Header Ads



முஸ்லிம்கள் தற்போது காயப்பட்டிருக்கிறார்கள், பௌத்தர்களை இணைத்­துக்­கொண்டு மேலும் காயப்­ப­டுத்த நாங்கள் விரும்­ப­வில்லை

முஸ்லிம் மக்கள் காயப்­பட்­டி­ருக்கும் நிலையில் கல்­முனை பிர­தேச செய­லக விவ­கா­ரத்தில் மூன்றாம் தரப்­பி­னரை இணைத்­துக்­கொண்டு மேலும் காயப்­ப­டுத்த விரும்­ப­மாட்டோம். அத்­துடன் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்­வு­காண முன்­வ­ர­வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உறுப்­பினர் ஸ்ரீதரன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில்  அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு மாத­கா­லத்­துக்கு நீடித்­துக்­கொள்ளும் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உரை­யாற்­று­கையில், ஒழுங்கு பிரச்­சினை ஒன்றை முன்­வைத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

ஹரீஸ் எம்.பி. தெரி­விக்­கையில்,கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் தொடர்­பாக எழுந்­தி­ருக்கும் பிரச்­சி­னையை எல்லை நிர்­ணயம் மேற்­கொண்டு தீர்த்­துக்­கொள்ள இணக்­கப்­பாடு எட்­டப்­பட்ட நிலையில், அங்கு பெரும்­பான்மை இன மத­கு­ரு­மார்­களை இணைத்­துக்­கொண்டு உண்­ணா­வி­ர­த­மி­ருந்து அதனை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். சர்­வ­தேச நாடுகள் மற்றும் இந்­தி­யாவின் வற்­பு­றுத்­த­லினால் அன்று இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் செய்­து­கொள்­ளப்­பட்­டது.

அத­னால்தான் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட்­டன. அதனால் பல ஆண்­டு­காலம் முஸ்லிம் மக்கள் பாதிக்­கப்­பட்டு வந்­தனர். பின்னர் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட நீதி­மன்ற நட­வ­டிக்­கையில் வடக்கு கிழக்கு இணைப்பு சட்­ட­வி­ரோ­த­மெனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு பிரிக்­கப்­பட்­டது.

அன்று விடு­த­லைப்­பு­லி­களின் யுத்தம் கார­ண­மாக இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­ட­மு­டி­யாத நிலையே முஸ்லிம் மக்­க­ளுக்கு இருந்­தது. தற்­போது கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் விவ­கா­ரத்தை முஸ்­லிம்கள் பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு முகம்­கொ­டுத்து பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையை பயன்­ப­டுத்­திக்­கொண்டு தெற்கில் இருக்கும் பெரும்­பான்மை இன மத­கு­ரு­மார்­களை இணைத்­துக்­கொண்டு இதனை சாதித்­துக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர்.

இது மிகவும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும். என்­றாலும் எதிர்­கா­லத்தில் இந்த விட­யத்­துக்கு எதி­ராக வழக்கு தொடுக்­கப்­பட்டால் கல்­முனை விவ­கா­ரமும் சட்­ட­வி­ரோதம் என்ற தீர்ப்பே கிடைக்கும் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது என்றார்.

இதன்­போது குறுக்­கிட்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உறுப்­பினர் ஸ்ரீதரன் எம்.பி., வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் விடு­த­லைப்­பு­லி­களை சம்­பந்­தப்­ப­டுத்­து­வது தவ­றாகும். நிர்­வாக விட­யத்தில் அவர்கள் ஒரு­போதும் சம்­பந்­தப்­ப­ட­வில்லை.

அத்­துடன் கல்­முனை விவ­கா­ரத்தில் தமிழ், முஸ்லிம் மக்­களின் உறவு பாதிக்­கா­த­வ­கையில் நீங்கள் விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.

அத்­துடன் இந்த விவ­கா­ரத்தை நாங்கள் பகி­ரங்­க­மாக விவா­தித்­துக்­கொள்­ளாமல் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை மூலம் சுமு­க­மான தீர்­வுக்­கு­வ­ர­வேண்டும்.

