு இலட்சம் ரூபா அளவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறினார்.

  தொடர்ந்து நூலாசிரியருக்கு சகோதரர் பத்தி ஸவாஹிர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் அதைத் தொடர்ந்து நூல் விளக்கவுரை வழங்கிய சகோதரர் ஹிஸ்புல் ரஹ்மான் நூலில் உள்ள சாதக பாதகங்களை விளக்கி உரையாற்றினார். முதல் பிரதியை டாக்டர் நஜிமுதீன் அவர்களால் பொறியியலாளர் அர்ஸ் சித்தீக் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

zacky junaid, Vancouver, Canada.


No comments

Powered by Blogger.