July 15, 2019

அஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...?


முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­த­லை­வர்­களும் கலந்­து­ரை­யாடித் தீர்த்­துக்­கொள்வோம். இது மதத்­த­லை­வர்­களின் பொறுப்­பாகும். இதற்­கான பேச்­சு­வார்த்­தை­களைத் தொடர்ந்தும் நடத்­துவோம். சந்­தே­கங்­களைத் தீர்த்­துக்­கொள்வோம் என அஸ்­கி­ரிய பீடா­தி­பதி வர­கா­கொட ஞான­ர­தன மகா­நா­யக்­க­தேரர் தன்னைச் சந்­தித்த உல­மாக்­க­ளிடம் தெரி­வித்தார்.

உலமா சபையின் பிர­தி­நி­திகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை கண்டி அஸ்­கி­ரிய பீடா­தி­பதி வர­கா­கொட ஞான­ர­தன மகா­நா­யக்க தேரரை கண்­டியில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள். நாட்டில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களையடுத்து முஸ்லிம் சமூகம் சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தா­கவும், பல்­வேறு சவால்­க­ளுக்குட் படுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், ஒரு குறிப்­பிட்ட குழு­வி­னரே இந்த கொடூர செயலில் ஈடு­பட்­ட­தா­கவும் இதற்கு முஸ்லிம் சமூகம் பொறுப்­பா­ன­தல்ல எனவும் உல­மாக்கள் அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேர­ரிடம் எடுத்து விளக்­கி­னார்கள். அப்­போதே அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் இவ்­வாறு கூறினார்.

இந்தச் சந்­திப்­பினை நாவின்ன ரஜ­ம­கா­வி­காரை விகா­ரா­தி­பதி பரா­முர நன்­தா­னந்த தேரர் ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

அங்கு உல­மாக்கள் அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­யிடம் கருத்து தெரி­விக்­கையில்;

ஒரு­சில குறிப்­பிட்ட தேரர்கள் உலமா சபை­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தக்­கூ­டாது எனத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் அப்­ப­டி­யா­ன­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­து­வ­தற்கு நாம் விரும்­ப­வில்லை. அஸ்­கி­ரிய, மல்­வத்து மற்றும் ராமன்ய நிகாய தலை­வர்­க­ளு­ட­னேயே பேச்­சு­வார்த்­தைகள் நடத்தி தற்­போது நிலவும் பிரச்­சினை களுக்கும் சந்­தே­கங்­க­ளுக்கும் தீர்­வு­காண விரும்­பு­கிறோம். இன்று முஸ்­லிம்­களை தவ­றாக விமர்­சிக்­கி­றார்கள். தீவி­ர­வா­தி­க­ளாக சந்­தே­கிக்­கி­றார்கள். இவை நிறுத்­தப்­பட வேண்டும் என வேண்­டிக்­கொண்­டார்கள்.

குர்ஆன் மொழி­பெ­யர்ப்புப் பிரதி அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­துடன் குர்ஆன் மற்றும் சில ஆயத்­து­க­ளுக்­கான தெளி­வு­களும் வழங்­கப்­பட்­டன. தேசிய ஒற்­றுமை, இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம் தொடர்­பாக உலமா சபை வெளி­யிட்ட சிங்­கள மொழி­யி­லான நூல்­களும் கைய­ளிக்­கப்­பட்­டன.

அஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­வ­தற்கு உல­மாக்கள் தொப்­பியைக் கழற்­றிய பின்பு அனு­ம­திக்­கப்­பட்­டனர். அது சம்­பி­ர­தா­ய­மென்று தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­திப்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உப செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம், உப தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன், கண்டி மாவட்ட ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உப தலைவர் பஸ்ருல் ரஹ்மான் மற்றும் உறுப்­பி­னர்­க­ளான அஷ்ஷெய்க் பாசில் பாரூக், அஷ்ஷெய்க் பரீத், அஷ்ஷெய்க் கபீர், அஷ்ஷெய்க் லரீப், அஷ்ஷெய்க் ஹைதர் அலி, அஷ்ஷெய்க் ஹாசிம் ஷுரி ஆகியோர் கலந்து கொண்­டனர்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

18 கருத்துரைகள்:

காத்தான்குடியில் வீதி மரங்கள் உள்ளிட்ட அரபிய அடையாளங்களை அகற்றுமாறு கண்டி பௌத்தபீடம் உத்தரவிடவேண்டும்

கிழக்கில் அரபு எழுத்துக்கள், மரங்கள், பூனானை கம்பஸ், அரபு கல்லூரிகள், மதராஸ் ஆகினபற்றிய முக்கிய ஒழுங்குவிதிகளை மகாசங்கம் அறிவிக்க வேண்டும்

Shame on you gentlemens. Why do we give up our own identifications just because of these kind of RACISTS.