மேலும், முஸ்லிம் மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் இந்தக் காலத்தில் பெரும்­பான்மை இனத்­த­வர்­களை இணைத்­துக்­கொண்டு மேலும் காயப்­ப­டுத்த நாங்கள் விரும்­ப­மாட்டோம்.

அந்த செயலை அனு­ம­திக்­கவும் மாட்டோம் என்றார். இதன்­போது ஹரீஸ் எம்.பி. அதற்கு பதிலளிக்கும்வகையில் தெரிவிக்கையில், மூன்றாம் சக்தி இதில் தலையிடாமல் எங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளத் தயார்.

அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா முன்வரவேண்டும். இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும் என்றார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

5 comments:

  1. சரியான கருத்துக்கள். நாங்கள் சின்ன ஒரு அப்பத்தை வைத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கும் பங்கு பிரிப்பா? இதில் குருமாருக்கு என்ன வேலை இருக்கின்றது. அவர்கள் தமது வாலை ஆட்ட நாங்கள்தான் இடம் கொடுக்கின்றோம். “தமிழர்களுக்கு” குருமார் உதவ வேண்டும் என்றால் எத்தனையோ இடர்கள் குடும்பக் கவலைகள் இருக்கின்றன. அரசுடன் பேசி அவற்றை முடித்துக் கொடுக்கலாம் அல்லவா? கல்லூரிகளில் பல்கலையில் கற்கும் எத்தனையோ மாணவர்கள் இன்னமும் தமது தந்தைமாரைக் கண்டுகொள்ள முடியவில்லை. எத்தனை பேருக்கு எப்படியெல்லாமோ மன்னிப்பு வழங்கும் இந்த அரசுக்கு இந்த ஏழை மக்களுக்கு அதி கூடிய நிபந்தனைகளுடனாவது உதவினால் என்ன குடியா முழுகிப் போய்விடும். இங்கு வாய்ச்சவடால்களுக்கு இடம் இல்லை. செயற்பாடே மிக முக்கியம்.

    ReplyDelete
  2. இணக்கத் தீர்வுக்கு சாத்தியம் ஏற்பட்டவேணும் என்பதே அனைவரதும் பிரார்த்தனையாகும்.

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் ஒருபோதும் காயப்பட வில்லை, அவர்களுக்கு எப்போதும் அடிவாங்கித்தான் பழக்கம். என்னும் வாங்குவார்கள்.

    அதனால பிக்குமார்களின் ஆதரவு கிழக்கு தமிழர்களுக்கு தேவை.

    வன்னி தமிழ்ர்களே, இந்த வங்குரோந்து ஶ்ரீதரனை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்புங்கள் .

    ReplyDelete
  4. ஆனால் அவர்கள் எங்களை தேவாலயங்களில் குண்டு வைத்து கொல்லலாம். நீதிக்காக நாங்கள் போராடினால் அது அவர்களை காயப்படுத்துவதா. நீங்கள் இன்னும் இந்த சோனிகளை நம்பிக்கொண்டு இருங்கள். அவன் இறுதியாக குனிய வச்சு போட்டு ஆப்படிப்பான். ஏற்கனவே கிழக்கு தமிழர்கள் பல துன்பங்களை இந்த சோனிகளால் அனுபவித்து வருகின்றார்கள். நீங்கள் கிளிநொச்சியில் இருந்து பார்ப்பதை விட ஒரு கல்முனை தமிழனாக பார்த்தால் இதட்கு விடை தெரியும்.

    ReplyDelete
  5. ஹலோ தம்பிமாரே! அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியுமா. தலைவர் சம்பந்தர் ஐயாவுக்கு திருமலை மாவட்டத்தில் ஒரு தனி முஸ்லிம் கிராமமே தனித்து 100% வாக்களித்து வருகின்றனர். இந்நிகழ்வு நேற்று முந்த நாள் ஏற்பட்ட தொடர்பு அல்ல. இது அவர்களது முப்பாட்டன் காலத்திலிருந்து அரும்பிய நிகழ்வு.

    ReplyDelete

Powered by Blogger.