Header Ads



மெளலவி அலியார் பிணையில் விடுதலை

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் காத்­தான்­குடி இஸ்­லா­மிய வழி­காட்டல் நிலை­யத்தின் தலை­வ­ரு­மான மௌலவி ஏ.எம்.அலியார் றியாதி நேற்­றைய -10- தினம் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலைத் தொடர்ந்து கடந்த 10.05.2019 அன்று சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே அவரை நேற்­றைய தினம் மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் பிணையில் விடு­தலை செய்தார்.

ஐந்து இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­யிலும் 25,000 ரூபா ரொக்கப் பிணை­யிலும் இவர் விடு­தலை செய்­யப்­பட்­ட­துடன் வெளி­நாடு செல்­லவும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நீதி­மன்­றத்­துக்கு உரிய திக­தியில் சமு­க­ம­ளிக்க வேண்­டு­மெ­னவும் நீதவான் உத்­த­ர­விட்­டுள்ளார். இது தொடர்­பான அடுத்த வழக்கு 19.07.2019 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­குடி ஜாமி­யத்துல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரியின் தலை­வரும் காத்­தான்­குடி இஸ்­லா­மிய வழி­காட்டல் நிலை­யத்தின் தலை­வரும் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரு­மான ஏ.எம்.அலியார் றியாதி 10.05.2019 அன்று சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு கடந்த இரண்டு மாதங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் தொடர்­பான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வந்­தன.

இந்த நிலையில் இவ­ருக்கு பிணை கோரி மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்­றத்தில் 10.07.2019 நேற்று புதன்­கி­ழமை முன்­வைக்­கப்­பட்ட பிணை மனு­வினை விசா­ரணை செய்த மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான், சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன் மேற்படி நிபந்தனைகளுடன் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்


3 comments:

  1. Alhamthulillah Allah will give good health and long life to him

    ReplyDelete
  2. YAHUDI NASARAKKALIN PANATHUKKU,
    AATAAM PODUHINRA ALIARAAAAA.?

    ReplyDelete
  3. Halo Imthiyas don't blame baseless? he is genuine and clean hand, did all well for humanity...

    ReplyDelete

Powered by Blogger.