முஸ்லீம் சமூகத்தையே கேவலப்படுத்தி கேளிக்கையாகிய இந்த கேடுகெட்ட நாய்களுக்கு ஒரு அஷ் ஷேக் பட்டம் தேவையா?

நீங்கள் மத மாறினால் இதைவிட நல்லா இருக்குமே அதாவது பிரச்சினை லேசாக முடிந்து விடும்

இறைவனின் சோதனை வெகு தூரத்தில் இல்ல.

Shame on All of them...

இவனுகளுக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுக்க யாரும் இல்லையா?

Its not funny at all. We want justice, peace and harmony among our society and the country as well. We must be ready for it under any cost. If their tradition is to remove cap before entering their shrine; its OK. How many Ulamas we can see at road without caps. Do not take seriously whichever not important at the moment.

Mr Ash sheikh shihabdeen
இப்ப சரியா ?
இப்ப சந்தோஷமா ?
அவர்களுக்கு பொருத்தமில்லை என்று சொல்ல நீங்கள் தகுதியானவரா?
யார் நாய் என்று காலம் பதில் சொல்லும்...
தயவு செய்து உங்களது பரம்பரையை அல்லாஹ்வின் கோபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்...

லாயிலாஹ இல்லல்லாஹ் இவ்வாறான செய்திகள் வரும்போது தீர விசாரித்து நல்லெண்ணங்களுடன் நாம் பின்னூட்டங்களை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்தாகும். இந்த அளவு கீழ்த்தரமாக இந்த சமூகத்தின் உயர் சபையில் இருப்பவர்களை விமர்சித்து விட்டு நாம் என்ன செய்யப்போகிறோம்...? குழப்பமான காலங்களில் மிகவும் நிதானமாக மற்றவர்களின் மனங்களை உடைத்துக்கொள்ளாத விதத்தில் நடந்துகொள்ள வேண்டிய நாம் இந்தக் காலத்திலும் இவ்வாரான அடிப்படையில் கருத்துச்சொன்னால் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக சிந்கும் முதல் வர்க்கத்தினராக ஆகிவிடுவோம் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

தொப்பி முஸ்லிம்களின் சுன்நா கிடையாதே.... அல்ஹம்துலில்லாஹ் சுன்னதான தாடியுடன் போயிருக்கிறார்கள் தானே

Mr unknown: உங்கள் சொந்தத்தபெயரில் எழுத முதுகெலும்பு இல்லாத நீங்கள் ஐந்து சதம் கூட பெறுமதி இல்லாத இந்த கேளிக்கையான பட்டங்களை தயவுசெய்து எனக்கு சூட்ட வேண்டாம்.

தனியாக எங்கேயும் எதையும் கழட்டிவிட்டு போகட்டும். சமுகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் போது சீரழிக்கவேண்டாம்.

Mr. Shihabdeen. can you explain what have you done to solve the current situation. All the people talk non sense here, What have you done to the society to condemn them. fear Allah if you have proper faith. Jaffna Muslim have to take response for this kind of misleading heading. please be responsible when you publish any news.

Mr. Asad: When communal violence were imposed from Mawanalla to Minuwangoda on our Muslim Community, what your ACJU has done to stop those barbarism or at least, have you taken any precautions? Having degraded the dignity of our community for years and years, now, are you asking me what I have done? But I know very well you can do one thing better, that’s how to sell our community for your survival. Please let us know what happened to the 10 pearch of Colombo land donated by MR. You have to fear Allah. What happened to Saddam and Gadhafi might happen to you all.


If I have the authority to represent our Muslim Community, I’m sure I can serve or do things better than ACJU. Because I believe “PREVENTION IS BETTER THAN CURE “

அபு நுஹா சொல்லுவதும் சரிதான் தொப்பி ஒன்ரும் விஷயம் இல்லை

Post a comment